என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரக்கோணத்தில் மாயன கொள்ளை திருவிழா
- பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
- ஏராளமான போலீசார் பாதுகாப்பு
அரக்கோணம்:
அரக்கோணம் பழனிப்பேட்டையில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாயன கொள்ளை திருவிழா நடந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த இந்த திருவிழா இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடந்தது.
பல வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அங்காள அம்மன் ஜகடையில் ஏறி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மயான கொள்ளை பெருவிழாவில் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறுற்றும் வகையில் பக்தர்கள் அம்மனின் பல்வேறு அவதாரங்களில் வேடமிட்டும், முதுகில் கொக்கியால் ஆட்டோ, கார் ஆகியவற்றை இழுத்தும், ஆண்கள், பெண்கள் அலகு குத்தியும், பெண்கள் வேப்பிலையுடன் தீச்சட்டி எடுத்தும், காளி, காளி வேடமிட்டும் மயான கொள்ளை விழாவில் கலந்து கொண்டு மோசூர் ரோட்டில் உள்ள சுடுகாட்டிற்கு சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
விழாவில் அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்க ணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






