என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி முத்துமாரியம்மன் கோவிலில் தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.
முத்துமாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்
ஆலங்குடி கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவின் போது வாழவந்த பிள்ளையார், பேச்சியம்மன், முத்துமாரியம்மன் என ஒரே நேரத்தில் 3 தேரோட்டம் நடை பெறும்.
சிறுவர்கள் மட்டும் ஒரு தேரையும், பெண்கள் மட்டும் ஒரு தேரையும் இழுத்து செல்லும் போது, கடைசியாக முத்துமாரியம்மன் வீற்றிருக் கும் பெரிய தேரை ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் இணைந்து இழுத்துச் செல்வது வழக்கம்.
முத்து மாரியம்மனுக்கு இழுக்கப்படும் வைர தேர் சுமார் 80 ஆண்டுகள் பழமை யானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேரில் மரஅச்சு மற்றும் சக்கரங்களில் சிறுசிறு பழுது ஏற்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் குழுவினர் இணைந்து புதிய மர அச்சு மற்றும் சக்கரங்களை மராமத்து பணிகள் செய்து பழமையான தேருக்கு வர்ணம் தீட்டி புதுப்பித்துள்ளனர்.
இந்த பழமையான வைர தேர் வெள்ளோட்டம் நடந்தது. வெள்ளோட்டத்தின் போது மக்கள் இசைமற்றும் வாண வேடிக்கைகளும் பெண்களின் கும்மி ஆட்டமும் நடந்தது. இதில் கொத்தமங்கலம் சுற்று வட் டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வெள்ளோட்டத்தை வடம் பிடித்தனர். பின்னர் தேர் நிலைக்கு வந்தது.
Next Story






