என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட வீராங்கனை ஒருவருக்கு பயிற்சி மையத்தின் முதல்வர் டி.ஐ.ஜி.சாந்தி ஜெய் தேவ் கோப்பை வழங்கிய போது எடுத்த படம்.
விதவைப் பெண் காவலர்கள் பயிற்சி நிறைவு விழா
- மத்திய தொழில் பாதுகாப்பு படை மையத்தில் நடந்தது
- கோப்பைகள் வழங்கப்பட்டது
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் இளம் விதவைப் பெண் காவலர்கள் காண பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
இதில் 51 பெண் விதவைகள் இந்த பயிற்சியை மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அரக்கோணம் பயிற்சி மையத்தின் முதல்வர் டி.ஐ.ஜி. சாந்தி ஜெய் தேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பயிற்சியின்போது சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட வீராங்கனைகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் பயிற்சி பெற்ற வீரர்களின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.






