என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • மத்திய தொழில் பாதுகாப்பு படை மையத்தில் நடந்தது
    • கோப்பைகள் வழங்கப்பட்டது

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் இளம் விதவைப் பெண் காவலர்கள் காண பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

    இதில் 51 பெண் விதவைகள் இந்த பயிற்சியை மேற்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அரக்கோணம் பயிற்சி மையத்தின் முதல்வர் டி.ஐ.ஜி. சாந்தி ஜெய் தேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து பயிற்சியின்போது சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட வீராங்கனைகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் பயிற்சி பெற்ற வீரர்களின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

    • கிராம நிர்வாக அலுவலர் நேரில் ஆய்வு
    • தீயணைப்புத்துறையினர்அரை மணி நேரம் போராடி அனைத்தனர்


    ஆற்காடு:

    ஆற்காடு கலவை ரோட்டில் உள்ள அரசினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதி வளாகத்தில் சிலர் தீ வைத்ததால் அங்கே உள்ள புளியமரம் தீப்பற்றி எரிந்தது.

    அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் சக்கரவர்த்தி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு உடனே ஆற்காடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் பரிமளா தேவி தலைமையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து அரை மணி நேரம் போராடி அனைத்தனர்.

    வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர் சக்கரவர்த்தி, கிராம நிர்வாக உதவியாளர் ராஜசேகர் தீயணைப்பு துறை வீரர்கள் ஆகியோர் உட்பட இருந்தார்.

    • பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் இன்று காலை சேர்ந்தமங்கலம் பகுதியில் இருந்து மாணவர்கள் 4 பேரை ஏற்றி சென்றனர்.
    • சுமார் 30 நிமிடம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. பஸ் முழுவதும் எரிந்தது.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதி நகர் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் இன்று காலை சேர்ந்தமங்கலம் பகுதியில் இருந்து மாணவர்கள் 4 பேரை ஏற்றி சென்றனர். சேர்ந்தமங்கலம் ரெயில்வே கேட் அருகில் வந்தபோது பஸ்சின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதை கவனித்த பஸ் டிரைவர் சீனிவாசன் (வயது 31) உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.

    அதிலிருந்த 4 மாணவர்களை கீழே இறக்கினார். அவரும் உயிர் தப்பினார். அந்த நேரத்தில் பஸ் முழுவதும் தீ பற்றி எரிந்தது.

    இதுகுறித்து அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சுமார் 30 நிமிடம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. பஸ் முழுவதும் எரிந்தது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

    தீ விபத்துக்கான காரணம் குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • வாலிபர் தலை துண்டாகி பலி
    • 2 குழந்தைகளுக்கு பலத்த காயம்

    நெமிலி:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஆரிய பெரும்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த விஜய் பாபு (வயது 41). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியாக கம்பெனியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அனுசியா என்ற மனைவியும் முகேஷ் (13)என்ற மகன் சோபியா (9)என்ற மகள் உள்ளனர்.

    விஜய்பாபு நேற்று பனப்பாக்கம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். சென்னை பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்ற வருகிறது.

    இதற்கு ஜல்லி ஏற்றி சென்ற டிப்பர் லாரி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தது எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறம் பைக் வேகமாக மோதியது.

    இதில் விஜய்பாபு தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மனைவி அனுசுயா மற்றும் 2 குழந்தைகள் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த மனைவி அனுசுயா மற்றும் சோபியா மேல் சிகிச்சைக்குசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

    விஜய்பாபு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலை பணியின் தார் அளவு குறையும்
    • 36 ஊராட்சிகளில் இருந்து 1097 கிலோ அனுப்பட்டது

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை 60 மைக்ரான் வரை அரவை எந்திரம் மூலம் அரைத்து நெகிழி துகள்களை சாலை பணிக்கு பயன்படுத்துகின்றனர்.

    இந்த நெகிழி அரவை எந்திரம் மையத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டிய இன்று ஆய்வு ெசய்தார்.

    வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 36 ஊராட்சிகளில் இருந்து ஒரு கிலோவிற்கு ரூ.8 வீதம் பெற்று அதனை தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் உள்ள பிளாஸ்டிக கழிவு மேலாண்மை மையத்திற்கு அனுப்ப படுகிறது.

    நெகிழி கழிவு மேலாண்மை அலகில் ஊராட்சிகளில் இருந்து ரூ.10 வீதம் பெற்றுகொள்கின்றனர். பிளாஸ்டிக் கழிவுகள் சுத்தம் செய்த பின் எந்திரம் கொண்டு பிளாஸ்டிகளை அரவை செய்த பின் சாலை அமைக்கும் பணிக்காக சம்மந்தப்பட்ட ஒப்பந்தாரருக்கு ரூ.30 வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது வரை வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 36 ஊராட்சிகளில் இருந்து 1,356 கிலோ பிளாஸ்டிக் ரூ.10,848 பெறப்பட்டு அதனை தென்கடப்பந்தாங்கல் நெகிழி அலகிற்கு 1097 கிலோ அனுப்பட்டது.

    அதனை ரூ.10,970 தொகை கொடுத்து பெறப்பட்டது. சாலை அமைக்கும் பணிக்காக சுமார் 440 கிலோ நெகிழி துகள்களை அரவை செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் சாலை பணிக்காக 240 கிலோ ரூ.7,200 விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    ஒரு கிலோ மீட்டர் 3.75 மீட்டர் அகலம் கொண்ட தார் சாலைக்கு 438 கிலோ நெகிழி தேவைப்படும். இதனால் ஏற்கனவே பயன்படுத்தப்படும் தார் அளவு 6 சதவீதம் குறையும் என தெரிவிக்கப்பட்டது.

    ஆய்வின் போது ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் லோகநாயகி, தாசில்தார் ஆனந்தன், ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், ஊராட்சிமன்ற தலைவர் பிச்சமணி, ஊராட்சிமன்ற துணை தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 11-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் அறிவிப்பு

    ராணிப்பேட்டை:

    பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பாக கொண்டாடும் வகையில் 2022-2023-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் பிரிவின் சார்பாக வருகிற 11-ந் தேதி காலை 7 மணிக்கு நடத்தப்பட உள்ளது.

    இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -

    இதில் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், 13 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 15 கி.மீ.தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ.தூரமும், 17 வயது வரை உள்ள மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும் எ 15 கி.மீ. தூரமும் நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.

    மேற்கண்ட 3 வயது பிரிவுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்குகாசோலை மூலம் முதல் பரிசாக ரூ.5000 இரண்டாம் பரிசாக ரூ.3000 மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு தினப்படி/பயணப்படி ஏதும் வழங்க மாட்டாது. போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் தங்கள் பெயர்களை 11-ந் தேதி காலை 6 மணிக்குள் போட்டி தொடங்கும் இடத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிகள் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி ஆன்சிலரி பெல் ரூட், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், அக்ராவரம், திருமலை கெமிக்கல்ஸ் கம்பெனி வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலை எண். 40,பெல் நிறுவனம் வரையும் சென்று மீண்டும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரும்பி வரும் வகையில் நடத்தப்பட உள்ளது.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அலுவலக நேரங்களில் 0416 2221721 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமான் சகாதேவ சித்தர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷம் முன்னிட்டு மூலவர் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மாலை நந்திபகவானுக்குபால் தயிர் இளநீர் பன்னீர் சந்தனம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜை செய்து அருகம்புல் மாலை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாட்டை பாண்டியநல்லூர் வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ஜெயகோவி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • சரிசெய்ய ெபாதுமக்கள் வலியுறுத்தல்
    • 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தொட்டி அமைக்க கோரிக்கை

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பரவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு காலனி பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.

    இந்த குடும்பங்களுக்கு அப்பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை கடந்த 2012 13-ஆம் ஆண்டு பராமரிப்பு செய்யப்பட்டது. கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகி உள்ளதால் இந்த மேல்நிலை தேக்க தொட்டியை தாங்கி நிற்கும் நான்கு தூண்களும் சேதமடைந்து சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் சேதம் ஆகி உள்ளதால் எப்போது வேண்டுமானால் விழுந்து விபத்துக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த மேல் நீர் தேக்க தொட்டி அகற்றிவிட்டு கூடுதலாக 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • 2 பேருக்கு வலைவீச்சு
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரிலிருந்து ஆற்காட் டிற்கு செல்லும் அரசு டவுன் பஸ் கடந்த சில நாட்களாக தகரக்குப்பம் கிராமத்திற்கு சென்று ஆற்காட்டுக்கு செல்கிறது.

    நேற்று காலை சோளிங்கரிலிருந்து ஆற்காட்டிற்கு ரெண் டாடி வழியாக சென்று தகர குப்பம் கிராமத்திற்குள் சென்று திரும்பி வந்தது.

    அப்போது தகரகுப்பம் பஸ் நிலையம் அரு கில் பஸ்சில் ஏறிய 2 பேர் பஸ் தகரகுப்பம் சென்று வருவதால் எங்களுக்கு இடம் இல்லை என்று டிரைவர் பாஸ்கருடன் (55) தகராறு செய்து அவரை தாக்கி உள்ளனர்.

    உடனடியாக சோளிங்கர் பணிமனைக்கு தகவல் கொடுத்து வேறு டிரைவரை பஸ்சை ஓட்டி சோளிங்கர் வரவைத்து சென்றனர்.

    பாஸ்கர் சோளிங் கர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் டிரை வர் பாஸ்கர் புகார் கொடுத் தார். அதன்பேரில் சப் - இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பொருட்கள் குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என கேட்டு அறிந்தார்
    • சேதம் அடைந்த பழைய அங்கன்வாடி கட்டிடம் சோதனை

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட தென்வன்னியர் தெரு, கொண்டபாளையம் ஆகிய பகு திகளில் இயங்கி வரும் ரேஷன் கடைகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீரென ஆய்வு செய்தார்.

    அப்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி தரம், பொருட்கள் குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என குடும்ப அட்டைதாரர்களிடம் கேட்டு அறிந்தார்.

    அதனைத் தொடர்ந்து வாடகைகட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடிமையத்தை ஆய்வு செய்து குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா எனவும், உணவு தரமாக வழங்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார்.

    சேதம் அடைந்து பயன்படாமல் உள்ள பழைய அங்கன்வாடி கட்டிடத்தையும் ஆய்வு செய்தார். அப்போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • அதிகாரிகளிடம் பெற்றோர் வாக்குவாதம்
    • சிறுமியை காப்பகத்திaல் சேர்த்தனர்

    ஆற்காடு:

    ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் உள்ளார்.

    அவரது பெற்றோர் அவசர அவசரமாக காஞ்சிபுரத்தை சேர்ந்த உறவினர் மகன் ஒருவருக்கு இன்று திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

    நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு மணமகள் வீட்டார் பரபரப்பாக இருந்தனர். இந்த நிலையில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக சைல்ட் லைன் அதிகாரி சாம்ராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நலவலர் நிரேஷா, சமூக ஊர் நல அலுவலர் கீதா, கிராம நிர்வாக அலுவலர் சாருமதி மற்றும் தாலுகா போலீசார் சிறுமியின் வீட்டிற்கு சென்றனர்.

    18 வயது நிரம்பாத மகளுக்கு திருமணம் செய்யக்கூடாது என அதிகாரிகள் சிறுமியின் பெற்றோரிடம் கூறினார். அப்போது சிறுமியின் பெற்றோர் உறவினர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    18 வயது நிரம்பாத மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தால் பெற்றோர்கள் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. சிறுமியை மீட்டு வேலூரில் உள்ள பெண்கள் பிற்காப்பு இல்லத்தில் சேர்த்தனர்.

    இதேபோல் திமிரி அருகே உள்ள கிராமத்து சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் திருவண்ணாமலையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் வரும் 12-ந் தேதி திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சமூக நல அலுவலர் பாவனா, ஷீலா மற்றும் திமிரி போலீசார் சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரது திருமணத்தை கருத்து நிறுத்தினார்.

    மேலும் சிறுமியை மீட்டு வேலூரில் உள்ள பெண்கள் பிற்காப்பு இல்லத்தில் சேர்த்தனர்.

    • கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
    • கேரள மாநில நிர்வாகம் வேண்டுகோள்

    அரக்கோணம்:

    கேரளாவில் கடந்த சில நாட் களாக தென் மேற்கு பருவ மழை பல்வேறு பகுதிகளில் இடை விடாமல் பெய்து வருகிறது.

    பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . இதன் காரணமாக முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணியில் ஈடுபடுவதற் காக ஏற்கனவே அரக்கோ ணம் தேசிய பேரிடர் மீட்பு படைகுழுவினர் சென்றுள்ள னர் .

    இந்த நிலையில் கேரள மாநில நிர்வாகம் வேண்டு கோளுக்கிணங்க அரக்கோ ணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்து குழுவுக்கு தலா 25 பேர் வீதம் மேலும் , ஐந்து குழுவினர் திருவனந்தபுரம் , ஆலப்புழா , கொல்லம் , எர்ணாகுளம் , கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கு அதிந வீன மீட்பு கருவிகளுடன், மீட்புப்படை வாகனத்தில் சென்றனர் .

    ×