என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கோபாலபட்டினம் கிராமத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் தரைப்பகுதியின் கீழ் குழிதோண்டி பதுக்கப்பட்ட ரூ.30 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    கோட்டைப்பட்டினம்:

    மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டினம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கோட்டைப்பட்டினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவராமன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார், கோபாலபட்டினம் கிராமத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அந்த கடையின் தரைப்பகுதியின் கீழ் குழி தோண்டி, அதில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தரையை தோண்டி, அங்கிருந்த சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த அதே பகுதியை சேர்ந்த கடையின் உரிமையாளர் சபியுல்லாவை(வயது 38) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் 70 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,011-ஆக உயர்ந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 941 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 523 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 407 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 70 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,011-ஆக உயர்ந்துள்ளது.
    கறம்பக்குடி அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் கறம்பக்குடி அம்புக்கோவில் முக்கம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த வீரமுத்து(வயது 29), நேதாஜி(39), புதுப்பட்டியை சேர்ந்த இளமுருகு(47) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பரிதாபமாக இறந்தார். மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 75 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவு நேற்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 907 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 506 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 43 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் 391 பேர் சிகிச்சையில் உள்ளனர். இறப்பு எண்ணிக்கை 10 ஆக உள்ளது.

    இந்நிலையில் சில நாட்களுக்கு கீரனூர் அருகே இளையாவயல் கிராமத்தை சேர்ந்தவரான, 65 வயதுடைய ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவருடைய உடல் புதுக்கோட்டை போஸ்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும் இளையாவயல் கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    திருமயம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் திருச்சியில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு தற்போது உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் அவருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அறந்தாங்கி ஒன்றியத்தில் இதுவரை 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 26 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அறந்தாங்கி பகுதியில் கொரோனா அதிக அளவில் பரவிவரும் நிலையில் மருத்துவமனைக்கு விரைவில் தலைமை டாக்டரை சுகாதாரத்துறையினர் நியமனம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆலங்குடி பள்ளிவாசல் தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
    வடகாடு பகுதியில் வாழைத்தார் விலை குறைந்துள்ளதோடு, விற்பனையும் மந்தமாக உள்ளது, என்று விவசாயிகள் கவலையுடன் கூறினர்.
    வடகாடு:

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மற்றும் மாங்காடு, புள்ளான்விடுதி, அனவயல், தடியமனை, எல்.என்.புரம், ஆவனம் கைகாட்டி, கொத்தமங்கலம், மறமடக்கி, கீரமங்கலம், கறம்பக்காடு போன்ற ஊர்களில் அதிகப்படியான அளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து வாழைத்தார்கள் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு மொத்த வியாபாரிகள் மூலமாக விற்பனைக்காக கொண்டு செல்லப்படும்.

    இந்நிலையில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து வாழைத்தார்களை வாங்க வியாபாரிகள் முன்வராததால் வாழைத்தார்கள் மரங்களிலேயே பழுத்து அணில், பறவைகளுக்கு உணவானது. ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னர் வடகாடு, மாங்காடு, ஆவனம் கைகாட்டி போன்ற ஊர்களில் உள்ள கமிஷன் கடைகள் மூலமாக, நல்ல தரமான வாழைத்தார் எடை கணக்கில் கிலோ ரூ.7 மற்றும் ரூ.8 என்ற விலையில் வாங்கப்படுகிறது. 4 மற்றும் 5 அடி உயரம் உள்ள பெரிய வாழைத்தார் 30 கிலோ வரை எடை வரும் என்றும், இந்த சீசனில் ரூ.1,200 வரை விலை போகக்கூடிய வாழைத்தார் ஒன்று தற்போது ரூ.200 முதல் ரூ.250 வரை மட்டுமே விலை போகிறது. மற்ற சாதாரண வாழைத்தார்கள் ரூ.40 மற்றும் ரூ.50 என்ற விலையிலேயே வாங்கப்படுகிறது. விற்பனையும் மந்தமாக உள்ளது.

    இவ்வாறு கமிஷன் கடைகளில் இருந்து வாங்கப்படும் வாழைத்தார்கள் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற ஊர்களுக்கு சரக்கு வாகனங்கள் மூலமாக கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. தொடரும் ஊரடங்கு காரணமாக மதுரை, திண்டுக்கல், பழனி, உடுமலைப்பேட்டை போன்ற ஊர்களில் வாழைத்தார்களை வாங்க வியாபாரிகள் முன்வர மறுப்பதாகவும் கூறப்படுகிறது.

    இப்பகுதிகளுக்கு வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டால் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு வாழைத்தார்கள் ஏற்றுமதி ஆனாலும் அங்கேயும் விலை குறைவாகவே வாங்கப்படுவதாகவும் வியாபாரிகள் கூறினர். இதனால் வாழை விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
    மானிய விலையில் நெல், பயறு வகை விதைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவரங்குளம்:

    புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வேளாண் விரிவாக்க மையம் உள்ளது. இந்த மையத்தில் இருந்து திருவரங்குளம், வேப்பங்குடி, தேத்தாம்பட்டி, காயாம்பட்டி, கல்லுப்பள்ளம், மாங்கனாம்பட்டி, மாஞ்சா விடுதி, மழவராயன் பட்டி, வம்பன் நாலு ரோடு, கொத்தக்கோட்டை, தெட்சிணாபுரம், வல்லத்திராகோட்டை, பூவரசகுடி, கைக்குறிச்சி, திருக்கட்டளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல் விதை, உளுந்து, தட்டைப்பயிறு, கடலை உள்ளிட்ட பயறு வகை விதைகளை மானிய விலையில் பெற்று விவசாயம் செய்து வந்தனர்.

    கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் காரணமாக விரிவாக்க மைய கட்டிடம் பழுதடைந்தது. இதன் காரணமாக இந்த கட்டிடத்தை இங்கிருந்து வம்பன் நாலு ரோட்டுக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் முயற்சி செய்ததை அறிந்து விவசாயிகள், வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைத்தொடர்ந்து, வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை சீரமைத்து இங்கு மீண்டும் செயல்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரை கட்டிடத்தை சீரமைக்கும் பணி நடைபெறவில்லை. தற்போது இப்பகுதியில் மழை பெய்து வருவதால், இதனை பயன்படுத்தி வேளாண் பணிகளை மேற்கொள்ள நெல், கடலை உள்ளிட்ட பயறு வகை விதைகளை மானிய விலையில் இந்த மையத்தில் இருந்து பெற முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் வம்பனில் நாலுரோடு பகுதியில் செயல்படும் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு தேவையான நெல் ரக விதைகள் மற்றும் கடலை, உளுந்து, பாசிப்பருப்பு, தட்டைப்பயறு போன்ற பயறு வகை விதைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு மானியம் வழங்காமல் முழு விலையிலேயே விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இதேபோல், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படும் ஆலங்குடி, வடகாடு பகுதிகளில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் பெரும்பாலும் திறக்கப்படுவதே இல்லை என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால், விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    மேலும், கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. புயல் பாதிப்புக்கு பிறகு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தென்னை மரக்கன்றுகளில் பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    மத்திய, மாநில அரசுகள் விவசாயத்திற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய போதிலும் அந்த தொகை விவசாயிகளை முழுமையாக சென்றடையவில்லை என்பதே இப்பகுதி விவசாயிகளின் குற்றச்சாட்டு ஆகும். ஆகவே, வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக வழங்கப்படுகிறதா என்பதை மாவட்ட கலெக்டர் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் நெல் மற்றும் அனைத்து பயறு வகை விதைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கீரமங்கலம் பகுதியில் புயலால் பாதித்த தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டி விற்பனை செய்து வருகின்றனர்.
    கீரமங்கலம்:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால், பலத்த சேதம் ஏற்பட்டது. மா, பலா, தேக்கு, தென்னை, சந்தனம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதேபோல் ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்து நின்றன.

    அந்த மரங்கள் சில மாதங்களில் பலன் கொடுக்கும் என்று காத்திருந்த விவசாயிகள், அதற்கான இயற்கை உரங்கள், ரசாயன உரங்கள் வைத்து தண்ணீர் பாய்ச்சினர். ஆனால் அந்த மரங்கள் துளிர்கூட விடாமல் அப்படியே நிற்கின்றன. இதனால் மேலும் செலவுகள் செய்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்த விவசாயிகள் கீரமங்கலம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் தென்னை மரங்களை மொத்தம் மொத்தமாக வெட்டி அழித்து செங்கல் சூளைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

    இதுகுறித்து, கொத்தமங்கலத்தில் ஒரு தோப்பில் காய்ந்த மரங்களை வெட்டிக் கொண்டிருந்த விவசாயி வளர்மதி கூறுகையில், என்னிடம் பெரிய தென்னந்தோப்பு இருந்தது. தென்னை மரங்களில் இருந்து ஒரு முறை தேங்காய் பறித்தால் ரூ.2 லட்சம் வரை விற்பனை ஆகும். ஆனால் புயலுக்கு பிறகு மரங்கள் காய்க்கவில்லை. செலவு மட்டுமே செய்ய வேண்டியுள்ளது. அதனால் தற்போது எனது தோப்பில் நிற்கும் 200 தென்னை மரங்களை வெட்டி வருகிறேன். அவற்றை சேலத்திற்கு செங்கல் சூளைகளுக்கு வாங்கிச் செல்கிறார்கள்.

    அதாவது ஒரு மரத்தை வெட்டி அகற்ற ரூ.300 செலவாகிறது. ஆனால் ஒரு மரத்தை ரூ.250-க்கு வாங்கி செல்கிறார்கள். இதனால் ஒவ்வொரு மரத்திற்கும் ரூ.50 வரை நஷ்டம் ஏற்படுகிறது. மொத்த மரங்களையும் வெட்டி அகற்றிவிட்டு சிறு காய்கறி விவசாயம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதேபோல்தான் அனைத்து பகுதியிலும் புயலில் பாதித்த தென்னை மரங்கள் பலனின்றி நிற்கிறது, என்றார்.

    அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே உள்ள பெரிய மூக்குடியை சேர்ந்தவர் இளங்கோ(வயது 52). விவசாயி. இவரது வீட்டில் உள்ள தண்ணீர் உறிஞ்சும் மோட்டார் பழுதடைந்தது. அதனை சரிசெய்ய இளங்கோ, மோட்டாரை பிரித்து சுவிட்ச் போர்டில் மின்சார வயரை சொருகி வேலை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவரை உறவினர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான ராஜா போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியுள்ள நிலையில் இரு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் என்ற கிராமத்தில் வசித்து வந்த 7 வயது சிறுமியை ராஜா என்ற பூக்கடைக்காரர் பலாத்காரம் செய்து பின்னர் சிறுமியின் கழுத்தை அறுத்து கொன்று கண்மாயில் உள்ள புதரில் வீசிவிட்டார். இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் இன்று குற்றவாளி ராஜா போலீசாரிடம் இருந்து தப்பியோடினார்.  புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது கைவிலங்கை உருவிக்கொண்டு தப்பியோடிய ராஜாவை 6 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ராஜா தப்பியோடிய நிலையில் இரு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  காவலர்கள் முருகையன், கோகுலகுமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.  
    புதுக்கோட்டை மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 825-ஆக உயர்ந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 780 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 463 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 825-ஆக உயர்ந்துள்ளது. 
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான ராஜா போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் என்ற கிராமத்தில் வசித்து வந்த 7 வயது சிறுமியை ராஜா என்ற பூக்கடைக்காரர் பலாத்காரம் செய்து பின்னர் சிறுமியின் கழுத்தை அறுத்து கொன்று கண்மாயில் உள்ள புதரில் வீசிவிட்டார். இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் இன்று குற்றவாளி ராஜா போலீசாரிடம் இருந்து தப்பியோடியுள்ளார்.

    புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது கைவிலங்கை உருவிக்கொண்டு தப்பியோடிய ராஜாவை 6 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டையில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் அளவுக்கு அதிகமாக மின் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.
    புதுக்கோட்டை:

    ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் அளவுக்கு அதிகமாக மின் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆம் ஆத்மி கட்சி, மாவட்ட திருநங்கைகள் நலச்சங்கம் சார்பில் குழந்தைகளை கொண்டு வாய்ப்பாடு மூலம் மின்சார ஊழியர்களுக்கு கணக்கு சொல்லி கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஷ் தலைமை தாங்கினார். ஆம்ஆத்மி கட்சியின் மாவட்ட செயலாளர் அருண்மொழி முன்னிலை வகித்தார்.

    ஊரடங்கு காலத்தில் உரிய நேரத்தில் கணக்கெடுப்பு செய்யாதது மின்சார வாரியத்தின் தவறே. தற்போதைய ஊரடங்கு காலத்தினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களின் மின்சார இணைப்பை துண்டித்து, அபராதமும் கேட்டு வருவதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
    ×