என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • 130 மாணவர்கள் 30 நிமிடத்தில் 3000 பஞ்ச் செய்தனர்
    • சோளிங்கர் முனிரத்தினம் எம்.எல்.ஏ. சான்றிதழ் வழங்கினார்

    சோளிங்கர்:

    சோளிங்கர் தனியார் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் நோபல் உலக சாதனைக்கான நிகழ்ச்சி கராத்தே பயிற்சி தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

    நோபல் வேர்ல்ட் டேக் கார்ட் சி.இ.ஓ. அரவிந்த் முன்னிலையில் 8-ம் வகுப்பு மாணவன் தர்ஷன் ஸ்கேட்டிங் செய்து கொண்டே வலது கையில் சிலம்பு சுற்றுதல் இடது கையில் பஞ்ச் என தொடர்ந்து 2 மணிநேரம் செய்து சாதனை புரிந்தார்.

    130 கராத்தே மாணவர்கள் 30 நிமிடத்தில் 3000 பஞ்ச் செய்து சாதனை புரிந்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை புரிந்தனர்.

    சாதனைக்கான சான்றிதழ்களை சோளிங்கர் ஏ.எம். முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வழங்கினார். நிகழ்ச்சியை கராத்தே பயிற்சியாளர் கார்த்தி ஏற்பாடு செய்திருந்தார்.

    இதில் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி துணை தலைவர் பழனி, பெல்.பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அரக்கோணம் அருகே பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    பெங்களூருவில் இருந்து பீகார் மாநிலம் தானாபூர் வரை செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் 2.30 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையம் வந்தடைந்தது.

    பின்னர் சென்னை நோக்கி ரெயில் புறப்பட்டு சென்றபோது எதிர்பாராத விதமாக ரெயிலில் பயணம் செய்த பீகார் மாநிலம் சம்சத்பூர் பகுதியை சேர்ந்த மோன்தோஷ் சதா (வயது 21) என்பவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானர்.

    இதனையடுத்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகை-பணம் பறிமுதல்
    • ஜெயிலில் அடைப்பு

    சோளிங்கர்:

    சோளிங்கரை அடுத்த நீலகண்டராயன் பேட்டை ரைஸ் மில் பகுதியை சேர்ந்தவர் கல்பனா (வயது45).

    இவர் கடந்த மாதம் 21-ந்தேதி வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே சென்று இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் இவரது வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து ரூ.1 1/2 லட்சம் பணம் மற்றும் 1 1/2 பவுன் நகை, கொலுசை திருடி சென்றார்.

    இது குறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். விசாரணையில் கல்பனா பக்கத்து வீட்டை சேர்ந்த அஜித் குமார் என்பவர் திருடி சென்றது தெரிய வந்தது. பின்னர் தலைமறைவான அஜித்குமாரை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நீலகண்டராயபுரம் மலைப்பகுதியில் அஜித் குமார் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    அதைத்தொடர்ந்து போலீசார் மலைப்பகுதிக்கு சென்ற போது அங்கிருந்து அஜித்குமார் தப்பி ஓடி உள்ளார். அவரை ஜேம்பு குளம் கூட்ரோடு அருகே போலீசார் மடக்கி பிடித்து அவரிடம் இருந்து ரூ.75 ஆயிரம் ரொக்கம், நகை மற்றும் கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிர் பிரிந்த பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த ஆதிவராகபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 17). இவர்மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். பிலாஞ்சி அருகே சென்றபோது எதிரே வந்த மொபட் பிரவீன் சென்ற பைக் மீது மோதியது. இதில் பிரவீன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

    பின்னர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரவீன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த போலீசார் பிரவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.1.63 லட்சத்தில் கட்டப்பட்டது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகில் உள்ள வேப்பேரி கிராமத்தில் 2011-12-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் மகளிர் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் ரூ.1.63 லட்சத்தில் கட்டப்பட்டது.

    சிறிது காலம் மக்கள் பயன்பாட்டில் இருந்தது. இதனிடையே, சுகாதார வளாகத்தை மூடி விட்டனர். அங்குள்ள மக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    சுகாதார வளாகத்தை திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 10 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    திருநெல்வேலி உட்கோட்ட ரெயில்வே போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று மதியம் ஜார்கண்ட் மாநிலம் பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் ரெயில் நிலையம் வரை கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரெயிலின் முன்பக்க பொது பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில் 10 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து ரெயில்வே போலீஸ் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • அதிகாரி எச்சரிக்கை
    • விலை பட்டியல் வைக்க அறிவுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வடமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் மொத்தம் மற்றும் சில்லறை உர விற்பனை நிலையங்களில் விலை பட்டியல் இல்லாமல் இருந்தால்.

    அனுமதி இல்லாத நிறுவனங்களில் இருந்து உரங்களை கொள்முதல் செய்தால் உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதேபோல் விவசாயிகள் அல்லாத நபர்களுக்கு உரங்கள் விற்பனை செய்தல் அல்லது யூரியா உரத்துடன் கூடுதல் பொருட்கள் வாங்க விவசாயிகளை நிர்ப்பந்திப்பது இது போன்ற விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்

    • மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூரில் மகாலட்சுமி மாற்று மருத்துவ மையம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய முகாமிற்கு ஒன்றிய கவுன்சிலர் ஆஷா பாக்யராஜ் தலைமை தாங்கினார்.

    அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமியின் தேசிய தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொணடு குத்து விளக்கேற்றி மருத்துவ முகாமை ெதாடங்கி வைத்தார்.

    மாநில இணை தலைவர் டாக்டர் எஸ்.இலட்சியகுமார் 100-க்கும் மேற்பட்டவர்களை பரிசோதித்து மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினார். 

    • பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு

    அரக்கோணம்:

    அரக்கோணம் பழனிப்பேட்டையில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாயன கொள்ளை திருவிழா நடந்தது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த இந்த திருவிழா இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடந்தது.

    பல வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அங்காள அம்மன் ஜகடையில் ஏறி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மயான கொள்ளை பெருவிழாவில் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறுற்றும் வகையில் பக்தர்கள் அம்மனின் பல்வேறு அவதாரங்களில் வேடமிட்டும், முதுகில் கொக்கியால் ஆட்டோ, கார் ஆகியவற்றை இழுத்தும், ஆண்கள், பெண்கள் அலகு குத்தியும், பெண்கள் வேப்பிலையுடன் தீச்சட்டி எடுத்தும், காளி, காளி வேடமிட்டும் மயான கொள்ளை விழாவில் கலந்து கொண்டு மோசூர் ரோட்டில் உள்ள சுடுகாட்டிற்கு சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    விழாவில் அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்க ணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • போலீசார் கைது செய்து விசாரணை
    • மயான கொள்ளை விழாவையொட்டி போலீசார் தீவிர ரோந்து பணி

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மயான கொள்ளை விழாவை முன்னிட்டு அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனையொட்டி நகரில் பல இடங்களில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனை மேற்கொண்டும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பழைய குற்றவாளி களை பிடிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் வின்டர்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே அவ்வழியாக சென்ற பொது மக்களை உருட்டு கட்டையை வைத்துக்கொண்டு குருபிரசாத் (வயது 26) என்பவர் இடையூறு ஏற்படுத்தி வந்தார்.

    இதுகுறித்து பொதுமக்கள் அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் குரு பிரசாத்தை கைது செய்து உருட்டு கட்டையை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

    • ரோட்டை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாவை அடுத்த வன்னிவேடு பகுதி பைபாஸ் ரோட்டில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக முதியவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்த இறந்தவர் யார் என்பது குறித்தும் விபத்துக்கு காரணமான வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்திய குடியரசு கட்சி தலைவர் செ‌.கு. தமிழரசன் பேட்டி
    • பண நடமாட்டத்தை குறைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக குற்றச்சாட்டு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

    "ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் போட்டியிடு கின்றனர்.

    ஆனால், திமுக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசின் ஆதரவுடன் அதிமுக வும் களம் காண்கிறது. திமுக இதுவரை இல்லாத வகையில் புதுவிதமான அரசியல் முன்னெடுப்பை எடுத்துள்ளது.

    அந்தக் கட்சி ஆட்சியில் இருந்து தோழமைக் கட்சிக்கு வாய்ப்பு அளித்தது. ஜனநாயகத்தின் இது ஒரு நல்ல பண்பு ஆனால் இந்த தேர்தலில் நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

    மேலும், திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் இருந்தும், தேர்தலின் போது அறிவித்த பெரும்பா லான திட்டங்கள் செயல்படுத்தப் படவில்லை.

    குறிப்பாக, ஏழை- எளிய மக்களுக்கான சிறப்பான திட்டங்கள் இல்லை. மேலும், இடைத்தேர்தலை பொறுத்தவரையில் பண நாயகமே அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது.

    இந்த தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் அதிக தொகையை ஒதுக்கீடு செய் துள்ளது. அவ்வளவு நிதியை ஏன் ஒதுக்க வேண்டும். பண நடமாட்டத்தை குறைக்க ஏன் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என புரியவில்லை.

    இதனால் கார்ப்பரேட் அரசியல் வந்துவிடும். தனிமனித சுதந்திரம், உரிமை, கருத்து சுதந்திரம் அழிந்து விடும். அத்தகைய வகையில் ஈரோடு தேர்தல் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.

    எனவே, ஏழை, எளிய மக்கள் பணம், பொருட்களுக்கு ஆசை ப்படாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும்" என்றார். அப்போது, மாநில பொதுச் செயலாளர் பிரபு, இணை பொதுச் செயலாளர் மங்காபிள்ளை, பொரு ளாளர் கவுரி சங்கர், மாவட்டத் தலைவர் சிவக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

    ×