என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை அரசு பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
- நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக ராணிப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.
- அப்போது திடீரென காரை ரோட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு வகுப்பறைக்கு சென்று ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் புதிய கலெக்டர் அலுவலகத்கதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக ராணிப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு வந்தார்.
அப்போது திடீரென காரை ரோட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு வகுப்பறைக்கு சென்று ஆய்வு செய்தார்.
ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் குறைகளை குறித்து கேட்டறிந்தார்.
மாணவர்களிடம் கலந்துரையாடினார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் இருக்கிறதா என்றும் அப்படி இல்லையென்றால் அவற்றை உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
Next Story






