என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    தான் வெற்றி பெற்றால் மாணவர்களின் எதிர்காலத்திற்கேற்ற திட்டங்களை கொண்டு வர பாடுபடுவேன் என தி.மு.க. பெண் வேட்பாளர் வாக்குறுதி அளித்து வருகிறார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி மூன்றாவது வார்டில் போட்டியிடும் தி.மு.க. பெண் வேட்பாளர் பி.எட். பட்டதாரி என்பதால் அவர் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் மாணவ, மாணவிகளை அமர வைத்து பாடம் நடத்தி வாக்காளர்களை கவர்ந்து வருகிறார். 

    தான் வெற்றி பெற்றால் மாணவர்களின் எதிர்காலத்திற்கேற்ற திட்டங்களை கொண்டு வர பாடுபடுவேன் என்ற வாக்குறுதியை அளித்து வருகிறார். 

    அதேபோல் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் தேங்காயை கொண்டு ஆரத்தி எடுத்தும், தேங்காய் உடைத்தும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 
    அடுப்பாங்கரை வரை சென்று வாக்கு கேட்பதால் அவர்களின் மனதில் நிற்கும் வேட்பாளராக நான் இருப்பேன் என பெருமையுடன் கூறி வருகிறார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் 4-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரான பி.இ. பட்டதாரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் வீடு, வீடாக சென்று காலை நேரங்களில் சமையல் செய்து கொண்டிருக்கும் பெண்களுக்கு உதவுவதாக கூறி அவர்களுக்கு காய்கறிகளை அரிவாள்மனையில் நறுக்கி கொடுத்து ஓட்டு வேட்டையாடி வருகிறார். 

    அடுப்பாங்கரை வரை சென்று வாக்கு கேட்பதால் அவர்களின் மனதில் நிற்கும் வேட்பாளராக நான் இருப்பேன் என்று அவர் பெருமையுடன் கூறி வருகிறார். 
    மாநில அளவில் கிராம விருது பெறுவதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ்  சுகாதாரம் மற்றும் துப்புரவு தொடர்பான பணிகள் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களின் கீழ் சிறப்பாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
     
    சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசால், முன் மாதிரி கிராம விருது உருவாக்கப்பட்டு,  அதன் அடிப்படையில் மாநில அளவில் தேர்வு செய்யப்படும் மூன்று ஊராட்சிகளுக்கு தலா ரூ.15 லட்சம் பரிசுத் தொகையும் கேடயமும்,  மாவட்ட அளவில் ஒரு கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு ரூ.7.50 லட்சம் பரிசுத் தொகையும் கேடயமும், வழங்கப்படவுள்ளது.
     
    இதற்காக, புதுக்கோட்டை மாவட்டத் திலுள்ள  497 ஊராட்சி களிலும் சுகாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட வேண்டி விழிப் புணர்வு ஏற்படுத்த வட்டாரத்திற்கு 2 ஊராட்சிகள் வீதம் மொத்தம் 26 முன்மாதிரி நிறை செறிவு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு இவ்வூராட்சிகளில் சமூக வரைபடம், மூன்று கட்ட கழிவு தணிக்கை, திடக்கழிவு மேலாண்மை கூடங்கள் மறுசீரமைப்பு, சாம்பல் நீர் மேலாண்மை, பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை,  தூய தெருக்கள் பராமரிப்பு ஆகிய பல்வேறுகட்ட பணிகள் திட்டமிடப் பட்டு நடைபெற்று வருகின்றன. 


    எனவே, இந்த பணிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தன்னார் வலர்கள், மகளிர் சுய உதவிக்குழுகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் சிறப்பாக செயல்பட்டு மாநிலத்தில் முதற்பரிசினை பெறத்தக்க வகையில் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக் கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குவதுடன் பொதுமக்கள் தங்களின் வீட்டையும், சுற்றுப் புறத்தையும் குப்பைகள் சேரா வண்ணம் பராமரிக்கவும், சுகாதார பழக்க வழக்கங்களை மேற் கொள்ளவும், அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.




     
    ஆலங்குடி கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவின் போது  வாழவந்த பிள்ளையார்,   பேச்சியம்மன், முத்துமாரியம்மன் என ஒரே நேரத்தில் 3  தேரோட்டம் நடை பெறும். 

    சிறுவர்கள் மட்டும் ஒரு தேரையும்,  பெண்கள் மட்டும் ஒரு தேரையும் இழுத்து செல்லும் போது, கடைசியாக முத்துமாரியம்மன்  வீற்றிருக் கும்  பெரிய  தேரை  ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் இணைந்து இழுத்துச் செல்வது வழக்கம்.

    முத்து மாரியம்மனுக்கு இழுக்கப்படும்   வைர  தேர் சுமார் 80  ஆண்டுகள்  பழமை யானதாக   கூறப்படுகிறது. இந்நிலையில் தேரில் மரஅச்சு மற்றும் சக்கரங்களில் சிறுசிறு பழுது ஏற்பட்டு இருந்தது.
    இதைத் தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் குழுவினர் இணைந்து புதிய மர அச்சு மற்றும் சக்கரங்களை மராமத்து பணிகள் செய்து பழமையான தேருக்கு வர்ணம் தீட்டி புதுப்பித்துள்ளனர். 

    இந்த பழமையான வைர தேர் வெள்ளோட்டம்  நடந்தது. வெள்ளோட்டத்தின் போது மக்கள் இசைமற்றும் வாண வேடிக்கைகளும் பெண்களின் கும்மி ஆட்டமும் நடந்தது.  இதில் கொத்தமங்கலம்  சுற்று வட் டார கிராமங்களில்  இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தேர்  வெள்ளோட்டத்தை வடம் பிடித்தனர். பின்னர் தேர் நிலைக்கு வந்தது.

    ஜல்லிக்கட்டு போட்டியில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக இலுப்பூர், விராலிமலை, திருச்சி, புதுக்கோட்டையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள திருநல்லூரில் முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. காளைகளை அடக்க 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

    இதில் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் அருகே உள்ள கீழப்பட்டியை சேர்ந்த கபடி வீரரும், விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த பாண்டி முருகன் (வயது 19) என்பவர் ஒரு காளை முட்டியதில் உயிரிழந்தார்.

    மேலும், இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். அவர்களில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக இலுப்பூர், விராலிமலை, திருச்சி, புதுக்கோட்டையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    பார்வையாளராக சென்று ஜல்லிக்கட்டு போட்டியை திம்மயம்பட்டியை சேர்ந்த மணி (45) என்பவர் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது பாய்ந்து வந்த மாடு முட்டியதில் அவரது வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் திருநல்லுர் ஜல்லிக்கட்டில் உயிரிழப்பு இரண்டாக உயர்ந்துள்ளது.
    முன்மாதிரி சிறப்பு விருது பெற விண்ணப்பிலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு வெளியிட்டள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதா£வது:

    திருநங்கைகள் சமூகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளையும் மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியவர்களில் ஒருவருக்கு திருநங்கையர் தினமான ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ம் தேதியன்று  திருநங்கையருக் கான முன்மாதிரி சிறப்பு விருதான ரூ.1 லட்சம் (காசோலை) மற்றும் சான்று  வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு விருதை பெற புதுக்கோட்டை மாவட்டத்தில் தகுதியுடைய திருநங்கைள்  விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக 04322&222270 என்ற  தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார். 
    பள்ளிகளில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க அறிவுறுத்தல்
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாப்பான் விடுதியைச் சேர்ந்தவர் நாடிமுத்து மகன் நித்தீஸ்குமார் (வயது 9) இவர் பாப்பான் விடுதி அரசு நடுநிலைப்பள்ளியில் 4&ம் படித்து வந்தார். இவர் கடந்த 8&ந்தேதி பள்ளியில் இருந்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை ஆசிரியர் ஒருவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். 

    தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நித்தீஸ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து சிறுவனின் உடல்நலனில் அஜாக்கிரதையாக இருந்ததாக, பள்ளி தலைமை  ஆசிரியர் மகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர் ஆரோக்கிய அமல்ராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

    இந்நிலையில் இவர்களின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி பாப்பான் விடுதியில் மாணவர்களும், பெற்றோர்களும் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே வேளையில் அப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் பகுதி மாணவர்களையும் பள்ளிக்கு செல்லவிடாமல் தடுப்பதாக கூறி மாணவர் நித்தீஸ்குமாரின் உறவினர்களும் அப்பகுதியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    தகவலறிந்த ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி, டி.எஸ்.பி. வடிவேல், வட்டாரக்கல்வி அலுவலர் கருணாகரன் ஆகியோர் போராட்டம் நடைபெற்ற 2 இடங்களுக்கும் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து 2 இடங்களிலும் போராட்டம் கைவிடப்பட்டது. 

    இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி பேசியதாவது : பள்ளியில் எத்தகைய அசம்பாவிதமும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளியில் எந்த நிகழ்வு நேரிட்டாலும் உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது சமயோஜிதமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். 
    கிராம நிர்வாக உதவியாளர் பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் யூனியன், மதியநல்லூர் ஊராட்சியில் கிராம நிர்வாக உதவியாளராக பணி செய்து வந்தவர் கருப்பையா (வயது50). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை தென்னலூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அங்கு சில பணிகள் செய்வதற்காக கருப்பையா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    வாகனம் சென்னப்ப நாயக்கன்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு, மின்னல்வேகத்தில் சென்றுவிட்டது.

    இந்த விபத்தில் கருப்பையா தூக்கி வீசப்பட்டு, பலத்த காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதைபார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவம் நடத்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு இறந்து கிடந்த கருப்பையாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

    பிறகு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடிவருகின்றனர்.
    ஜல்லிக்கட்டு பணிக்கு சென்ற கிராம நிர்வாக உதவியாளர் பலியான சம்பவம் அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்தம் செய்வதில் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்துள்ள புகார் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கோட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கறம்பக்குடி தாலுகா மாங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட புதுப்பட்டி கிராமத்தில் 600 குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் 150 குடும்பங்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டியில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்தம் செய்ய மறுக்கப்படுவதாகவும், மேலும் மிரட்டப்படுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இதனால் முடி வெட்டுவதற்காக கறம்பகுடி நகருக்குச்செல்ல வேண்டியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே புதுப்பட்டிக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பி பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக தீண்டாமையை பின்பற்றுபவர்கள் மீது நட வடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    கடந்த 9-ந்தேதி தாக்கல் செய்த இந்த மனு நீதிபதி பரேஷ் உபாத்யா கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவில் உள்ள வி‌ஷயம் உண்மையாக இருந்தால் பெரும் அதிர்ச்சி தரும் வி‌ஷயமாகும். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதிகள் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை கோட்டாட்சியர் அபிநயா தனது அலுவலகத்தில் வைத்து விசாரணையை தொடங்கினார். இதில் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள், கோர்ட்டில் மனு தாக்கல் செய்த செல்வம் மற்றும் முடிதிருத்தும் சலூன் கடை வைத்திருப்பவர்கள் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை புதுக்கோட்டையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்கள் நேரில் ஆஜரானார்கள். தற்போதைய சூழ்நிலையில் புதுப்பட்டி பகுதி பட்டியலின் மக்களின் பாதுகாப்பு அடிப்படையாக கொண்டு நேரில் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தப்படவில்லை.

    பட்டியலின் மக்களின் எண்ண கருத்தின் அடிப்படையில் வருகிற திங்கட்கிழமை நேரில் புதுப்பட்டி கிராமத்திற்கு சென்று கள ஆய்வு நடத்தி, கோட்டாட்சியர் அபிநயா விசாரணை நடத்த இருக்கிறார். தொடர்ந்து அங்கு வசிக்கும் அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்தம் செய்வதில் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்துள்ள இந்த புகார் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குதிரை சிலைக்கு அணிவிப்பதற்கான காகித பூ மாலை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம்  கிராமத்தில் வில்லுனி  ஆற்றங்கரையில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் உள்ளது. 

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி  மகத்திருவிழா நடைபெறும். அப்போது 35 அடி உயர குதிரை சிலைக்கு காகித பூ மாலைகள் பக்தர்கள் காணிக்கையாக அணி விப்பது வழக்கம். 

    கிராமத்தின்  சார்பில் மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக வந்து முதல் மாலை அணிவிப்பார்கள். அதன் பிறகு பக்தர்கள், மலர்கள், பழங்கள் கட்டப்பட்ட மாலை  அணிவிப்பார்கள். 

    ஒவ்வொரு  ஆண்டும் குதிரை சிலைக்கு  ஆயிரக்கணக்கான மாலைகள்   அணிவிக்கப் படுவதால்     அதனைக்காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். 

    இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான மாசிமகத் திருவிழா வருகிற 17ம்தேதி நடக்கிறது. மேலும் கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து திருவிழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    இதனையடுத்து கீரமங் கலம்,   கொத்தமங்கலம், குளமங்கலம்,   மரமடக்கி, ஆவணத்தான்கோட்டை, திரு நாளூர், திருச்சிற்றம்பலம் உள்பட பல்வேறு கிராமங்களில் பிரம்மாண்ட குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலை கட்டும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது 
    மேலும் கூட்டத்தை  தவிர்ப்பதற்காகவும்,  பக்தர்கள் சிரமமின்றி  வந்து  செல்வதற்கு வசதியாக  மாசிமக திருவிழா 17-ம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக அதாவது 16ம் தேதி காலையிலேயே கிராமத்தின் சார்பில் முதல் மாலை அணிவித்து  தொடர்ந்து பக்தர்கள் மாலை அணிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
    மாணவர்களுக்கு தொழுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் அரசு மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் தொழு நோய் ஸ்பர்ஸ் சிறப்பு கருத்தரங்கு  நடைபெற்றது. 

    நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அரங்கசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். தொழுநோய் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறை குறித்து புதுக்கோட்டை மாவட்ட துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட    நலக்கல்வியாளர்    வெங்கட்ராமன் சிறப்புரை ஆற்றினார். 


    கருத்தரங்கில் தொழுநோய் குறித்த சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்வில் மருத்துவமல்லா மேற்பார்வையாளர்  ஹரி கரன்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர்பழனி, மருத்துவமல்லா மேற் பார்வையாளர்   பொறுப்பு ரமா ராமநாதன்,  சுகாதார ஆய்வாளர்கள் சிதம்பர ராஜா,  விக்னேஷ் ஆகியோர் பங்கேற்றனர். 

    இதில் 1300 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
    குடிபோதையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
    புதுக்கோட்டை: 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாப்பான் விடுதியில் அந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக மேல் நிலை தேக்கதொட்டி அமைக்கப்பட்டு மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் அந்தநீர் தேக்க தொட்டி மேல் ஏறி வாலிபர் ஒருவர்குதித்து தற்கொலை செய்து  கொள்வதாக மிரட்டல் விடுத்தார். 

    இதனால்  பதறிபோன அந்த பகுதி மக்கள் இது குறித்து ஆலங்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத் தனர். அவர்கள் விரைந்து சென்று நீர் தேக்க தண்ணீர் தொட்டியில் ஏறி கயிறு மூலம் தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை பத்திரமாக மீட்டனர். 

    விசாரணையில் தற் கொலை மிரட்டல் விடுத்தவர் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 32) என்றும் அவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. 

    குடிபோதையில்    மேல் நிலை    நீர்த்தேக்கத்தொட்டி மேல் ஏறி  தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×