search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்
    X

    அண்ணா பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்

    • செப்டம்பர் 15 -ந்தேதி முப்பெரும் விழா
    • அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    செப்டம்பர் 15 -ந்தேதி முப்பெரும் விழா, அண்ணாவின் பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்த நாள், திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள் ஆகியவை கொண்டாடப்படுகிறது.

    சமுதாய நலன் காக்க, சமதர்மம் நிலைக்க, உயர்ந்தோர், தாழ்ந்தோர் எனும் நிலைமாற, அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் வழியில் கழகம் காத்த பெருந்தகை முத்தமிழ் அறிஞர் கலைஞர் கழகம் எனும் ஆலமரம் போல் பகுதறிவுச் சோலையாக பூத்து குலுங்கும் சூழலை உருவாக்கிட கடந்து வந்த பாதைகளில் சந்தித்த சோதனைகள், வேதனைகள் கழக வரலாற்றை தொகுத்து, இன்றைய தலைமுறை அறிய திராவிட பாசறை கூட்டங்கள் தமிழகம் எங்கும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க திராவிட கருத்துகள் பதிய, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றும் அரும்பணி என்றும் திராவிடம் மறையாது. மறைக்கப்படாது.

    விதைத்தது வீரு கொண்டு எழும்.எனவே திராவிட மாடல் ஆட்சி காணும் கழக தலைவர் எண்ணமும் செயலும் எதிர்கால தி.மு.க.விற்கான களங்கரை விளக்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் போற்றும் தலைவர் தி.மு.கழகத்தின் முதுபெருந்தலைவர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15 அன்றும், தந்தை பெரியார் பிறந்தநாள் 17 அன்றும் கொண்டாடி பட்டி தொட்டியெங்கும் திராவிட மாடல் ஆட்சியின் மகத்துவத்தை மக்கள் அறிய உறுதி ஏற்று கொண்டாடுவோம்.

    நலதிட்ட உதவிகள் பல செய்து மக்கள் நல முதல்வர் என திகழ்ந்து புதுமை பெண் திட்டம் மூலம் பெண்கள் சமுதாயத்தின் எதிர்காலத்தை பொற்காலமாய் மாற்றும் உயரிய தலைவர் வழி நின்று முப்பெரும் விழாவை இருவண்ணகொடி உயர்த்தி பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் திருஉருவ சிலைகளுக்கு மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடிட வேண்டுகிறேன்.

    எனவே மாவட்ட கழக நிர்வாகிகள், நகர, ஒன்றிய, செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, இலக்கிய அணி, தொண்டரணி, வழக்கறிஞரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் நிகழ்ச்சிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து நிகழ்ச்சியில் பங்கேற்று அண்ணா பெரியார் பிறந்தநாள் திமுக தோன்றிய நாள் ஆகிய விழாக்களை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×