என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோன்பு திறப்பு விழா"

    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு சிறந்த கொள்கை வீரர் என இப்தார் நோன்பு திறப்பு விழாவில் அமைச்சர் மெய்யநாதன் புகழாரம்
    • ஆலங்குடி பேரூராட்சியில் வார சந்தை மேம்பாடு, சாலை மேம்பாடு, இஸ்லாமியர்களுக்கான சுடுகாடு மேம்பாடு, ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஆலங்குடி:

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகிறார்கள். இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பெரிய பள்ளிவாசல் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஆலங்குடி தொகுதியில் கஜா புயல் மற்றும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது உதவி செய்ய இஸ்லாமியர்கள் முன்நின்றனர்.

    அப்படிப்பட்ட இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பிருந்து ஏழைகளுக்கு உதவி செய்து வருவது வாழ்த்துக்குறியது. இது மட்டும் இன்றி சகோதரத்துவமும், நல்லிணக்கமும் நிலவும் வகையில் ஆலங்குடி சிவன் கோவில் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு இஸ்லாமியர்கள் சீர் எடுத்து வந்த சம்பவம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. ஆலங்குடி பேரூராட்சியில் வார சந்தை மேம்பாடு, சாலை மேம்பாடு, இஸ்லாமியர்களுக்கான சுடுகாடு மேம்பாடு, ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் அனைத்து பகுதிகளும் வடிகால் வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் இப்பகுதி மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவாசிய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற உறுதுணையாக இருப்பேன். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு சிறந்த கொள்கை வீரர். தமிழ் மொழியின் பெருமையை மண்ணுலகம் மட்டுமின்றி விண்ணுலகத்தில் இருந்தும் பார்க்கும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் தமிழ் என்ற வார்த்தை தெரியும் வகையில் காடு அமைக்கப்பட உள்ளது.

    இதே போல் இஸ்லாமியர்கள் எதிர்த்து போராடிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகம் அனைத்து துறையிலும் மேன்மேலும் வளர்ச்சி பெற அயராவது பாடுபடுபவர் நமது முதல்வர் என்றார்.நிகழ்ச்சியில் திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை, பேரூராட்சி தலைவர் ராசி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்கமணி, நகர செயலாளர் பழனிக்குமார், ஜமாத் தலைவர் சரூக், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளர் சொர்ண குமார், கவுன்சிலர் சையது இப்ராஹிம், பாபு ஜான், முகமது இப்ராஹிம்,லத்தீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×