என் மலர்
புதுக்கோட்டை
- விராலிமலை பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள்
புதுக்கோட்டை
விராலிமலை, வடுகப்பட்டி துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், விராலிமலை நகர்பகுதி, கோமங்கலம், கல்குடி, பொருவாய், நம்பம்பட்டி, ராஜாளிபட்டி, பொய்யாமணி, செட்டியபட்டி, தேன்கனியூர், கொடும்பாளூர், மாதுராபட்டி, ராமகவுண்டம்பட்டி, விராலூர், வானதிராயன்பட்டி, ராஜகிரி, மலைக்குடிபட்டி, கோத்திராபட்டி, கட்டகுடி, பாப்பாவயல், வடுகப்பட்டியில் உள்ள அனைத்து கம்பெனிகள், வேலூர், கத்தலூர், குளவாய்பட்டி, முல்லையூர், அக்கல்நாயக்கன்பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, திருநல்லூர், சாத்திவயல், பேராம்பூர், கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி, சித்தாம்பூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று விராலிமலை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்."
- கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்க்கப்பட்டது
- தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது நாய் ஒன்று அதே பகுதியில் உள்ள 60 அடி ஆழ முள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு துறை வீரர்கள் ஏணி வைத்து கிணற்றில் இறங்கி பின்னர் கயிறு கட்டி நாயை உயிருடன் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
- வாகனம் கவிழ்ந்த விபத்தில் 5 பெண்கள் காயமடைந்தனர்.
- விவசாய கூலி வேலைக்கு ஆட்களை ஏற்றி சென்றனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வேலை பார்ப்பதற்காக வெளியூர்களிலிருந்து வாகனங்கள் மூலம் ஆட்கள் ஏற்றிச் செல்லப்படுகிது.அந்த வகையில் ஆவுடையார்கோவில் பகுதியில் விவசாய வேலை பார்ப்பதற்காக, சுப்பிரமணியபுரம் பகுதியிலிருந்து 2 டாட்டா பிக்கப் வாகனத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட பெண்கள் விவசாய கூலி வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.
வாகனங்கள் பனையவயல் அருகே சென்று கொண்டிருக்கையில், ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சித்துள்ளது, அப்போது எதிர்பாராத விதமாக பின்னே சென்ற வாகனம் மோதியதில் முன்னே சென்ற வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 5 பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவுடையார்கோவில் காவல்த்துறையினர், காயமடைந்த பார்வதி (வயது 50), சிந்தாமணி (60), வசந்தா (50), அஞ்சம்மாள் (55), பூங்கொடி (37) ஆகிய 5 பேரை மீட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாய கூலி வேலைக்கு ஆட்களை ஏற்றி சென்ற வாகனங்கள் விபத்து குள்ளாகி 5 பெண்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் உள்ள டீ கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பதாக தகவல் வந்தது
- டீக்கடையில் சோதனை செய்து 36 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தன
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்ட விரோதமாக குட்கா உள்ளிட்ட புகையிலை விற்பனை, லாட்டரி விற்பனை கள்ளச் சந்தையில் மது விற்பனை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து கைது செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் உள்ள டீ கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பதாக தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட டீக்கடையில் சோதனை செய்து 36 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக பொன்னமராவதி பட்டமரத்தான் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
- குளத்தூர் நாயக்கர் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களைத் தேடி மருத்துவம் முகாம் நடைபெற்றது.
- மருத்துவ முகாமில் 927 நபர்கள் கலந்து கொண்டு உரிய பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சையும், ஆலோசனைகளும் பெற்று சென்றனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் குளத்தூர் நாயக்கர் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் முகாம் நடைபெற்றது.
முகாமை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். முகாமில் புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி மணிமாறன் தலைமையில் மருத்துவர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் கந்தர்வகோட்டை ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராய ர், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் ஐயா, குளத்தூர் நாயக்கர் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி ராணி மகாலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர் வைரக்கண்ணு, மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவ முகாமில் 927 நபர்கள் கலந்து கொண்டு உரிய பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சையும், ஆலோசனைகளும் பெற்று சென்றனர்.
- ஆலங்குடி நாதன் நகரை சேர்ந்த சந்துரு (வயது 52) என்பவர் திருவரங்குளம் மாரியம்மன் கோவில் முன்பு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
- அவரிடம் இருந்து மூன்று நம்பர் சீட்டு கட்டுகள் மற்றும் 2,020 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை ;
ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் பகுதியில் தனிப்படை உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது ஆலங்குடி நாதன் நகரை சேர்ந்த சந்துரு (வயது 52) என்பவர் திருவரங்குளம் மாரியம்மன் கோவில் முன்பு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மூன்று நம்பர் சீட்டு கட்டுகள் மற்றும் 2,020 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்தனர்.
பின்னர் சந்துருவை தனிப்படை போலீசார் ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- மத்திய அரசின் திட்டப்பணிகள் அனைத்தும் பொதுமக்களிடம் சென்றடைவதன் மூலம் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.
- பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டப் பணிகளை அலுவலர்கள் உரிய முறையில் பொதுமக்களிடம் சென்று சேர்க்க வேண்டும்
புதுக்கோட்டை ;
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அரசின் திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம், மத்திய அமைச்சர் (பஞ்சாயத்து ராஜ்) கபில் மோேரஸ்வர் படேல் தலைமையில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மத்திய அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டில், மாநில அரசால் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் பல்வேறு திட்டப் பணிகள் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ஊரக வளர்ச்சித்துறை, வோண்மைத்துறை, கால்நடைத்துறை, பொது சுகாதாரத்துறை, வனத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம், மாவட்ட வழங்கல் அலுவலகம், உணவு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின், இ-பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா, இ-தூய்மை பாரத இயக்கம், ஸ்வட்ச் பாரத் மிஷன் கிராமின், இ-ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான், இ-சான்சாடு ஆதார்ஸ் கிராம் யோஜனா போன்ற திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
மத்திய அரசின் திட்டப்பணிகள் அனைத்தும் பொதுமக்களிடம் சென்றடைவதன் மூலம் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். எனவே பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டப் பணிகளை அலுவலர்கள் உரிய முறையில் பொதுமக்களிடம் சென்று சேர்க்க வேண்டும் என அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
முன்னதாக மத்திய மந்திரி அறந்தாங்கி, ரெத்தினக்கோட்டை ஊராட்சி, நரிக்குறவர்காலனியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து அறந்தாங்கி ஒன்றியம், ராஜேந்திரபுரத்தில், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் வீடற்ற ஏழை மக்களுக்காக பயனாளி பங்களிப்புடன் கூடிய அறந்தாங்கி திட்டப்பகுதியில் ரூ.11.40 கோடி மதிப்பீட்டில் 120 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) ரேவதி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சு.சொர்ணராஜ், வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் சம்பத், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ்.சகிலா பீவி, உதவி பொறியாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
- குடுமியான்மலையை தலைமையிடமாக கொண்டு சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதன் மேலாண்மை இயக்குனராகவும், முதன்மை செயலாக்க திட்ட இயக்குனராகவும் ஏ.சி.ரவிச்சந்திரன் உள்ளார்.
- ஏ.சி.ரவிச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றினை ‘வாழும் அன்னை தெரசா’ என்ற பெயரில் ஆசிரியர் கு.ஜான் பீட்டர் என்பவர் ஆங்கிலம் மற்றும் தமிழில் ஒரே நூலாக இயற்றியுள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகாவிற்குட்பட்ட குடுமியான்மலையை தலைமையிடமாக கொண்டு சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதன் மேலாண்மை இயக்குனராகவும், முதன்மை செயலாக்க திட்ட இயக்குனராகவும் ஏ.சி.ரவிச்சந்திரன் உள்ளார். அவர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித்தொகை போன்றவற்றினை வழங்கி வருகிறார்.
இதற்கிடையே தமது அறக்கட்டளை உறுப்பினர்கள் 2,500 பேர் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் மேம்பட உழைத்து வரும் ஏ.சி.ரவிச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றினை 'வாழும் அன்னை தெரசா' என்ற பெயரில் ஆசிரியர் கு.ஜான் பீட்டர் என்பவர் ஆங்கிலம் மற்றும் தமிழில் ஒரே நூலாக இயற்றியுள்ளார்.
இந்த புத்தக வெளியீட்டு விழா மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் அறக்கட்டளை நிதி அறங்காவலர் ஏ.டேனியல் ஜான் கென்னடி தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் எம்.சுப்பையா, எஸ்.நல்லகுமார், எஸ்.ஜெயசீலன், ஏ.என்.சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு வந்திருந்தோரை வி.பழனிசாமி, எஸ்.ஆறுமுகம், ஆர்.சி.ரெங்கசாமி, கே.வி.கிருஷ்ணமூர்த்தி, கே.மோகன் ஆகியோர் வரவேற்று பேசினர். நிகழ்ச்சிகளை ஏ.தேவசகாய மரியானந்தம் தொகுத்து வழங்கினார்.
திரைப்பட நடிகைகள் நமீதா, நீலிமாராணி, ஜனனி ஐயர் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஏ.சி.ரவிச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தினை நடிகைகள் நமீதா, நீலிமா ராணி, ஜனனி ஐயர், ஈரோடு கருணா மூர்த்தி ஆகியோர் வெளியிட்டனர்.
விழாவில் பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ், கரூர் பி.அன்புச்செழியன், பி.தமிழ்ச்செல்வன், எம்.சசிக்குமார், ஏ.வி.கோவிந்தராஜ், எஸ்.சவுந்தரராஜன், எம்.சி.மாரிமுத்து, எம்.ஹரிகிருஷ்ணன், ஆர்.மாரியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து ஏ.சி.ரவிச்சந்திரன் ஏற்புரையாற்றினார். விழாவில் ஜெ.இன்னாசிமுத்து, என்.சரவணக்குமார், எஸ்.ராமையா, ஜி.பர்க்குணம், கே.மகாலிங்கம், எஸ்.சிவஜோதி, என்.விஜயக்குமார், ஏ.ஜோசப்பீட்டர் தனராஜ், எஸ்.சுப்பையா, ஆர்.செந்தில்குமார், பி.அறிவு தமிழன், பி.சதீஷ்குமார், ஆர்.மகேந்திரபாபு, எம்.ஆரோக்கியம் உள்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக மலைதாதம்பட்டியில் இருந்து ஏ.சி.ரவிச்சந்திரன் சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். முடிவில் புத்தக ஆசிரியர் கு.ஜான் பீட்டர் நன்றி கூறினார்.
- தீயணைப்பு வீரருக்கு பொதுமக்கள் பாராட்டினர்
- சிலிண்டரில் பிடித்த தீயை சாதுர்யமாக அணைத்தார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி டேவிதார்சாலை முக்கத்தில் செல்வமணி என்பவர் டீ கடை நடத்தி வருகின்றார். இவர் நேற்று கடையில் வடை போடுவதற்காக அடுப்பை பற்றவைத்துள்ளார். அப்போது திடீரென நெருப்பு பிடித்து சிலிண்டர் எரியத்தொடங்கியுள்ளது.இந்நிலையில் சிலின்டர் எரிகிறது என்றதும் அருகில் இருந்தவர்கள் ஆங்காங்கே சிதறி ஓடியுள்ளனர்.அப்போது அந்த வழியாக சென்றுகொண்டிருந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகர், விரைந்து வந்து சாக்கை நனைத்து சிலின்டர் மீது மூடி சிலிண்டரை லாவகமாக வெளியே இழுத்துவந்து அருகில் இருந்த சாக்கடையில் மூழ்கடித்தார். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்து விபத்தை தடுத்த புதுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரை அனைவரும் பாராட்டினர்.
- பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- இரு சக்கர வாகனத்தில் வந்து கைவரிசை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடியை சேர்ந்தவர் திருப்பதி மனைவி சத்யாதேவி (வயது 35) . இவர் காய்கறிகள் வாங்குவதற்காக ஆலங்குடி வார சந்தைக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது வடகாடு முக்கம் என்னும் இடத்தில் அவர் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக சத்யாதேவி ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிவு செய்து பட்டுக்கோட்டை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் மனோஜ்குமா ர் (வயது21). சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பழையூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் அதியமான் (24) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாரி மோதி மின்கம்பம் சேதமடைந்தது.
- வீடுகளில் மின் தடை ஏற்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியிலிருந்து குளந்திரான்பட்டு செல்லும் சாலையில் தனியார் சிமெண்ட் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சிமெண்ட் விற்பனை நிலையத்திற்கு கரூரிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது குளந்திரான்பட்டு நரங்கியப்பட்டு செல்லும் சாலையில் லாரி சென்ற போது அந்த சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத் தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மின்கம்பம் அடியோடு உடைந்து சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக கரூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அபுதாஹிர் உயிர் தப்பினார். ' இந்நிலையில் லாரி மோதியதில் மின்கம்பம் அடியோடு உடைந்து சாலையில் விழுந்ததால் அந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற் பட்ட வீடுகளில் மின் தடை ஏற்பட்டது. உடைந்த மின் கம்பத்தை மாற் றி புதிய மின்கம்பம் அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது
- கல்லாலங்குடி ஊராட்சியில்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றி யம் கல்லாலங்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறும லர்ச்சி திட்டம் 2021-2022 பிற துறை பணிகளை ஒருங்கிணைத்து திட் டம் செயல்படுத்துவதற்கான சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மலர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இத்திட்டத்தின் நோக்கம் குறித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அறங்குழவன் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
பெரும்பாலான உள்ளாட்சி நிறுவனங்கள் அவற்றின் தேவைகளை நிறைவு செய்ய போதிய சொந்த நிதி ஆதா ரங்கள் இல்லாததால் பல்வேறு திட்ட நிதி ஒதுக்கீடுகளை எதிர்நோக்கியே உள்ளன. தற்போது உள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கு அவற்றின் வழி காட்டி நெறிமுறைகள் எளிமையானதாக இருக்கவும், உள்ளாட்சி நிறுவனங்கள் தங்களின் விருப்ப பணிகளை எடுத்துச் செய்யும் வகையி லும், கிராம வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியமாக தேவைப்படும் மத் திய அரசு திட்டங்களின் கீழ் எடுத்துச் செல்ல இயலாத அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக உள்ள புதிய திட்டமே 'அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்' ஆகும் என பொது மக்களுக்கு விளக்கம் அளித்தார்.
சிறப்பு முகாமில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விமலா அறிவழகன், வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை குணசீலன், இளமாறன், வெற்றியப்பன், வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாட்டினை ஊராட்சி செயலாளர் ஜெனித் அரிஸ்டாட்டில் ஏற்பாடு செய்திருந்தார்.






