என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Girls get married"

    • அதிகாரிகளிடம் பெற்றோர் வாக்குவாதம்
    • சிறுமியை காப்பகத்திaல் சேர்த்தனர்

    ஆற்காடு:

    ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் உள்ளார்.

    அவரது பெற்றோர் அவசர அவசரமாக காஞ்சிபுரத்தை சேர்ந்த உறவினர் மகன் ஒருவருக்கு இன்று திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

    நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு மணமகள் வீட்டார் பரபரப்பாக இருந்தனர். இந்த நிலையில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக சைல்ட் லைன் அதிகாரி சாம்ராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நலவலர் நிரேஷா, சமூக ஊர் நல அலுவலர் கீதா, கிராம நிர்வாக அலுவலர் சாருமதி மற்றும் தாலுகா போலீசார் சிறுமியின் வீட்டிற்கு சென்றனர்.

    18 வயது நிரம்பாத மகளுக்கு திருமணம் செய்யக்கூடாது என அதிகாரிகள் சிறுமியின் பெற்றோரிடம் கூறினார். அப்போது சிறுமியின் பெற்றோர் உறவினர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    18 வயது நிரம்பாத மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தால் பெற்றோர்கள் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. சிறுமியை மீட்டு வேலூரில் உள்ள பெண்கள் பிற்காப்பு இல்லத்தில் சேர்த்தனர்.

    இதேபோல் திமிரி அருகே உள்ள கிராமத்து சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் திருவண்ணாமலையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் வரும் 12-ந் தேதி திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சமூக நல அலுவலர் பாவனா, ஷீலா மற்றும் திமிரி போலீசார் சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரது திருமணத்தை கருத்து நிறுத்தினார்.

    மேலும் சிறுமியை மீட்டு வேலூரில் உள்ள பெண்கள் பிற்காப்பு இல்லத்தில் சேர்த்தனர்.

    ×