search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vote honestly"

    • இந்திய குடியரசு கட்சி தலைவர் செ‌.கு. தமிழரசன் பேட்டி
    • பண நடமாட்டத்தை குறைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக குற்றச்சாட்டு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

    "ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் போட்டியிடு கின்றனர்.

    ஆனால், திமுக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசின் ஆதரவுடன் அதிமுக வும் களம் காண்கிறது. திமுக இதுவரை இல்லாத வகையில் புதுவிதமான அரசியல் முன்னெடுப்பை எடுத்துள்ளது.

    அந்தக் கட்சி ஆட்சியில் இருந்து தோழமைக் கட்சிக்கு வாய்ப்பு அளித்தது. ஜனநாயகத்தின் இது ஒரு நல்ல பண்பு ஆனால் இந்த தேர்தலில் நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

    மேலும், திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் இருந்தும், தேர்தலின் போது அறிவித்த பெரும்பா லான திட்டங்கள் செயல்படுத்தப் படவில்லை.

    குறிப்பாக, ஏழை- எளிய மக்களுக்கான சிறப்பான திட்டங்கள் இல்லை. மேலும், இடைத்தேர்தலை பொறுத்தவரையில் பண நாயகமே அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது.

    இந்த தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் அதிக தொகையை ஒதுக்கீடு செய் துள்ளது. அவ்வளவு நிதியை ஏன் ஒதுக்க வேண்டும். பண நடமாட்டத்தை குறைக்க ஏன் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என புரியவில்லை.

    இதனால் கார்ப்பரேட் அரசியல் வந்துவிடும். தனிமனித சுதந்திரம், உரிமை, கருத்து சுதந்திரம் அழிந்து விடும். அத்தகைய வகையில் ஈரோடு தேர்தல் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.

    எனவே, ஏழை, எளிய மக்கள் பணம், பொருட்களுக்கு ஆசை ப்படாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும்" என்றார். அப்போது, மாநில பொதுச் செயலாளர் பிரபு, இணை பொதுச் செயலாளர் மங்காபிள்ளை, பொரு ளாளர் கவுரி சங்கர், மாவட்டத் தலைவர் சிவக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

    ×