என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டம் MEETING"

    • சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
    • அடையாள அட்டை வழங்க அறிவுறுத்தப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் தணிக்கை தொடர்பாக சிறப்பு கிராம சபை கூட்டம் சிவன் கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திரா நகரை சேர்ந்த மூத்த குடிமக்கள் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வன அலுவலர் அப்துல் காதர் ஜெய்லானி கலந்து கொண்டார். தணிக்கை அலுவலர் அந்தோணியம்மாள் அறிக்கையை வாசித்தார். புதிதாக மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு அடையாள அட்டை கேட்பவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    கரூர்:

    தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி செயல் திறன் பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் கரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் வெங்கிடுசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செயல்திறன் நிலை 1, நிலை 2 என்பதனை ஒன்றாக இணைக்க வேண்டும். பத்து வருட பணி செய்த தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 1996 விதிகளின்படி செயல் திறன் பணியாளர்களை களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

    ×