என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீர்தேக்க தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் மிட்ட போது எடுத்த பட
தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு
குடிபோதையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாப்பான் விடுதியில் அந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக மேல் நிலை தேக்கதொட்டி அமைக்கப்பட்டு மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்தநீர் தேக்க தொட்டி மேல் ஏறி வாலிபர் ஒருவர்குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.
இதனால் பதறிபோன அந்த பகுதி மக்கள் இது குறித்து ஆலங்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத் தனர். அவர்கள் விரைந்து சென்று நீர் தேக்க தண்ணீர் தொட்டியில் ஏறி கயிறு மூலம் தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை பத்திரமாக மீட்டனர்.
விசாரணையில் தற் கொலை மிரட்டல் விடுத்தவர் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 32) என்றும் அவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது.
குடிபோதையில் மேல் நிலை நீர்த்தேக்கத்தொட்டி மேல் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






