என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழையூர்"

    • மழையூர் அரசு தொடக்கப்பள்ளி முன்பு வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு
    • ஆங்கில வழி கல்வி நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மழையூரில் ஊரா ட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியி ல் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அப்பகுதியைச் சுற்றியுள்ள 127 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.‌

    ஆங்கில வழி கல்வி நிறுத்தம்

    இப்பள்ளியில் தமிழ் வழி ஆங்கில வழி என இரண்டு வழி கல்வி இ ருந்த நிலையில் ஆங்கில வழி கல்வியால் மாணவர்கள் கல்வி கற்க சிரமம் இருப்பதாகவும் மேலும் அரசு சலுகைகள் அனைத்திற்கும் தமிழ் வழி கல்வி சான்று கேட்பதால் தங்கள் பகுதியில் உள்ள பள்ளியில் ஆங்கில வழி கல்வி வேண்டாம் என்று கடந்த ஜூன் மாதம் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு எடுக்க ப்பட்டது.

    பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆங்கில வழி கல்வி வேண்டாம் என கையப்பமிட்டு பள்ளி நிர்வாகத்திடம் வழங்கி ய நிலையில் பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டு அப்பள்ளியில் செயல்பட்டு வந்த ஆங்கில வழி கல்வி நிறுத்தப்பட்டது.

    தமிழ் வழி கல்விக்கு மாற்றம்

    இதனால் அப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் பாடம் பயின்று வந்த சுமார் 30 மாணவர்கள் தமிழ் வழி கல்விக்கு மாற்றப்பட்டனர்.

    இந்நிலையில் மழையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செயல்பட்டு வந்த ஆங்கில வழி கல்வியை எடுக்க காரணமாக இருந்த பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் தலைமை ஆசிரியருக்கு வருத்தத்துடன் நன்றி என்று தெரிவித்து பள்ளி முன்பு விளம்பர பதாகை வைத்து அதில் ஊர் பொதுமக்கள் சார்பாக வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் இது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டபோது:-

    பள்ளி நிர்வாகம் சார்பில் வேண்டுமென்றே ஆங்கில வழி கல்வியை எடுக்கவில்லை பள்ளி மாணவர்களின் நலன் கருதி பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழுவில் விடுத்த கோரிக்கையின் படியே முறை ப்படி பெற்றோர்களிடம் கையொப்பம் பெற்று ஆங்கில வழி கல்வி எடுக்கப்பட்டது என்றும் இதற்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

    ×