என் மலர்
ராணிப்பேட்டை
- 3 டன் சிக்கியது
- ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கொண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (42) இவரது வீட்டில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் எஸ்.ஐ.முத்தீஸ்வரன் ஆகியோர் சந்திரசேகர் வீட்டில் சோதனை செய்த போது வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 75 மூட்டையில் சுமார் 3 டன் கொண்ட ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இந்த ரேஷன் அரிசிகள் திருமால்பூர் அன்வர்திகான்பேட்டை பள்ளூர் பளப்பாக்கம் ரெட்டிவலம் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்கு சேமிக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் இதில் ரேஷன் கடையில் வேலை செய்யும் விற்பனையாளர்களும் உடந்தையாக இருப்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து இந்த பகுதியில் லாரி மூலம் ரேசன் அரிசி கடத்துவது வாடிக்கையாக உள்ளதாக பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- 50 போதை பாக்கெட்டுகள் சிக்கியது
- வியாபாரி மீது வழக்கு பதிவு
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அதே பகுதியில் பங்க் கடை நடத்தி வருகிறார். ராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன் உத்தரவின் பேரில் மாவட்ட முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய கூடாது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவலூர் போலீசார் ஏழுமலை மற்றும் சவுந்தர்ராஜன் அங்குள்ள கடைகளில் சோதனை ஈடுபட்ட போது அங்குள்ள ஒருவர் கடையில் இருந்து தடை செய்யப்பட்ட 50 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து தடை செய்யப்பட்ட போதை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்ய கூடாது என்று அறிவித்தம் சில பேர் பணம் சம்பாதிக்கும் லாப நோக்கில் மறைமுகமாக விற்பனை செய்கின்றனர். அவர் மீது நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்க வேண்டுகோள்
- அரக்கோணம் சு.ரவி எம்.எல்.ஏ. அறிக்கை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் அரக்கோணம் எம்.எல்.ஏ.வுமான சு.ரவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வரும் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
அன்றைய தினம் ஒன்றிய செயலாளர்கள் பேரூர் கழக செயலாளர் கிளை கழக செயலாளர் ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் இணைந்து அண்ணாவின் பிறந்த நாளில் அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கிக் கொண்டாட வேண்டும்.
பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்க வேண்டுமென அ.தி.மு.க.வினற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக இளைஞர்களை திசை திருப்பி வரும் தி.மு.க.வுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என சு.ரவி எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- செப்டம்பர் 15 -ந்தேதி முப்பெரும் விழா
- அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
செப்டம்பர் 15 -ந்தேதி முப்பெரும் விழா, அண்ணாவின் பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்த நாள், திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள் ஆகியவை கொண்டாடப்படுகிறது.
சமுதாய நலன் காக்க, சமதர்மம் நிலைக்க, உயர்ந்தோர், தாழ்ந்தோர் எனும் நிலைமாற, அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் வழியில் கழகம் காத்த பெருந்தகை முத்தமிழ் அறிஞர் கலைஞர் கழகம் எனும் ஆலமரம் போல் பகுதறிவுச் சோலையாக பூத்து குலுங்கும் சூழலை உருவாக்கிட கடந்து வந்த பாதைகளில் சந்தித்த சோதனைகள், வேதனைகள் கழக வரலாற்றை தொகுத்து, இன்றைய தலைமுறை அறிய திராவிட பாசறை கூட்டங்கள் தமிழகம் எங்கும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க திராவிட கருத்துகள் பதிய, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றும் அரும்பணி என்றும் திராவிடம் மறையாது. மறைக்கப்படாது.
விதைத்தது வீரு கொண்டு எழும்.எனவே திராவிட மாடல் ஆட்சி காணும் கழக தலைவர் எண்ணமும் செயலும் எதிர்கால தி.மு.க.விற்கான களங்கரை விளக்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் போற்றும் தலைவர் தி.மு.கழகத்தின் முதுபெருந்தலைவர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15 அன்றும், தந்தை பெரியார் பிறந்தநாள் 17 அன்றும் கொண்டாடி பட்டி தொட்டியெங்கும் திராவிட மாடல் ஆட்சியின் மகத்துவத்தை மக்கள் அறிய உறுதி ஏற்று கொண்டாடுவோம்.
நலதிட்ட உதவிகள் பல செய்து மக்கள் நல முதல்வர் என திகழ்ந்து புதுமை பெண் திட்டம் மூலம் பெண்கள் சமுதாயத்தின் எதிர்காலத்தை பொற்காலமாய் மாற்றும் உயரிய தலைவர் வழி நின்று முப்பெரும் விழாவை இருவண்ணகொடி உயர்த்தி பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் திருஉருவ சிலைகளுக்கு மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடிட வேண்டுகிறேன்.
எனவே மாவட்ட கழக நிர்வாகிகள், நகர, ஒன்றிய, செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, இலக்கிய அணி, தொண்டரணி, வழக்கறிஞரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் நிகழ்ச்சிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து நிகழ்ச்சியில் பங்கேற்று அண்ணா பெரியார் பிறந்தநாள் திமுக தோன்றிய நாள் ஆகிய விழாக்களை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அமைச்சர் ஆர்.காந்தி திறந்துவைத்தார்
- கலெக்டர் தலைமை தாங்கினார்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அனந்தலை ஊராட்சியில் திருமலை நகரில் பகுதி நேர ரேசன் கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் நந்தகோபால், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் சந்திரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பகுதி நேர ரேசன் விலைக் கடையை குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இதனைதொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், கோட்டாட்சியர் பூங்கொடி, வட்டாட்சியர் ஆனந்தன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜலஷ்மி, ஊராட்சிமன்ற தலைவர் தேவகி மகாதேவன், துணை தலைவர் மீனா பெருமாள், நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, துணை தலைவர் கமலராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, பாஸ்கரன் உள்பட நகரமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் கூட்டுறவு கடன் சங்க இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் வாலாஜா கிழக்கு ஒன்றிய மகளிரணி தலைவர் லாவண்யா நன்றி கூறினார்.
- ஒன்றிய குழு தலைவர் பார்வையிட்டார்
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கடம்பநல்லூரில் மக்களின் பல வருட கோரிக்கையாக இருந்த பாலம் அமைக்கும் பணியினை நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து ஊராட்சி
ஒன்றிய பொது நிதி மற்றும் 15-வது நிதிக்குழு மான்யத்திலிருந்து, கடம்ப நல்லூர் கிராமத்தில் சிறுபாலம் ரூ.9 லட்சம் மற்றும் பின்னாவரம் ஆதிதிராவிடர் காலனியில் சிமெண்ட் சாலை ரூ.9 லட்சம் என மொத்தம் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளை நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு தொடங்கி வைத்தார்.
இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சிவராமன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வரலட்சுமி, அஷோக்குமார், விநாயகம், ஒப்பந்ததாரர் பாபு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- காவேரிப்பாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
- பொக்லைன் எந்திரத்தை கொண்டு அப்புறப்படுத்தினர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் இருந்து நகர பகுதிக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள போலீஸ் நிலையம் எதிரே சாலை விரிவாக்க பணிகளுக்காக எடுக்கப்பட்டிருந்த பைப்லைன் பள்ளத்தில் அந்த வழியாக சென்ற சரக்கு வாகனம் எதிர்ப்பாராத விதமாக சிக்கியது.
இதனால் காவேரிப்பாக்கம் பாணாவரம் சாலையில் செல்ல வாகனங்களுக்கு இடையூறாக இருந்ததால் காவேரிப்பாக்கம் மற்றும் பாணாவரம் சோளிங்கர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த சிறிய விபத்தால் அரை மணி நேரத்துக்கு மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொக்லைன் எந்திரத்தை கொண்டு அந்த வாகனத்தை அப்புறப்படுத்தினர்.
- 4 பைக்குகள் பறிமுதல்
- போலீசார் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்
வாலாஜா:
வாலாஜாபோலீசார் வி.சி.மோட்டூர் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாகமோட் டார்சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அவர் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த சலீம் (வயது 20) என்பதும், பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. சொந்த ஊரில் வாகனங்களை திருடினால் வெளியில் தெரிந்துவிடும் என நினைத்து, ராணிப்பேட்டையில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி பைக் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வாலாஜா அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த 2 பைக்குகளை திருடியுள்ளார். அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சலீமை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவருக்கு துணையாக இருந்த அவருடைய நண்பர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வராஜ ஹோமம் நடத்தினர்
- 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது
வாலாஜா:
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக மக்களின் நலன் கருதி பவுர்ணமியை முன்னிட்டு ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம், தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம், சனி சாந்தி ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் ஆகிய ஐம்பெரும் யாகங்கள் நடைபெற்றது.
பின்னர் பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உள்ள ஸ்ரீ ராகு கேதுவிற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் அன்னாபிஷேகமும், பூஜையும் நடைபெற்றது.
சிவலிங்க ரூபத்தில் உள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
இந்த ஹோமங்கள் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர சுவமிகள் அருள் பிரசாதமும் ஆசிர்வாதமும் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
- சட்ட உரிமைகள் பற்றியும் விளக்கப்பட்டது
- 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் குட்லெட் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சோளிங்கர் வருவாய் ஆய்வாளர் சதீஷ் தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமையாசிரியர்ஜாய்சி எப்சிடா முன்னிலை வகித்தார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நளினி கலந்து கொண்டு குழந்தைகளின் சட்ட உரிமைகள் பற்றியும்., குழந்தை திருமண தடுப்பு சட்டம், பாலியல் குற்றங்களில் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் பற்றியும், போதை பொருளினால் வரும் தீமைகள் பற்றியும், மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாவட்ட சைல்டு லைன் குழு உறுப்பினர் பர்ஜானா, சுரேஷ், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் 500 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
- பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார்
- வாலிபர் கைது
நெமிலி:
ராணிப்பே ட்டை மாவட்டம் காவேரிப்பா க்கம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 2 சிறுவர்கள் அதே பகுதியில் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
பாலியல் தொல்லை
இவர்கள் நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர் அவர்களது பெற்றோர் கேட்டபோது எங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளனர்.
மாணவர்களும் சோர்வாக காணப்பட்டதால் அவர்களிடம் மீண்டும் விசாரித்தனர், அப்போது அழுது கொண்டே அதே பகுதியை சேர்ந்த வாலிபர் பாலியல்தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர்.
இவர்கள் இயற்கை உபாதை கழிக்க செல்லும் பொழுதும் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வீட்டுக்கு ஓட்டு வரும் பொழுதும் மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் சிறுவர்களின் பெற்றோர் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதியை சேர்ந்த நரேஷ் குமார் (வயது 23) என்பவரை கைது செய்தனர்.
அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
- அங்கன்வாடியில் உணவு சாப்பிட்டு பார்த்தார்
- 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட நிர்ணயம்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரிவேடு பெரும்புலிப்பாக்கம், ஓச்சேரி, கரிவேடு ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட திட்ட இயக்குனர் லோகநாயகி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் பெரும்புலிப்பாக்கம் சமத்துவபுரம் பகுதியில் 5 நபர்களுக்கு இலவச வீடு புனரமைக்கும் திட்ட பயனாளிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
கரிவேடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் நர்சரியில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை அந்த ஊராட்சியிலும் சுற்றியுள்ள ஊராட்சிகளிலும்நட நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சமத்துவபுரம் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் உணவுகளை தரமாக உள்ளதா என அதை சாப்பிட்டு பார்த்தார்.
ஓச்சேரி அடுத்த ஆயர்பாடி ஊராட்சியில் புதியதாக செயல்படுத்த ப்பட்டிருக்கும் மழைநீர் வடிகால் சேகரிப்பு தொட்டியை பார்வை யிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் அனிதா குப்புசாமி காவேரி ப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசன் பாலாஜி ஊராட்சி மன்ற தலைவர் பெருவ ளையம் சி.எஸ்.கே.குமரேசன் கரிவேடு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






