என் மலர்
நீங்கள் தேடியது "Fertilizer license cancellation"
- அதிகாரி எச்சரிக்கை
- விலை பட்டியல் வைக்க அறிவுறுத்தல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வடமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் மொத்தம் மற்றும் சில்லறை உர விற்பனை நிலையங்களில் விலை பட்டியல் இல்லாமல் இருந்தால்.
அனுமதி இல்லாத நிறுவனங்களில் இருந்து உரங்களை கொள்முதல் செய்தால் உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல் விவசாயிகள் அல்லாத நபர்களுக்கு உரங்கள் விற்பனை செய்தல் அல்லது யூரியா உரத்துடன் கூடுதல் பொருட்கள் வாங்க விவசாயிகளை நிர்ப்பந்திப்பது இது போன்ற விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்






