search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free Home Renovation Program"

    • அங்கன்வாடியில் உணவு சாப்பிட்டு பார்த்தார்
    • 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட நிர்ணயம்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரிவேடு பெரும்புலிப்பாக்கம், ஓச்சேரி, கரிவேடு ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட திட்ட இயக்குனர் லோகநாயகி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் பெரும்புலிப்பாக்கம் சமத்துவபுரம் பகுதியில் 5 நபர்களுக்கு இலவச வீடு புனரமைக்கும் திட்ட பயனாளிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

    கரிவேடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் நர்சரியில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை அந்த ஊராட்சியிலும் சுற்றியுள்ள ஊராட்சிகளிலும்நட நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சமத்துவபுரம் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் உணவுகளை தரமாக உள்ளதா என அதை சாப்பிட்டு பார்த்தார்.

    ஓச்சேரி அடுத்த ஆயர்பாடி ஊராட்சியில் புதியதாக செயல்படுத்த ப்பட்டிருக்கும் மழைநீர் வடிகால் சேகரிப்பு தொட்டியை பார்வை யிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் அனிதா குப்புசாமி காவேரி ப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசன் பாலாஜி ஊராட்சி மன்ற தலைவர் பெருவ ளையம் சி.எஸ்.கே.குமரேசன் கரிவேடு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×