என் மலர்
புதுக்கோட்டை
- லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்
- ேபாலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்காடு கடைவீதியில் சிலர் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் ேபாலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தெற்கு கொத்தமங்கலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது58) என்பவர் அப்பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராஜேந்திரனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 750 ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளையும், 590 ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தடை செய்யப்பட்ட குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்
- ேபாலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கைக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட கேப்பரை பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் சிலர் தமிழக அரசால் தடை செய் யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக வல்லத்திராக் கோட்டை போலீருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கும்மங்குளம் கீழத்தெருவை சேர்ந்த மரிய வியாகுலம் (வயது 62) என்பவர் பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஆயிரத்து 960 ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள், ஒரு செல்போன் மற்றும் 9 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கத்தை யும் பறிமுதல் செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
- சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்
- போலீசாருக்கு வந்த தகவலின்படி நடவடிக்கை
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகேயுள்ள கைக்குறிச்சி குளத்துப்பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக வல்லத்திராக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அங்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையிலான போலீசார் அப்பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட, அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது38), சத்யம் (43), பிரபாகரன் (27), ராமச்சந்திரன் (40), அப்துல் கரீம் (40), வீரபாண்டியன் (50) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து, 4 செல்போன்கள், 2 டூவீலர்கள் மற்றும் 4 ஆயிரத்து 330 ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீதமாக உயர்த்தி வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- உலக காதுகேளாதோர் தினவிழா
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட காதுகேளாதோர் சங்கம் சார்பில் உலக காதுகேளாதோர் தினவிழா தனியார் திருமண மகாலில் நடைப்பெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சங்க தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். வரவேற்புரையை காதுகேளாதோர் சங்க சேர்மன் ஜெயகுமார் வரவேற்புரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக ஒலி, ஒளி அமைப்பாளர் சங்க தலைவரும், தி.மு.க. நகரச்செயலாளருமான செந்தில் கலந்துக் கொண்டு பேசினார்.
விழாவில் பள்ளிகள், கல்லூரிகளில் சைகைமொழி தெரிந்தவர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், அரசு அலுவலங்களில் சைகைமொழி பெயர்ப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7சதவீதமாக உயர்த்தி தரவேண்டும், ரூ.3000 முதல் 5000 வரை உதவி தொகை உயர்வு வேண்டும், சிறப்பு வீடுகள், மனைகள் இலவசமாக வழங்க வேண்டும், ஓட்டுனர் உரிம அட்டை வழங்கப்பட வேண்டும், கபடி போட்டியில் எஸ்டிஏடீ கபடி காதுகேளாதோர் அனுமதியை ஏற்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் காது கேளாதோர் சங்க துணை சேர்மன் செல்வராஜ், திரைப்பட நடிகரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான சாத்தையா, அரசு வழக்கறிஞர் சிவா, முத்துரையான்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் தீத்தப்பன், சென்னை தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு தலைவர் ரமேஷ்பாபு, சென்னை தமிழ்நாடு காதுகேளாதோர் விளையாட்டுக் கழகம்தலைவர் பாலாஜி, மாவட்ட தலைவர் சிவக்குமார். முகமது தாகீர் உட்பட மாவட்டம் முழுவதிலிருந்தும் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
- மருத்துவதுறையில் புதுக்கோட்டை முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்
- நூற்றாண்டு விழா நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், நூற்றாண்டு விழா, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகளில் வெற்றிப்பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கி கலெக்டர் பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய பொதுமக்களுக்கும் உயர் தரத்திலான சிகிச்சைகள் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் மருத்துவத்துறையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பான முறையில செயல்படுத்தப்பட்டு தமிழகத்தில் முன்னோடி மாவட்டமாக விளங்கி வருகிறது. இதற்கு காரணமான மருத்துவர் கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர் கள் அனைவருக்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், நூற்றாண்டு விழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன், மருத்துவர்கள் அனைவரும் மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
- பல வடிவங்களில் விற்பனைக்காக அகல் விளக்குகள் தயாராகின்றன.
- கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு
புதுக்கோட்டை:
கார்த்திகை தீபத்திருநாள் வருகிற டிசம்பர் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு வடிவங்களில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணிகளில் புதுக்கோட்டை அருகே குசலக்குடியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இங்கு தயார் செய்யப்படும் விளக்குகள் புதுக்கோட்டை திருச்சி கரூர், தர்மபுரி, ஈரோடு,மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர் பாலமுருகன் கூறியதாவது:-
இப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த நாங்கள் பரம்பரையாக குடும்பத்துடன் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். சீசனுக்கேற்ப பொங்கல் பானை, அடுப்பு, பானை, சட்டி, அகல் விளக்குகள் அருகாமையிலுள்ள ஓட்டக்குளம் மற்றும் சானாதி உள்ளிட்ட பகுதிகளில் மண் எடுத்து வந்து பலவிதமாக அகல் விளக்குகளை நாங்கள் தயாரித்து வருகின்றோம்.
இதற்கு மூலப் பொருட்களான மண் மற்றும் எரிக்க பயன்படும் விறகு, வைக்கோல் போர் போன்றவை விலை அதிகரித்துள்ளது. இதனால் குறிப்பிட்ட லாபம் கிடைக்கவில்லை, போதிய வருமானம் இல்லாத போதிலும் குலத்தொழிலை விடக்கூடாது என்பதால் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். நாள் ஒன்றுக்கு ஆயிரம் விளக்குகள் வரை தயாரிப்போம் , எங்களிடம் சில்லரை மொத்த வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர்.
எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வங்கி நிதி உதவி, உபகரணங்கள் வழங்கி உதவ வேண்டும் மேலும் இந்தப்பகுதியில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவச மின் திருவை அனைவருக்கும் வழங்கவேண்டும் ஏரியில் மாட்டுவண்டி மூலம் மண் எடுக்க அரசு உதவிவிட வேண்டும் என்றும்கூறினார் இவ்வாறு மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது
- தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோரை பாராட்டி நற்சான்றிதழ்கள்
புதுக்கோட்டை:
தமிழகத்தில் கடந்த 1922-ம் ஆண்டு பொது சுகாதாரத்துறை தொடங்கப்பட்டு 2022-ம் ஆண்டோடு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. துறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்ததையடுத்து அதனைக் கொண்டாடும் விதமாக அந்தந்த சுகாதார மாவட்டங்களில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அறந்தாங்கி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது கொரொனா காலத்தில் சிறப்பாக முன்கள பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோரை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு நினைவுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
முன்னதாக நூற்றாண்டு விழாவையொட்டி கடந்த மாதம் 10-ந்தேதி சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற விழாவில் தொடங்கப்பட்ட தொடர் ஜோதியானது பூந்தமல்லி, காஞ்சிபுரம், வேலூர், புதுக்கோட்டை வழியாக அறந்தாங்கியை அடைந்த தொடர் ஜோதியை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி பெற்றுக்கொண்டு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கலைவாணியிடம் ஒப்படைத்தார்.
இந்த தொடர் ஜோதியானது தமிழகத்தில் மொத்தம் உள்ள 46 சுகாதார மாவட்டங்களில் நடைபெறுகின்ற நூற்றாண்டு விழாக்களை கடந்து, சென்னையில் நடைபெறவுள்ள நிறைவு விழாவை அடையவுள்ளது. நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர்கள் முகமது இத்திரிஸ், பஜ்ருல் அகமது, மணிமாறன், ராம்சந்தர், இம்ரான், ராமச்சந்திரபிரபு, நிர்வாக அலுவலர் நிம்மி, நேர்முக உதவியாளர் முத்துநாராயணன், நலக்கல்வியாளர் ஜெய்சங்கர், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு மருத்துவ அலுவலர்கள் ஜெயபிரகாஷ், நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உலக கழிப்பறை தினம் கொண்டாடப்பட்டது
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் முழு சுகாதார இயக்கம் சார்பில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு சுகாதார ஓட்டம் மற்றும் நடைபயண பேரணி நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பேரணியில் நோயின்றி வாழ கழிப்பறையை பயன்படுத்தவும், கிராமத்தையும் பொது சுகாதாரத்தையும் பாதுகாக்க அனைவரும் கழிப்பறையை பயன்படுத்தவும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ஆணையர்கள் ஸ்ரீதரன், நளினி, நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- வெற்றிபெற்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டது
- நீரினைப்பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலில்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீர்நிலைகளின் நீரினைப் பயன்படுத்துவோர் 34 சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்தநிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மொத்தமுள்ள 34 தலைவர் இதில் 8 தலைவர்கள் தவிர, மற்ற 26 தலைவர் பதவிகள் மற்றும் 91 உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 8 தலைவர்கள் மற்றும் 10 உறுப்பினர்கள் பதவிகளுக்கு நேற்று காலை முதல் வாக்குப்பதிவு விறு, விறுப்பாக நடைபெற்றது. இதில் கல்லாலங்குடி தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தல் கடும் பரபரப்புக்கு இடையே இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் வாக்குப் பெட்டிகள் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மாலை நான்கு மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.வாக்குகள் என்னப்பட்டு மாலை 6 மணிக்கு மேல் தலைவர்கள் 8 பேர் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
வெற்றி பெற்ற தலைவர்களான விஜயரெகுநாதபுரம் செல்வராசு, குளவாய்பட்டி பானுமதி, மேலாத்தூ ர் குமார், கல்லாலங்குடி பாண்டியன், கொத்தமங்கலம் முத்துத்துரை, மாங்காடு பாலசுப்பிரமணியன், வல்லாத்திராக்கோட்டை, வாண்டாக்கோட்டை, பூவரசகுடி, மணியம்பலம் இவைகளுக்கு கருப்பையா, நம்புகுழி முத்து ஆகிய 8 தலைவர்களாகவும் மற்றும் பத்து உறுப்பினர்கள் என வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.
பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரும், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியருமான முருகேசன் மற்றும் ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி ஆகியோர் வெற்றி பெற்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
- பதுக்கப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வமணி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குன்றாண்டார்கோவில் பகுதியில் ஒரு இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். இதில் 1 டன் 300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த செம்பட்டிவிடுதி நால்ரோட்டை சேர்ந்த சேகரை (வயது 42) கைது செய்தனர்."
- நீர் பாசன சங்க தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
- மாலை முடிவுகள் அறிவிக்கப்படும்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 58 பாசன குளங்கள் உள்ளது. இதனை நிர்வாக வசதிக்காக 16 பாசன சங்கங்களாக வைத்துள்ளனர். இந்த நீர்பாசன சங்கத்திற்கு அரசு தேர்தலை அறிவித்தது அதன்படி 15 பாசன சங்கங்களுக்கு போட்டியின்றி தலைவர் மற்றும் மண்டலக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு இன்று காலை 7 மணி முதல் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில் விவசாயிகள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை இன்று மாலை 4 மணியளவில் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.
- சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
- அடையாள அட்டை வழங்க அறிவுறுத்தப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் தணிக்கை தொடர்பாக சிறப்பு கிராம சபை கூட்டம் சிவன் கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திரா நகரை சேர்ந்த மூத்த குடிமக்கள் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வன அலுவலர் அப்துல் காதர் ஜெய்லானி கலந்து கொண்டார். தணிக்கை அலுவலர் அந்தோணியம்மாள் அறிக்கையை வாசித்தார். புதிதாக மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு அடையாள அட்டை கேட்பவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.






