என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • விவசாயிகளுக்கு, பட்டுப்புழுவளர்ப்பு தொழிலில் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது
    • பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுவது தொடர்பான கருத்தரங்கினை கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியாபுதிய பேருந்து நிலையம் அருகிலு–ள்ள தனியார் உணவக கூட்ட அரங்கில் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசிய–தாவது: பெரம்பலூர் மாவட்ட–த்தில் பட்டு வளர்ச்சிதொழில் குறித்து நவீன தொழில்நுட்ப கருத்தரங்கு முதன் முறையாக நடைபெறுகிறது. நமது பெரம்பலூர் மாவட்டம் ஏற்கனவே மக்காச்சோளம், சின்ன வெங்காயம் போன்ற பொருட்களின் உற்பத்தியில் முதன்மையான மாவட்ட–மாக திகழ்ந்து வருகிறது. தனிமனித வருமானத்தை பெருக்க கூடியஅளவில் குறிப்பாக சிறு, குறு விவசாயி–களின் வருமானத்தை பெருக்கும் வகையில்பட்டு வளர்ச்சி துறையில் பல்வேறு பயிற்சிகள் உள்ளது.

    பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்கள் நவீன தொழில்நுட்பம் பற்றி கருத்துக்களை பரிமாறும் வகையிலும், பட்டு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை பட்டு வளர்ச்சி துறை வல்லுநர்களிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்த கருத்தரங்கு நடத்தப்படுகின்றது.

    இந்த நிகழ்ச்சியினை இங்கு உள்ள விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொ–ள்கி–றேன்.

    ஒரு வருடத்தில் பத்து மாதங்க–ளுக்கு உங்களுக்கு நிரந்தர வருமானம் கிடை–க்கும். 20 வருடங்க–ளுக்கு முன்பு பட்டு வளர்ச்சி தொழில் செய்த முறைக்கும், தற்போது பட்டு வளர்ச்சி தொழில் செய்பவர்களுக்கும் தொழி–ல்நுட்ப ரீதியாக அதிக வேறு–பாடுகள் உள்ளது. எனவேஉறுதியாக பட்டு தொழில் என்பது வருமானத்தை அளிக்க–க்கூடிய தொழிலாக உள்ளது. எனவே கருத்தரங்கில் விவசாயிகளான உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அலுவலர்களிடம் கேட்ட–றிந்து பயன்பெற வே–ண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவி–த்தார்.

    இந்தக் கருத்தரங்கில் மத்திய பட்டு வாரிய இயக்கு–நர் பாபுலால், துணை இயக்கு–நர் சந்திரசேகரன் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் பட்டுப்புழு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்
    • எந்திரங்களில் பணம் நிரப்பும் வேனை ஓட்டி வந்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அய்யலூர் வ. உ. சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்கிரண் ( வயது 32). இவர் ஒரு தனியார் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் வேனை ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் வழக்கம்போல் பணியை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் சிறுவாச்சூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.

    எடைய சமுத்திரம் பிரிவு சாலையில் சென்றபோது ராஜ்கிரண் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்த போதிலும் இன்று காலை ராஜ்கிரண் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி தவமணி என்ற மனைவி உள்ளார். விபத்து குறித்து மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்திரையிடாத 12 மின்னனு எடை தராசுகள் புறிமுதல் செய்யப்பட்டது
    • தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறையினர் மறுமுத்திரையிடாத 12 மின்னனு எடை தராசுகள் புறிமுதல் செய்தனர்.

    பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) மூர்த்தி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் மற்றும் பயிற்சி தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆகியோர் கொண்ட குழுவினர் பெரம்பலூர், வாலிகண்டாபுரம், லப்பைகுடிகாடு மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் மீன் மார்கெட், இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    24 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில், 12 மின்னனு தராசுகள் மறுமுத்திரையிடப்படாதது தெரியவந்ததையடுத்து அந்த 12 மின்னனு தராசுகள் பொது பறிமுதல் செய்யப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் தங்களது எடையளவுகளை குறித்த காலத்தில் முத்திரையிட்டு பயன்படுத்தவேண்டும், முத்திரையிடாத மின்னனு தராசுகளை பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • வேப்பூர் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதன் மாநில தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யின் 60-வது பிறந்தநாள் விழா வீரமநல்லூரில் கொண்டாடப்பட்டது.
    • பிறந்த நாளை யொட்டி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுகள், பேனாக்கள் வழங்கப்பட்டது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதன் மாநில தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யின் 60-வது பிறந்தநாள் விழா வீரமநல்லூரில் கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி 600 பேருக்கு அன்னதானம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுகள், பேனாக்கள் வழங்கப்பட்டது. விழாவுக்கு மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமை தாங்கினார். வேப்பூர் ஒன்றிய செயலாளர் வடக்கு வரதராஜன் முன்னிலை வகித்தார்.

    மேலும் விழாவுக்கு விவசாய அணி மாநில செயலாளர் வீர செங்கோலன், வேப்பூர் ஒன்றிய துணை சேர்மன் செல்வராணி வரதராஜன் ஆகியோர் திருமாவளவனின் அறுபதாவது வயதை குறிக்கும் வகையில் 60 கிலோ கொண்ட பெரிய கேக்கை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.

    நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகராட்சி கவுன்சிலர் சண்முகசுந்தரம், மாநில தொண்டரணி துணை செயலாளர் கராத்தே பெரியசாமி, மாவட்ட நிர்வாகிகள் தென்றல் இளவரசன், பொன் சங்கர், பெருஞ்சித்திரன், புதியவன், தொண்டரணி கொளஞ்சிநாதன், குணசேகர், அம்பேத்குமார், கருப்பன், கரும்பு மணிகண்டன், சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் பொதுமக்கள் மாணவ மாணவிகள் அனைவருக்கும் அன்னதானம், கேக், லட்டு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் செய்திருந்தார்.

    • குடிநீர் வழங்காததை கண்டித்து சங்குபேட்டை சிக்னலில், பெண்கள் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • பெரம்பலூர் துறைமங்கலம் பகுதிகளிலும் முறையாக குடிநீர் வழங்க வில்லை என்று கூறப்படுகிறது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் நகருக்கு கொள்ளிட குடிநீர் வழங்கும் பணி பெரம்பலூர் சங்குப்பேட்டை உள்பட அனைத்து வார்டு பகுதிகளிலும் கடந்த 20 நாட்களாக தடைபட்டுள்ளது.

    பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்காததை கண்டித்து நேற்று சங்குபேட்டை சிக்னலில், சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகரன், பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ், மாவட்ட தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், பாண்டியன், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அதே போல் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் மூன்று ரோடு பகுதியில், 8வது வார்டு மற்றும் 9 வது வார்டு பகுதி பொதுமக்களுக்கு கடந்த 1 மாதமாக காவிரி கூட்டுக்குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து, இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால், ஆத்திரமடைந்த இப்பகுதியை சேர்ந்த பெண்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நேற்று மாலை 6 மணியளவில் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவறிந்து வந்த, நகராட்சி அதிகாரிகள் நாளை குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர் பெண்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால், துறைமங்கலம் மூன்று ரோடு பகுதியில், ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நன்னை கிழக்கு நத்தம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்த 57 பேருக்கு கடந்த 2001ம் ஆண்டு வீட்டுமனை பட்டா அரசால் வழங்கப்பட்டது,
    • எங்களுக்கு மாற்று இடம் கிடையாது. எனவே நாங்கள் அங்கேயே குடியிருந்து வசிக்க வழிவகை செய்யவேண்டும்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியம், நன்னை போஸ்டாபீஸ் வீதியை சேர்ந்த 50க்கு மேற்பட்டோர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது,

    நன்னை கிழக்கு நத்தம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்த 57 பேருக்கு கடந்த 2001ம் ஆண்டு வீட்டுமனை பட்டா அரசால் வழங்கப்பட்டது, இதையடுத்து அந்த இடத்தில் நாங்கள் வீடு கட்டி வசித்து வருகிறோம்.

    இந்நிலையில் கடந்த 9ம்தேதி வருவாய்த்துறை மூலம் நிளஅளவு செய்யப்பட்டுள்ளது. எங்களது அந்த இடத்தை விட்டு காலி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    எங்களுக்கு மாற்று இடம் கிடையாது. எனவே நாங்கள் அங்கேயே குடியிருந்து வசிக்க வழிவகை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • ராகவன், 10ம்வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.
    • தற்போது அச்சிறுமி கார்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, மருதடி குன்னுமேடு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் ராகவன் (20).டிராக்டர் டிரைவர்.

    இவர் 10ம்வகுப்பு படிக்கும் மாணவியை கடந்த இரண்டுஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாகவும், இதனால் தற்போது அச்சிறுமி கார்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து ராகவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன் கிழமை மக்கள் குறைதீர் நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • குறை தீர்க்கும் முகாமில் 19 மனுக்கள் பெறப்பட்டு மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்பட்டது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் முகாம் நடந்தது.

    காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன் கிழமை மக்கள் குறைதீர் நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் எஸ்பி அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு எஸ்பி மணி தலைமை வகித்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.

    இதில் 19 மனுக்கள் பெறப்பட்டு மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்பட்டது. முகாமில் ஏடிஎஸ்பி மதியழகன் மற்றும் அனைத்து போலீஸ்ஸ்டேசன் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்று வருகிறது. இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என எஸ்பி மணி தெரிவித்தார்.

    • வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளை கிருஷ்ணனாக பாவித்து அவர்களுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கொண்டாடும் பண்டிகை இது, பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமிட்டும் மகிழ்வர்
    • தட்டை, அதிரசம், கடலை உருண்டை தேன்குழல், பொட்டுக் கடலை உருண்டை மற்றும் வெண்ணைய்ஆகியவை வைத்து படையல் செய்யும் வகையில் அடங்கிய சிறப்பு கிப்ட் பை தயார் செய்யப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் :

    உலக மக்களுக்கு நன்னெறிகளை காட்டும் பகவத் கீதையை தந்த பரந்தாமன் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த நன்னாளை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜென்மாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) என்ற பெயரில் கிருஷ்ண பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளை கிருஷ்ணனாக பாவித்து அவர்களுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கொண்டாடும் பண்டிகை இது, பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமிட்டும் மகிழ்வர்.

    அதனால் கிருஷ்ணனுக்கும் குழந்தைகளுக்கும் பிடித்தமான இதற்காக அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் மூலம் கிருஷ்ணருக்கும், குழந்தைகளுக்கும் பிடித்தமான இனிப்பு சீடை, மனவலம், கார சீடை, தட்டை, அதிரசம், கடலை உருண்டை தேன்குழல், பொட்டுக் கடலை உருண்டை மற்றும் வெண்ணைய் ஆகியவை வைத்து படையல் செய்யும் வகையில் அடங்கிய சிறப்பு கிப்ட் பை தயார் செய்யப்பட்டுள்ளது.

    இதுபற்றி அஸ்வின்ஸ் நிறுவன தலைவர் கே.ஆர்.வி.கணேசன் கூறுகையில், எங்களது கிளைகளான பெரம்பலூர், திருச்சி, துறையூர், அரியலூர் ஆகிய இடங்களில் உள்ள அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் பேக்கரியில் நேற்று விற்பனை துவங்கியது. இந்த சிறப்பு விற்பனை வரும் 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஆர்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி கிப்ட் பேக் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் அஸ்வின்ஸ் நிறுவனத்தில் 73730 41434 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களையும் கே.ஆர்.வி.கணேசன் தெரிவித்து உள்ளார்.

    • ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் என்.எஸ்.பி. சாலையில் பெரியார் சிலை அருகே உள்ள திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் வினோத்(வயது 28). இவர் செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர், தனது நண்பர் சுப்ரமணிய பாரதியார் தெருவைச்சேர்ந்த காஞ்சன் என்ற கார்த்திக்(25) என்பவருடன், நிர்மலா நகரில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நின்று பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக வினோத்தை கத்தியால் குத்தி கொலை செய்தது. மேலும் கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த வழக்கில் பெரம்பலூர் வடக்குமாதவி சாலையை சேர்ந்த மணிகண்டன் (21), எளம்பலூர் சிபிராஜ் (19), வடக்குமாதவி ஏரிக்கரை பகுதியைச்சேர்ந்த வெங்கடேஷ் (21), பெரம்பலூர் கம்பன் தெருவைச்சேர்ந்த பூவாயி என்ற பூவரசன் (21) மற்றும் எளம்பலூர் சாலையைச்சேர்ந்த பப்லு என்ற சத்தியமூர்த்தி (24) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொலை வழக்கின் முக்கிய நபரான பெரம்பலூர் மல்லிகை நகரைச்சேர்ந்த அபிஷேக்கை (20) நேற்று பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சாலை மறியலில் ஈடுபட்ட 13 இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
    • திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    பெரம்பலூர்:

    ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் தலைவரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பெரம்பலூரில் பழைய பஸ் நிலையத்தில் காந்தி சிலை அருகே இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் தலைமைலில் நடந்த இந்த மறியல் போராட்டத்தில் நகர தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் செல்வக்குமார், திருச்சி கோட்டத் தலைவர் போஜராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், வி.களத்தூர் தலைவர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்து, ஆத்தூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    • திறன் உயர்த்தப்பட்ட மின்மாற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.
    • பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் கைகளத்தூரில் ரூ.18 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 110 கிலோவாட் திறன் கொண்ட புதிய துணை மின் நிலையம் மற்றும் துறைமங்கலம் நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள துறைமங்கலம் 110 கிலோவாட் துணை மின் நிலையத்தில் ரூ.1 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் 16 மெகாவாட் அதிக திறன் உயர்த்தப்பட்ட மின்மாற்றி ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து துணை மின் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். தரம் உயர்த்தப்பட்ட மின்மாற்றியால் பெரம்பலூர் நகர், அரணாரை, எளம்பலூர் இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, எளம்பலூர், சமத்துவபுரம், அரியலூர் மெயின் ரோடு, கவுல்பாளையம், காவலர் குடியிருப்பு, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி, அருமடல் ரோடு தொழிற்சாலை பகுதிகளில் உள்ள 40 ஆயிரத்து 386 மின் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரமும், அதேபோல கிருஷ்ணாபுரம் துணைக்கோட்டத்தில் உள்ள கை.களத்தூரை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள 8 ஆயிரத்து 324 மின் நுகர்வோருக்கு சீரான மின்சாரமும் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் மின்வாரிய அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×