search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mega cleaning work"

    • முனிரத்தினம் எம்.எல்.ஏ. ெதாடங்கி ைவத்தார்
    • பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    சோளிங்கர்:

    சோளிங்கர் கராச்சியில் உள்ள கொண்டபாளையத்தில் நகராட்சி தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் மெகா தூய்மைப் பணி நடைபெற்றது.

    இந்த தூய்மைப் பணிக்கு நகராட்சி தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் பரந்தாமன் அனைவரையும் வரவேற்றார். நகராட்சி உறுப்பினர் காங்கிரஸ் நகர தலைவர் கோபால், திமுக உறுப்பினர்கள், சிவானந்தம், அருண் ஆதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ெமகா தூய்மை பணியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியை தொடங்கி மேலும் இந்த பணியில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது நகராட்சி வார்டு உறுப்பினர் மோகானசண்முகம், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல் இளநிலை உதவியாளர் எபினேசன் ஜெயராமன் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • மாதந்தோறும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் மாநகரப் பகுதி முழுவதும் தூய்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டிருந்தார்.
    • வண்ணார்பேட்டை சாலை தெருவில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தினை கடந்த 3-ம் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    2-வது முறையாக தூய்மை பணி

    இதனையொட்டி நெல்லை மாநகராட்சியில் 'நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் தீவிர தூய்மை பணி' மற்றும் விழிப்புணர்வு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. மாதந்தோறும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் மாநகரப் பகுதி முழுவதும் தூய்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டிருந்தார்.

    எனவே இந்த மாதத்தில் 2-வது சனிக்கிழமை தூய்மை பணிகள் நடந்த நிலையில் இன்று 4-வது சனிக்கிழமை என்பதால் மாநகரப் பகுதி முழுவதும் தூய்மை பணிகள் நடைபெற்றது.

    உறுதிமொழி

    அதன் தொடர்ச்சியாக தச்சை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நடந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணைமேயர் கேஆர் ராஜு, உதவி கமிஷனர் லெனின் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் கமிஷனர் தலைமையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    கவுரவிப்பு

    எனது குப்பை எனது பொறுப்பு என்ற வாசகம் அடங்கிய பேட்ஜ்களை கைகளில் அணிந்து தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.தொடர்ந்து பணி ஓய்வுபெற உள்ள 3 தூய்மைப் பணியாளர்களை சால்வை அணிவித்து கவுரவித்தனர். அதன் பின்னர் வண்ணார்பேட்டை சாலை தெருவில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    பேரணி

    அதன் தொடர்ச்சியாக வண்ணாரப்பேட்டை சாலை தெருவில் இருந்து தச்சை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் வண்ணாரப்பேட்டை வரையில் தூய்மை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி தூய்மை பணியாளர்கள் பேரணியாக சென்றனர். இதே போல் பாளை மண்டலத்தில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கரலிங்கம், முருகன், சங்கரநாராயணன் ஆகியோர் தலைமையில் டார்லிங் நகர், ராஜேந்திர நகர், ஹவுசிங் போர்டு காலனி ஆகிய பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதார ஆய்வாளர்கள் அந்தோணி, நடராஜன் ஆகியோர் தலைமையில் பாரதி நகர், அத்தியடி தெரு, ராவுத்தர் தெரு ஆகிய பகுதிகளில் கூட்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு மக்கள் குப்பை, மக்காத குப்பை மற்றும் அபாயகரமானவை என்று குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கடைகளிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. மாநகரப் பகுதி முழுவதுமாக இன்று 200 மரக்கன்றுகள் நடப்பட்டது. மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டளை கட்டுப்பாட்டு மையத்தில் வண்ணார்பேட்டை விவேகானந்தா பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ×