என் மலர்
நீங்கள் தேடியது "Amrit Mahotsav Festival"
- அம்ரித் மகோத்சவ் விழா
- பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம்:
தெற்கு ரெயில்வே சார்பில் இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திரதினத்தை அம்ரித் மகோத்சவ் விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்திய நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஒற்றுமை ஓட்டம் நிகழ்ச்சி அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் நடைபெற்றது.
ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய ஓட்டத்தினை அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் உதவி ஆணையர் ஏ.கே. பெரிட் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அரக்கோணம் ரெயில் நிலையம், பழைய பஸ் நிலையம், பழனிப்பேட்டை, எஸ்.ஆர்.கேட்., டி.பி.ரோடு வழியாக சென்று மீண்டும் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தை வந்தடைந்தனர்.
ரெயில்வே பாதுகாப்புப் படைஇன்ஸ்பெக்டர் உஸ்மான் தலைமையிலான போலீசார் ஒற்றுமைக்கான ஓட்டம் என்ற தலைப்பினை கொண்ட பேனரை ஏந்தியவாறு சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் சென்றனர். இதில் பாதுகாப்பு படை போலீசார், பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






