என் மலர்
புதுக்கோட்டை
- நடந்து சென்ற போது விபத்து
- வாகனம் மோதி முதியவர் பலியானார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஆலங்குடி கலைஞர் காலனியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 93). இவர் ஆலங்குடி-கறம்பக்குடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிதம்பரம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்றது
- விவசாயிகள் நல்லேறு பூட்டி உழவு பணியை தொடங்கினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நல்லேறு பூட்டும் நிகழ்ச்சி வசந்த காலத்தின் தொடக்கமான சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் கிராம பகுதிகளில் விவசாயிகள் நல்லேறு பூட்டி உழவு பணிகளை தொடங்குவது வழக்கம். புதிய ஆண்டில் விவசாயம் தழைக்க வேண்டும், ஆடு, மாடுகளுக்கு தீவனம் கிடைக்க வேண்டும். உணவு பொருள் உற்பத்தி அதிகரித்து பசி, பட்டினி இல்லாத நிலை தொடர வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நல்வேறு பூட்டும் நிகழ்ச்சி தமிழ் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படுகிறது.இதன்படி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, பிலாவிடுதி, பட்டமாவிடுதி, மழையூர், ரெகுநாதபுரம், திருமணஞ்சேரி, பட்டத்திக்காடு, வாண்டான்விடுதி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று நல்லேறு பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது உழவு பணிக்கு பெரும்பாலும் டிராக்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் கிராம பகுதிகளில் பழமை மாறாமல் உழவு மாடுகளில் ஏர் பூட்டி விவசாய பணிகளை தொடங்கினர்.
- போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்
- 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அரிமளம் ஒன்றியம் கல்லூர் சுகந்திரபுரம் பகுதியில் புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்ேபாது அந்த வழியாக சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கே.தெக்கூர் பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 37), கே.ராயவரம் பகுதியை சேர்ந்த அரவிந்தன் (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
- 19 பேர் காயம் அடைந்தனர்
- பொன்னமராவதி அருகே மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மஞ்சுவிரட்டு பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல் ஊராட்சியில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் திருவிழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதனை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடக்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.19 பேர் காயம் அடைந்தனர்.
- ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடு விற்பனை
- புதுக்கோட்டை சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை வாரச்சந்தை புதுக்கோட்டை சந்தையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி, காரைக்குடி, தேவக்கோட்டை, தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.இதில் பெட்டை ஆடுகளை விட கிடா ஆடுகளின் விற்பனை அதிகமாக இருந்தது. நேற்று ஒரு நாள் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.1 கோடிவரை வர்த்தகம் நடைபெற்றது. மேலும் அடுத்தவார சந்தையில் ஆடுகளின் விற்பனை இன்னும் அதிகமாக இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
- அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடட்டும், பார்த்துக்கொள்ளலாம்.
- அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ளதால் மத்திய அரசு அம்பேத்கர் பிறந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க காரணமாக இருக்கலாம்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் பழைய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. சார்பில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்னும் 11 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. ஒன்றுக்கு மட்டும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மீதமுள்ள 10-க்கு தரக்கூடிய நிலையில் விரைவில் அவர் ஒப்புதல் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் சட்டமன்றத்திலேயே சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றி இந்திய குடியரசு தலைவருக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடட்டும், பார்த்துக்கொள்ளலாம். அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் கவலை இல்லை. மடியில் கனம் இல்லாததால் வழியில் பயமில்லை. அமைச்சர்கள் எதையும் சந்திக்க தயாராக உள்ளனர். அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ளதால் மத்திய அரசு அம்பேத்கர் பிறந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.
- வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
- காரை வழிமறித்து நடந்த சம்பவம்
புதுக்கோட்டை:
காரை வழிமறித்து தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை புதுக்கோட்டை மச்சுவாடி அருகில் தைலா நகர், இடையப்பட்டி வழியாக மருத்துவக்கல்லூரி செல்லும் சாலையில் சிறுவர்கள் சிலர் மது போதையில் அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகளிடமும், நடந்து செல்வோர்களிடமும், வழிப்பறியில் ஈடுபடுவதாகவும் சமூகவலைத்தளங்களில் வீடியோ வைரலானது. சமீபத்தில் அந்த வழியாக சென்ற ஒரு காரை வழிமறித்து, தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதாகவும், இதனை தட்டிக்கேட்ட போலீசார் ஒருவரையும் தாக்கியதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பாக கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 8 பேர் கொண்ட கும்பல் மது போதையில் காரை வழிமறித்து தாக்கி, வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 18 வயது நிரம்பிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- அம்ரித் திட்டத்தில் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக
புதுக்கோட்டை:
தெற்கு ரெயில்வேயில் அம்ரித் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் புதுக்கோட்டை ரெயில் நிலையமும் ஒன்றாகும். இதில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், புதிய கட்டிடங்களை கட்டவும் ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அம்ரித் திட்ட மேம்பாட்டு பணிக்கான தெற்கு ரெயில்வே முதன்மை திட்ட அதிகாரி பொன் பாலசுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் ரெயில் மூலம் நேற்று மதுரையில் இருந்து திருச்சி வழியாக புதுக்கோட்டை ரெயில் நிலையம் வந்தனர்.புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நடைமேடை, நடைபாதை மேம்பாலம், ரெயில் நிலைய வளாகப்பகுதி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக திருவப்பூர் ரெயில்வே கேட்டை அவர்கள் பார்வையிட்டனர்.
ஆய்வுக்கு பின் அம்ரித் திட்டத்தின் தெற்கு ரெயில்வே முதன்மை திட்ட அதிகாரி பொன் பாலசுந்தரம் நிருபர்களிடம் கூறுகையில், ''ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிக்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி தான் பணிகள் தொடங்கப்படும். திருவப்பூர் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைப்பதற்காக மாநில அரசின் ஆணை இன்னும் ரெயில்வே நிர்வாகத்திற்கு வரவில்லை. திருவப்பூர் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியை 1½ ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.
- வாகனம் மோதி புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.
- சாலைைய கடக்க முயன்றது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை, ஆலங்குடி, வம்பன், திருவரங்குளம் ஆகிய பகுதிகளில் புள்ளிமான்கள் இரை தேடியும், தண்ணீர் குடிப்பதற்கும் தைல மரக்காட்டில் சுற்றி வருகிறது. இந்தநிலையில், ஆலங்குடி அருகே வம்பனில் சாலையை புள்ளிமான் ஒன்று கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக ெசன்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு புதுக்கோட்டை மச்சுவாடிக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
- டாஸ்மாக் பார் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- குடும்ப தகராறில் நடந்த சம்பவம்
புதுக்கோட்டை:
இலுப்பூரில் புதுக்கோட்டை இலுப்பூர் சீத்தாராமன் நாயுடு தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 44). இவர் இலுப்பூரில் உள்ள டாஸ்மாக் பாரில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி பத்மா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் குடும்பத்தகராறு காரணமாக பாண்டியன் தனது மனைவி மற்றும் மகளை பிரிந்து இலுப்பூரில் உள்ள அரசு குடிசை மாற்றுவாரியத்தில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று பாண்டியன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேலத்தானியம் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் மேலத்தானியம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி காரையூர் பகுதியான முள்ளிப்பட்டி, கீழத்தானியம், ஆலம்பட்டி, நல்லூர், அரசமலை, எம்.உசிலம்பட்டி, சடையம்பட்டி, ஒலியமங்களம், காயாம்பட்டி, படுதனிப்பட்டி, நல்லூர், அரசமலை, மேலத்தானியம், காரையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று பொன்னமராவதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
- ஆஸ்பத்திரி முன்பு முற்றுகை போராட்டம்
- போலீசார் குவிக்கப்பட்டனர்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தேவர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நவீன் (வயது 24). சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் சொந்த ஊருக்கு வந்துவிட்டு அடுத்த வாரத்தில் மீண்டும் சிங்கபூருக்கு செல்வதற்காக ஆயத்த நிலையில் இருந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வைரிவயல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நவீன் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தாடை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.இதனை கேட்ட உறவினர்கள் நவீனை அழைத்துக்கொண்டு, அக்கினி பஜாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கே அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே நவீன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதனை அறிந்த உறவினர்கள் தவறான சிகிச்சை அளித்து நவீன் இறந்து விட்டதாகக்கூறி மருத்துவமனைக்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தினை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். தாடை எலும்பு முறிவிற்கு அறுவை சிகிச்சை செய்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






