என் மலர்
புதுக்கோட்டை
- 262 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது
- 4 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் காவல் சூப்பிரெண்டு வந்திதாபாண்டே உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். சோதனையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி ரவுண்டானாவில் இருச்சக்கர வாகனத்தில் சில்லரை வியாபாரிகளுக்கு சப்ளை செய்வதற்காக ராஜகோபாலபுரம் பூங்கா நகரை ேசர்ந்த சண்முகலிங்கம் மகன் வசந்த்குமார் (வயது33) 262 கிலோ தடை செய்ய ப்பட்ட குட்கா பொருட்களை வைத்திருந்தார்.இதனை பார்த்த போலீசார் அவரை கைது செய்து, 262 கிலோ குட்கா பொருட்களையும், ரொக்கம் ரூ.1,180ம், இருசக்கர வாகனம் மற்றும் ஒரு மொபைல் போனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், இவர் பெங்களூரி லிருந்து வாங்கி வந்து புதுக்கோட்டையில் சில்லரையில் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து வசந்த்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதே போல் கீரனூரில் மளிகை கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்த சையது இப்ராகிம்(42), அரிமளம் அருகே வடக்கு நல்லிப்பட்டியில் மளிகை கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்த பாண்டித்துரை(60), ராயவரத்தில் வினாயகர் ஸ்டோரில் விற்பனை செய்த உலகப்பன்(40) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அரிமளம் அருகே ஆயிங்குடியில் கண்ணன் டீ கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்த கண்ணன் மனைவி காளியம்மாள் மீது போலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
- பேருநது படியில் நின்று கொண்டு மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள்கோரிக்கை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் காலை, மாலை இருவேளையும் பேருந்து உள்ளே செல்லாமல் படியில் தொங்கியபடி பள்ளி கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் படியில் நிற்காமல் உள்ளே செல்லுமாறு கூறியும், மாணவர்கள் அவற்றை காதில் வாங்கிக் கொள்ளாமல் தனது ஆபத்தான பயணத்தை படிக்கட்டில் தொங்கியபடியே செல்கின்றனர்.
இப்படி ஆபத்தை உணராமல் படியில் தொங்கி செல்வதால் தவறி விழுந்து விடுவார்களோ என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்துடன் பயணம் மேற்கொள்ள நேரிடுகிறது. நடத்துனர், ஓட்டுநர்களும் மாணவர்கள் நலன் கருதி பேருந்தை மெதுவாக பள்ளம் மேடு பார்த்து இயக்கிவருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அசம்பாவிதம் ஏற்ப்படும் முன்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- வடகாடு அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர்
- பல்வேறு விளையாட்டு போட்டிகளில்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போ ட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். இ வர்களை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி பாராட்டி னார்.
வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் தடை தாண்டி ஓட்டம் ஆகிய போட்டிகளில் மாணவிகள் முதலிடம் பிடித்தனர். இதேபோன்று, 400 மீட்டர் ஓட்டத்தில் 2-ம் இடம், குண்டெறிதலில் முதலிடம், 1,500 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் மாணவர்கள் 2-ம் இடம் பெ்ற்றனர்.
மேலும் மாவட்ட அளவில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம், 19 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 3-வது இடமும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 2-வது இடம், கடற்கரை கைபந்து போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம், 17 -வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 2-வது இடம் பிடித்து மாணவர்கள் சாதித்துள்ளனர். மேலும், 19 வயது க்கு உட்பட்ட வாலிபால் போட்டியில் மாணவிகள் 3-வது இடம் பெற்றனர்.
மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கைப்பந்து போட்டியிலும், 17 வயது வயதுக்கு உட்பட்ட மாணவிகள் கடற்கரை கைப்பந்து போட்டியிலும், 100 மீட்டர் தடை தாண்டி ஓட்டம் போட்டியில் மாணவி காவியாவும் கலந்து கொள்ள உள்ளார்கள்.
அடுத்தடுத்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள மாணவ, மாணவிகளையும் அவர்களுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி பாராட்டினார்.
- ரியல் எஸ்டேட் அதிபர் விபத்தில் பலியானார்
- இரு சக்கர வாகனத்தில் வந்தபோது பஸ் மோதியது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மகாராஜபுரம் திருவப்பூர் பகுதியை சேர்ந்தவர் தங்கையா மகன் விஜயன் (வயது 50). இவர் வீட்டு மனைகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் இவர் இடம் விற்பது, வாங்குவது மற்றும் தேவைப்படுவர்களுக்கு அவர்களுக்குரிய இடத்தை விலை பேசி முடித்து தருவாராம்.
இதனால் எந்த நேரமாக இருந்தாலும் தனது வாடிக்கையாளர் அழைக்கும் போது தனது இருசக்கர வாகனத்தில் சென்று அவர்களை பார்த்து தொழில் ரீதியாக பேசிவிட்டு வருவாராம்.
இந்நிலையில் நேற்று இரவு வாடிக்கையாளர்களை சந்தித்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வருமான வரி அலுவலகம் முன்பாக வந்த போது, எதிரே வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் தலை நசுங்கி விஜயன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் விபத்தில் இறந்த செய்தி அறிந்து அப்பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
- நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்தது
- வழிமாறி வந்துள்ளது.
புதுக்கோட்டை:
அறந்தாங்கி அருகே வீரமங்களம் ஊராட்சிக்குட்பட்ட சின்னசெங்கீரை கிராம பகுதிக்குள் ஆண் புள்ளிமான் ஒன்று வழிமாறி வந்துள்ளது. இதனை அப்பகுதியிலிருந்த நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த புள்ளிமான் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அங்கேயே இறந்துள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், சம்பவம் குறித்து வனச்சரக அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனச்சரக அலுவலர் மேகளா உள்ளிட்ட அதிகாரிகள் இறந்த புள்ளிமானின் உடலை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மானின் உடலை அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்து வனச்சரக அதிகாரிகள் முன்னிலையில் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் வனவர்கள் அன்புமணி, அந்தோணிசாமி, வேட்டைத் தடுப்பு காவலர் மரியசைமன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர். வழிமாறி ஊருக்குள் புகுந்த புள்ளிமானை நாய்கள் கடித்து குதறியதில் மான் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- தோட்டக்கலைப்பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் எடுக்கப்பட்டுள்ளது
- புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை காலங்களில்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கா வண்ணம் விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதற்கான ஆயத்த நிலை ஏற்பாடுகளை செய்து, பயிர் களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
பசுமைக்குடில்கள் மற்றும் நிழல்வலைக்குடிகளில் பயிர் செய்யும் விவசாயிகள் பருவமழை காலத்தில் அதன் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைத்து கட்டுவதன் மூலம் சேதத்தை தடுக்கலாம்.
மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும். தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் வேர்ப்பகுதி நனையும்படி தெளிக்க வேண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும். கனமழை, காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர்பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும்.
வாழையில் சேதத்தை தடுக்க, மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி முட்டுக்கொடுக்க வேண்டும். நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- மழையூர் அரசு தொடக்கப்பள்ளி முன்பு வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு
- ஆங்கில வழி கல்வி நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மழையூரில் ஊரா ட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியி ல் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அப்பகுதியைச் சுற்றியுள்ள 127 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
ஆங்கில வழி கல்வி நிறுத்தம்
இப்பள்ளியில் தமிழ் வழி ஆங்கில வழி என இரண்டு வழி கல்வி இ ருந்த நிலையில் ஆங்கில வழி கல்வியால் மாணவர்கள் கல்வி கற்க சிரமம் இருப்பதாகவும் மேலும் அரசு சலுகைகள் அனைத்திற்கும் தமிழ் வழி கல்வி சான்று கேட்பதால் தங்கள் பகுதியில் உள்ள பள்ளியில் ஆங்கில வழி கல்வி வேண்டாம் என்று கடந்த ஜூன் மாதம் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு எடுக்க ப்பட்டது.
பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆங்கில வழி கல்வி வேண்டாம் என கையப்பமிட்டு பள்ளி நிர்வாகத்திடம் வழங்கி ய நிலையில் பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டு அப்பள்ளியில் செயல்பட்டு வந்த ஆங்கில வழி கல்வி நிறுத்தப்பட்டது.
தமிழ் வழி கல்விக்கு மாற்றம்
இதனால் அப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் பாடம் பயின்று வந்த சுமார் 30 மாணவர்கள் தமிழ் வழி கல்விக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் மழையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செயல்பட்டு வந்த ஆங்கில வழி கல்வியை எடுக்க காரணமாக இருந்த பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் தலைமை ஆசிரியருக்கு வருத்தத்துடன் நன்றி என்று தெரிவித்து பள்ளி முன்பு விளம்பர பதாகை வைத்து அதில் ஊர் பொதுமக்கள் சார்பாக வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டபோது:-
பள்ளி நிர்வாகம் சார்பில் வேண்டுமென்றே ஆங்கில வழி கல்வியை எடுக்கவில்லை பள்ளி மாணவர்களின் நலன் கருதி பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழுவில் விடுத்த கோரிக்கையின் படியே முறை ப்படி பெற்றோர்களிடம் கையொப்பம் பெற்று ஆங்கில வழி கல்வி எடுக்கப்பட்டது என்றும் இதற்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.
- லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்
- அவரிடமிருந்து ரூ.2,920 மற்றும் 3 நம்பர் சீட்டுகளை பறிமுதல்
புதுக்கோட்டை:
ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக் ரஜினி கிடைத்த ரகசிய தகவலின் பேரில். ஆலங்குடி பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுக்குளம் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த மேல நெம்பமக்கோட்டையை சேர்ந்த முருகன் (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.2,920 மற்றும் 3 நம்பர் சீட்டுகளை பறிமுதல் செய்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது
- வரும் 14-ந் தேதி நடைபெறுகிறது
புதுக்கோட்டை:
தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் வரும் 14-ந் தேதி நடைபெறவுள்ளது என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க 2022-23ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் அனைத்துப்பள்ளிகள், கல்லூரிகளில் படித்துவரும் மாணவர்களுக்க தனித்தனியே அரசு விதிமுறைகளின்படியும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் வரும் 14-ந் தேதி (திங்கள் கிழமை) அன்று புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற உள்ளன.
இப்போட்டிகளில் வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே பரிசு தொகை மற்றும்; பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன.
கூடுதல் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவே (04322-228840, 99522 80798) தொடர்பு கொள்ளலாம். இப்பேச்சுப்போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர; கவிதா ராமு தெரிவித்துள்ளார;.
- சிறுபான்மையின கைவினைஞர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
- புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு தகவல்
புதுக்கோட்டை:
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள சிறுபான்மையின கைவினைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் விரசாட் திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டிற்கு கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஏழ்மை நிலையில் உள்ள சிறுபான்மையினத்தை சார்ந்த கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்போர் ஆகியோ ரின் நிதி ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது.
பெறப்படும் கடன் தொகை 60 மாதத் தவணைகளில் திரும்ப செலுத்தப்பட வேண்டும். மேற்கண்ட கடன் பெற விண்ணப்பிக்க விரும்புவோர், 25-ந் ேததிக்குள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில், முதல் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடந்தது
- மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்து நடைபெற்றது
புதுக்கோட்டை:
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்து புதுக்கோட்டையில் அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழ்நாடு அரசு மாநிலத்தில் அமல்படுத்த அவசரப்பட கூடாது. ஸ்பாட் பைன் முறையை கைவிட வேண்டும். சட்டத்தின் பெயரால் ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்த சொல்லி துன்புறுத்த கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டப் பொது செயலர் ரெத்தினவேலு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலர் ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட துணை தலைவர் அன்புமணவாளன் சாலை போக்குவரத்து சங்க நிர்வாகிகள் சாகுல்அமீது, ஜகுபர்அலி, அப்பாஸ் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன் , பாண்டியன், அடைக்கலசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
- புனித ஜெபமாலை மாதா தேர்பவனி நடைபெற்றது.
- சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்ற
புதுக்கோட்டை
இலுப்பூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் புனித ஜெபமாலை மாதாவின் தேர்பவனி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் மாலை மாதாவின் ஜெப வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து புனித அந்தோணியார் ஆலயத்தில் மாதாவின் ஜெப வழிபாடும், அதனை தொடர்ந்து மாதாவின் சொரூபம் தாங்கிய தேர்பவனியும் நடைெபற்றது.
இதில் திரளானவர்கள் கலந்துகொண்டு மாதாவின் பாடல் பாடியும், ஜெபம் செய்தும் மாதாவின் மன்றாட்டை கூறியும் வழிபட்டனர். மேலும் பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், சாம்பிராணி காண்பித்து, மாலை அணிவித்தும் தங்களது வழிபாட்டை நிறைவேற்றினர்.தொடர்ந்து இலுப்பூர் பங்குத்தந்தை அருட்பணி ஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள், அருட்சகோதரிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்."






