என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • துர்நாற்றம் வீசி வருகிறது
    • பெற்றோர்கள் புகார்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    மேலும் புதிய மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருவதால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பபோதுமான அளவிற்கு கழிப்பறை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது.

    தற்போது மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் முறை யாகபராமரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் மாணவர்கள் கழிப்பறை செல்லவே சிரமப்பட்டு வருவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    கழிப்பறைகள் சுகா த தாரமற்ற முறையில் உள்ளதால் மாணவர்களின் ஆரோக்கியம் க் கேள்விக்குறியாக இருப்பதாகவும், தொற்றுநோய் பரவுவதற்கு முன்னர் கழிவறையை சுத்தம் செய்து பராமரிக்க சம்பந்தப் 31 பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்களின் சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விபரீத முடிவு
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி தனுஸ்ரீ (வயது 20).வீட்டில் தனியாக இருந்தபோது தனுஸ்ரீ நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசாரின் விசாரணையில் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • கழிவறை சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
    • சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து திருத் தணி, திருப்பதி, அரக்கோணம், சித்தூர், பள்ளிப்பட்டு, ஆற் காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் சென்று வருகின்றனர்.

    மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சோளிங்கர் பஸ் நிலைய வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கழிவறை கட்டப்பட்டது.

    அந்தக் கழிவறையை இன்று வரை திறக்கவில்லை. எனவே மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு கழிவறையை திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அம்ரித் மகோத்சவ் விழா
    • பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அரக்கோணம்:

    தெற்கு ரெயில்வே சார்பில் இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திரதினத்தை அம்ரித் மகோத்சவ் விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்திய நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஒற்றுமை ஓட்டம் நிகழ்ச்சி அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் நடைபெற்றது.

    ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய ஓட்டத்தினை அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் உதவி ஆணையர் ஏ.கே. பெரிட் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அரக்கோணம் ரெயில் நிலையம், பழைய பஸ் நிலையம், பழனிப்பேட்டை, எஸ்.ஆர்.கேட்., டி.பி.ரோடு வழியாக சென்று மீண்டும் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தை வந்தடைந்தனர்.

    ரெயில்வே பாதுகாப்புப் படைஇன்ஸ்பெக்டர் உஸ்மான் தலைமையிலான போலீசார் ஒற்றுமைக்கான ஓட்டம் என்ற தலைப்பினை கொண்ட பேனரை ஏந்தியவாறு சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் சென்றனர். இதில் பாதுகாப்பு படை போலீசார், பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

    • கேமரா, எச்சரிக்கை மணி உடைக்கப்பட்டிருந்தன.
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த 25-ந் தேதி இரவு பூஜைகளை முடித்து விட்டு கோவிலை அர்ச்சகர் பூட்டி கொண்டு சென்றுவிட் டார். நேற்று காலை வழக்கம்போல் கோவிலை திறக்க அர்ச்சகர் சென்றார்.

    அப்போது கோவிலில் பூட்டு, மூலவர் சன்னதி எதிரில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. பணம் எதுவும் திருட்டுப்போக வில்லை. கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை மணி ஆகியவை உடைக்கப்பட்டிருந்தன.கோவில் பூஜை அறையில் உள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

    இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ஏகவள்ளி வாலாஜா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக் குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் செல்வி சம்பவ இடத்தில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தார்.

    • அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை.
    • 30-ந் தேதி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சருமான காந்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு தமிழக அரசின் பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைத்திட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை புரிய உள்ளார். நாளை 28ந் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி அளவில் வாலாஜா டோல்கேட் வருகிறார்.

    அவருக்கு மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகிய எனது தலைமையில் மாபெரும் எழுச்சிமிகு வரவேற்பு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பாக அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே திராவிட மாடல் ஆட்சிக் காணும் தமிழக முதல்வருக்கு சிறப்பாக வரவேற்க மாவட்ட கழக நிர்வாகிகள், நகர, ஒன்றிய செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி, மாணவரணி, மகளிரணி, இலக்கிய அணி, தொண்டரணி, வழக்கறிஞரணி, விவசாய அணி, வர்த்தகரணி, நெசவாளர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, சிறுபான்மை நலப்பிரிவு, மருத்துவரணி, பொறியாளர் அணி, விவசாய தொழிலாளரணி, மகளிர் தொண்டரணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணியினர், தொ.மு.ச மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் 30-ந் தேதி வியாழக்கிழமை அன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.

    எனவே பொதுமக்களும், பயனாளிகள் பெரும் திரளாக பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருநங்கைகள் அளித்த புகார் மனு மீது நேற்று பிற்பகல் வரை நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மேலும் திருநங்கை ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் தாலுகா போலீசாரிடம் அரக்கோணம் பகுதி திருநங்கைகள் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளனர்.

    இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் நேற்று பிற்பகல் வரை இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் திருநங்கை ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திருநங்கைகள் தங்களுடைய பாணியில் தங்கள் ஆதங்கத்தை வெளிபடுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போயினர். செய்வதறியாமல் வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டனர். இதை கண்ட பொதுமக்கள் திருநங்கைகளின் செயல்பாடுகளை கண்டித்தனர்.

    இதனால் அரக்கோணம்- திருப்பதி நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் நடைபெற்று முடிவதற்குள் திருவள்ளூர் மாவட்ட திருநங்கைகள் அரக்கோணத்தை சேர்ந்த திருநங்கைகள் மீது புகார் அளித்தனர்.

    இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேசன் இரு குழுவையும் தன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் 5 மணி நேரம் நீடித்தது.

    • பொதுமக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் வீட்டில் இருந்த பொருட்களுடன் வீதியில் நின்றனர்.
    • உண்ண உணவும், இருக்க இடமும் எங்களுக்கு எப்படி கிடைக்கும் என்று அதிகாரிகளிடம் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த மேல் விஷாரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சாதிக் பாஷா நகர் உள்ளது. இங்கு 353 குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வந்தனர்.

    பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடுகள் கட்டி உள்ளதால் அதனை அகற்ற கோரி கடந்த 30.3 2022 அன்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது 20 வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்தனர்.

    அப்பகுதியில் வசிப்பவர்கள் பண்டிகை வருவதால் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் கால அவகாசம் வேண்டி கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில் இன்று காலை ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி டி.எஸ்.பி. பிரபு மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மேல்விஷாரம் பகுதியில் பொக்லைன் எந்திரத்துடன் அதிகாரிகள் ஆக்கிரமித்து கட்டி உள்ள வீடுகளை அகற்ற வந்தனர்.

    அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை பொருட்படுத்தாமல் 333 வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்தனர்.

    இதனால் பொதுமக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் வீட்டில் இருந்த பொருட்களுடன் வீதியில் நின்றனர். அவர்களுக்கு கூறாம்பாடி பகுதியில் மாற்று இடம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உண்ண உணவும், இருக்க இடமும் எங்களுக்கு எப்படி கிடைக்கும் என்று அதிகாரிகளிடம் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • மாஸ்க் அணிவதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் டவுன் பஞ்., சார்பில் நேற்று கொரோனா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த பேரணியை நெமிலி தாசில்தார் ரவி, டவுன் பஞ்.தலைவர் கவிதா கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது துப்புரவு பணியாளர்கள் மற்றும் திடக்கழிவு ஊழியர்கள் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு சென்று மாஸ்க் அணிவதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். இதே போல் பிளாஸ்டிக்கு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பிளாஸ்டிக் கேரி பேக்கை விற்பது தெரிய வந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என தெரிவித்தனர்.அப்போது துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், வரித் தண்டலர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் மருதாச்சலம், விஏஓ டோமேசன், திமுக நகர செயலாளர் சீனிவாசன், கவுன்சிலர்கள் சகிலா, செந்தமிழ் செல்வன், சாரதி, கிராம உதவியாளர் கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 74 மாணவர்கள் பயனடைந்தனர்.
    • புத்தகங்களும் வழங்கினர்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்குப்பம் ஊராட்சியில் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கினர்.

    கீழ்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பிரவின் குமார் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 74 அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

    நிகழ்ச்சியில் கீழ்குப்பம் ஊராட்சி துணைத்தலைவர் அமுதா ராமமூர்த்தி வார்டு உறுப்பினர்கள் கோகுல்ராஜ் சுமதி ஜெயராமன் நதியா கௌதம் ஜெயந்தி நானும் மூர்த்தி பூர்ணிமா மாரியப்பன் வெங்கடேசன் ஜான்பீட்டர் ஜெயக்குமார் மற்றும் பெற்றோர்கள் என 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • முனிரத்தினம் எம்.எல்.ஏ. ெதாடங்கி ைவத்தார்
    • பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    சோளிங்கர்:

    சோளிங்கர் கராச்சியில் உள்ள கொண்டபாளையத்தில் நகராட்சி தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் மெகா தூய்மைப் பணி நடைபெற்றது.

    இந்த தூய்மைப் பணிக்கு நகராட்சி தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் பரந்தாமன் அனைவரையும் வரவேற்றார். நகராட்சி உறுப்பினர் காங்கிரஸ் நகர தலைவர் கோபால், திமுக உறுப்பினர்கள், சிவானந்தம், அருண் ஆதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ெமகா தூய்மை பணியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியை தொடங்கி மேலும் இந்த பணியில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது நகராட்சி வார்டு உறுப்பினர் மோகானசண்முகம், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல் இளநிலை உதவியாளர் எபினேசன் ஜெயராமன் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • அபராதம் விதிப்பு.
    • பொருட்கள் இருப்பை ஆய்வு செய்தார்.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுக்காவுக்கு உட்பட்ட பகுதிகளில் 53 முழு நேர ரேசன் கடைகளும், 47 பகுதி நேர கடைகளும் உள்ளன.

    இந்த ரேசன் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக டிஆர்ஓ குமரேஷ்வரன் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலருக்கு வாட்ஸ் அப் மூலம் புகார்கள் சென்றது.

    இதனையடுத்து கடந்த சில நாட்களாக பனப்பாக்கம், நல்லூர் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளுக்கு நெமிலி வட்ட வழங்கல் அலுவலர் கன்னியப்பன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது சர்க்கரை இருப்பை அளந்து பார்க்கும் போது அளவு குறைவாக இருந்துள்ளது.உடனடியாக பனப்பாக்கம் மற்றும் நல்லூர் பேட்டை ரேசன் கடையில் பணியாற்றும் 3 சேல்ஸ் மேன்களை கடுமையாக எச்சரித்து அபராதம் விதித்தார். இதேபோல தொடர்ந்து செயல் பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிறுவளையம் கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் பணிபுரிந்து வந்த பாலசுந்தரம் என்பவர் பயோமெட்ரிக் கைரேகை முறையில் பொருட்களை வழங்காததால் வேலூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அவரை சஸ்பெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் நேற்று ஆயர்பாடி கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் டிஆர்ஓ குமரேஷ்வரன் திடீர் ஆய்வு செய்து அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் இருப்பை ஆய்வு செய்தார்.

    ×