என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • ரூ.118 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்பட்டது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் ரூ.118 கோடி மதிப்பீட்டில் 13.4 ஏக்கர் பரப்பளவில் 3 லட்சம் சதுர அடியில் அரசு மாளிகையாக பிரம்மாண்டமாக ராணிப்பேட்டை புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    கலெக்டர் அலுவலகத்தில் தரைதளத்தில் வருவாய் பிரிவு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கருவூலம் அலுவலகம் மற்றும் சம்பள பிரிவு, மக்கள் குறைதீர்வு அரங்கம், மக்கள் தொடர்பு அலுவலகம், எல்காட் பிரிவு அலுவலகம் இயங்கவுள்ளது.

    முதல் தளத்தில் மாவட்ட கலெக்டர் அறை, சிறு கூட்டரங்கம், மாவட்ட வருவாய் அலுவலர், சிடிஇ பிரிவு அலுவலகம், கலெக்டர் நேர்முக உதவியாளர்கள் பொது, தேர்தல், கணக்கு ஆகியோரின் அலுவலகங்கள், கலந்தாய்வு அரங்கம், தேர்தல் மற்றும் வருவாய் அலுவலகம் ஆகியவை இயங்கும், இரண்டாம் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், திட்ட இயக்குனர் அறை, கூட்டரங்கம், பஞ்சாயத்து உதவி இயக்குனர், மாவட்ட ஊரகப்பிரிவு தேர்தல் அலுவலகம், மதிய உணவு நேர்முக உதவியாளர் பிரிவு அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், சிறு கூட்டரங்கம், கலந்தாய்வு அரங்கம், திட்ட இயக்குனர் (ஐசிடிஎஸ்) அலுவலகங்கள் இயங்கவுள்ளன.

    மூன்றாம் தளத்தில் கூட்டுறவு சங்க இணை இயக்குனர், பதிவுத்துறை அலுவலகம், வேளாண் இணை இயக்குனர் பிரிவு அலுவலகம், கால்நடை பராமரிப்பு பிரிவு அலுவலகம், சுகாதாரப் பிரிவு இணை இயக்குன அலுவலகம், மகளிர் திட்ட அலுவலர் அலுவலகம் இயக்கப்படவுள்ளது. நான்காம் தளத்தில் வனத்துறை அலுவலகம், சிறு கூட்டரங்கம், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆரம்ப கல்வி அலுவலர், ஆதிதிராவிட நலத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரிய போட்டு சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், தமிழ் வளர்ச்சி துறை, கனிம வளத்துறை, அலுவலகங்கள் மற்றும் கூட்டரங்கம் இயங்கும். கலெக்டர் அலு வலகத்தில் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 12 லிப்ட், மாற்றுத்தி றனாளி களுக்கான சாயதள வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி, செயற்கை நீர் ஊற்று ஆகியவையும் கட்டிடத்தில் உள்ளன.

    கலெக்டர் அலுவலகம் வரும் மக்களுக்காக உணவகம், அடிப்படை வசதிகள் வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்ப ட்டுள்ளது. புதிய கலெக்டர் அலுவலகம் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறக்கிறார்.

    • திராவிட மாடல் ஆட்சி என்றாலே மு.க.ஸ்டாலின் முகம் தான் ஞாபகத்துக்கு வரும்.
    • விளிம்பு நிலையில் உள்ள மக்களை தேடி சென்று அவர்களுடைய குறைகளை தீர்க்கிறோம்.

    ராணிப்பேட்டையில் ரூ.118 கோடியில் கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட கட்டடங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. ரூ.22.19 கோடியில் 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.31.18 கோடியில் முடிந்த 23 திட்டப்பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.267 கோடியில் 71,103 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

    பின்னர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டம் ஆகும். கனிமவளங்கள் நிறைந்த மாவட்டம். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் தோல் ஏற்றுமதி உலகத்தையே ஈர்க்க கூடிய வகையில் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 மணி நேரத்தில் 187 டன் நெகிழி சேகரித்து சுவிட்சர்லாந்து நாட்டில் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்திருக்கிறார்கள்.

    ராணிப்பேட்டை மாவட்டம் தோல் மற்றும் காலணி உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறது.

    பனப்பாக்கத்தில் ரூ.400 கோடி செலவில் 250 ஏக்கரில் சர்வ தேச காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் 20,000 பேருக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறிய 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். இதனால்தான் உங்கள் முன் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவது சிலருக்கு புரியவில்லை. நான் தான் அடுத்த முதல்அமைச்சர் என அலைந்து கொண்டிருக்கிறவர்கள் இன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    எந்தெந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை பட்டியலிட்டு உங்கள் முன்னே கூறி வருகிறோம். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டாக தெரியும் என்பது போல சிலர் அறியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஸ்டாலின் விளம்பர பிரியராக இருக்கிறார் என கூறுகிறார்கள். எனக்கு எதற்கு விளம்பரம். இனிமேல் எனக்கு விளம்பரம் தேவையா? 55 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன்.

    நரிக்குறவர்கள், இருளர் இன மக்கள் வீடுகளுக்கு சென்றதால் அப்படி கூறுகிறார்கள். அந்த சந்திப்பிற்கு பிறகு எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    நரிக்குறவர்கள் இருளர்கள் இன மக்கள் வீடுகளுக்கு சென்றதோடு எங்களுடைய கடமை முடியவில்லை.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 293 நரிக்குறவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 9600 இருளர் இன மக்கள் உள்ளனர். இதில் 5267 பேருக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 20 திருநங்கைகள் 9,522 மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    விளிம்பு நிலையில் உள்ள மக்களை தேடி சென்று அவர்களுடைய குறைகளை தீர்க்கிறோம்.

    பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்குவது பல்லாயிரம் கோடி திட்டங்களை உருவாக்குவதற்கு இணையானதாகும். கடந்த ஆட்சியில் அரசு பள்ளிகளில் வழங்கக்கூடிய புத்தகப் பையில் முன்னாள் முதல்அமைச்சர்கள் படத்தை போட்டு விளம்பரம் செய்தார்கள். அந்த பைகள் இன்னும் மிச்சமாக உள்ளது. அவற்றை பயன்படுத்த வேண்டாம் என என்னிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதன் மூலம் ரூ.17 கோடி அரசுக்கு செலவு ஏற்படும்.

    முன்னாள் முதல்அமைச்சர்கள் படம் இருந்தால் என்ன. அந்த பைகளை மாணவர்களுக்கு கொடுங்கள் என்று கூறினேன்.

    விளம்பரம் எனக்கு எதற்கு ஏற்கனவே உள்ள புகழ் பெருமை போதும். திராவிட மாடல் ஆட்சி என்றாலே மு.க.ஸ்டாலின் முகம் தான் ஞாபகத்துக்கு வரும். பல மாநிலங்கள் ஒருங்கிணைந்தது தான் இந்தியா என்றால் என் குரல் தான் ஞாபகத்திற்கு வரும்.

    27 சதவீத இட ஒதுக்கீடு என்றால் என் முகம் தான் ஞாபகத்திற்கு வரும். அரசு பஸ்சில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களுக்கு எனது முகம் தான் ஞாபகத்திற்கு வரும்.

    அம்பேத்கர், பெரியார் பிறந்த நாளை சமூகநீதி சமத்துவ நாளாக கொண்டாடும்போது என் பெயர் தான் ஞாபகத்திற்கு வரும்.

    நான் என்றால் ஸ்டாலின் மட்டுமல்ல நாம் அனைவரும் சேர்ந்ததுதான். என்றும் உங்களில் ஒருவன் நான். அனைவரும் சேர்ந்தது தான் நான்.

    நமக்கான ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவை சீரமைத்துக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமின்றி ஒளிமயமான எதிர்காலத்திற்காக எந்நாளும் செயல்படுகிறோம். என் சக்தியை மீறி உங்களுக்காக உழைப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 60,000 பயனாளிகளுக்கு ரூ.250 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
    • ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியை பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராணிப்பேட்டை:

    திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆம்பூர் வந்தார்.

    நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலூர் புதிய பஸ் நிலையம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு ராணிப்பேட்டைக்கு வருகை தந்தார். அங்கு பாரதி நகரில் உள்ள ஜி.கே. ரெசிடென்சி ஓட்டலில் தங்கினார். இன்று காலை ராணிப்பேட்டை பாரதி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

    பின்னர் ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு 60,000 பயனாளிகளுக்கு ரூ.250 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மேலும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியை பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முதல்-அமைச்சரின் வருகையையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி தலைமையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உள்ளிட்டோர் மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    விழாவில் கலந்துகொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்தப்பட்டனர். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    • நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக ராணிப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.
    • அப்போது திடீரென காரை ரோட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு வகுப்பறைக்கு சென்று ஆய்வு செய்தார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் புதிய கலெக்டர் அலுவலகத்கதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக ராணிப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு வந்தார்.

    அப்போது திடீரென காரை ரோட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு வகுப்பறைக்கு சென்று ஆய்வு செய்தார்.

    ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் குறைகளை குறித்து கேட்டறிந்தார்.

    மாணவர்களிடம் கலந்துரையாடினார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் இருக்கிறதா என்றும் அப்படி இல்லையென்றால் அவற்றை உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தைகள் நல மைய கண்காணிப்பாளர் பணியில் இல்லாததால் சஸ்பெண்ட்.
    • முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சமூக நலத்துறை நடவடிக்கை.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தபோது பணியில் இல்லாத குழந்தைகள் நல மைய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    ராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பின்னர், ராணிப்பேட்டையில் உள்ள ஆண்கள் அரசு பள்ளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, காரை கூட்ரோட்டில் உள்ள அரசு குழந்தைகள் நல மையத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குழந்தைகள் நல மைய கண்காணிப்பாளர் பணியில் இல்லாததால் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மையத்தின் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்து சமூக நலத்துறை நடவடிக்கை எடுத்தது.

    • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் நாளை திறப்பு.
    • 2600 பேர் பயனடைய உள்ளனர்.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பதற்கு நாளை வருகை தரும் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

    இதில் காவேரிப்பாக்கம் மற்றும் நெமிலி ஒன்றியத்தில் 2600 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மு.க.ஸ்டாலினிடம் நலத்திட்ட உதவிகளை பெறுவார்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, தையல் எந்திரம் வழங்குதல், முதியோர் உதவித்தொகை, மகளிர் சுய உதவி குழு கடன் வழங்குதல், தையல் மெஷின், ஊனமுற்றோர் உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை வழங்க உள்ளார்.

    இதற்காக 2600 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் நாளை முதல் அமைச்சர் நேரில் சந்தித்து பயனடைய உள்ளனர். ஏற்பாடுகளை காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகம் இணைந்து நிகழ்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

    • அமைச்சர் காந்தி தலைமையில் ஏற்பாடு.
    • நாளை நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    ராணிப்பேட்டை:

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைத்திடவும், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்திடவும், பல்வேறு நலத்திடங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள நேற்று இரவு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை புரிந்தார்.

    ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி தலைமையில் வாலாஜா டோல்கேட்டில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் காந்தி பூங்கொத்து கொடுத்து புத்தகம் வழங்கி வரவேற்றார்.

    பின்னர் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

    அப்போது அமைச்சர் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் எம்பி, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாநில சுற்றுசூழல் அணி துணை செயலாளர் வினோத்காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

    இதனைதொடர்ந்து தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான பரதநாட்டியம், சிலம்பம் போன்ற கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டுகளித்து கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    வரவேற்பு நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணை தலைவர், ஊராட்சிமன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், திமுக பிரதிநிதிகள், நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    நாளை (விழாயக்கிழமை) காலை 9.30 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து ராணிப்பேட்டை அரசு மேல்நிலைபள்ளியில் ராணிப்பேட்டை மாவட்ட மக்களை சந்தித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    பின்னர் காலை 11மணியளவில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய ராணிப்பேட்டை பிஞ்சி ஏரி சீரமைக்கும் பணியை பார்வையிடுகிறார். இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோளிங்கர்:

    சோளிங்கரை அடுத்த சோமச் முத்திரம் கிராமத்தில் அமைந் துள்ள ஸ்ரீ மான் சகாதேவ சித்தர் கோவிலில் ஆனி மாத பிரதோ ஷத்தை முன்னிட்டு மூலவர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது .

    இதைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால், தேன், தயிர், பன்னீர், இளநீர், திருநீறு உள் ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . தொடர்ந்து நந்தி பகவானுக்கு பலவண்ண மலர்கள், மலர்மாலை மற்றும் அருகம்புல் மாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடை பெற்றது . இதில் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் சோளிங்கர் அடுத்தகூடலூர் கிராமத்தில் அமைந் துள்ள காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர் மற்றும் நந்தி பகவா னுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப் பட்டு மகா தீபாராதனை நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

    • 237 மனுக்கள் பெறப்பட்டது.
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது . மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் தலைமை தாங்கி பொதுமக்கள் , மாற்றுத் திறனாளிடம் இருந்து மனுக்களை பெற்றார் .

    கூட்டத்தில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை , கூட்டுறவு கடன் உதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி , கிராம பொது பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனு கொடுத்தனர் .

    மொத்தம் 237 மனுக்கள் பெறப்பட்டது . அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவ டிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது .

    கூட்டத்தில் துணை கலெக்டர்கள் சேகர் , தாரகேஸ்வரி, இளவரசி உள்பட பலர் கலந்து கொண்டனர் .

    • தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    தமிழக அரசின் சார்பில் பல் வேறு துறைகளில் மற்றும் சமூ கத்தில் வீரத்துடனும் , துணிச்ச லுடனும் சாதனை செயல்கள் புரிந்த பெண்களுக்கு ' கல் பனா சாவ்லா ' விருது வழங் கப்பட்டு வருகிறது . அதன்படி 2022 - ம் ஆண்டுக்கான கல் பனா சாவ்லா விருது கான விண்ணப்பங்கள் ராணிப் பேட்டை மாவட்டத்தில் வர வேற்கப்படுகின்றன. 2022-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கான விண் ணப்பம் என குறிப்பிட்டுவிண் ணப்பத்தை அனுப்ப வேண் டும் .

    இதற்கான விவரங்களை http://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வும் , பூர்த்தி செய்த விண்ணப் பங்களை அசலாக தபால் வாயிலாகவும் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யம் , நேரு விளையாட்டு அரங் கம் , பெரியமேடு , சென்னை -3 என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் சேரும்படி அனுப்ப வேண்டும் .

    கூடுதல் விவரங்களுக்குமாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 0416-2221721 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் . மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார் .

    • பெற்றோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • 100 பேர் பயனடைந்தனர்.

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த கொடைக்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் பயிலும் 100 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் துளசிராமன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஹேமச்சந்திரன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் அதே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் ஸ்ரீ பிரபு அவரின் சார்பில் பள்ளியில் பயிலும் 100 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார். அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    மேலும் பள்ளிக்கு ஆர்.ஓ குடிநீர் மற்றும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் டிஜிட்டல் கல்விமுறைக்கு புரொஜெக்டரை பள்ளிக்கு வழங்குவதாக தெரிவித்தார். அப்போது வார்டு உறுப்பினர் சுகந்தி சின்னத்தம்பி பள்ளி ஆசிரியர்கள் சுமதி அம்மாள், அனிதா மற்றும் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டைக்கு வருகிறார்.
    • வாலாஜா டோல்கேட்டில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    ராணிப்பேட்டை:

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு தமிழக அரசின் பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைத்திட தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை ராணிப்பேட்டை மாவட்டம் வருகை புரிகிறார். தமிழக முதல்அமைச்சருக்கு அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் இன்று மாலை 5.30மணிக்கு வாலாஜா டோல்கேட்டில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    மேலும் 30ம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தும் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைபள்ளியில் ராணிப்பேட்டை மாவட்ட மக்களை சந்தித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை புதிய கலெக்டர் அலுவலகத்தை பொதுப்பணிதுறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை அரசு மேல்நிலைபள்ளியில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள், அலுவலர்கள், திமுக நிர்வாகிகள், ஒப்பந்ததாரர் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×