என் மலர்
நீங்கள் தேடியது "Toilet for the disabled"
- கழிவறை சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
- சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து திருத் தணி, திருப்பதி, அரக்கோணம், சித்தூர், பள்ளிப்பட்டு, ஆற் காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் சென்று வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சோளிங்கர் பஸ் நிலைய வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கழிவறை கட்டப்பட்டது.
அந்தக் கழிவறையை இன்று வரை திறக்கவில்லை. எனவே மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு கழிவறையை திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






