என் மலர்
உள்ளூர் செய்திகள்

அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கிப்ட் பேக் விற்பனை தொடக்கம்
- வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளை கிருஷ்ணனாக பாவித்து அவர்களுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கொண்டாடும் பண்டிகை இது, பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமிட்டும் மகிழ்வர்
- தட்டை, அதிரசம், கடலை உருண்டை தேன்குழல், பொட்டுக் கடலை உருண்டை மற்றும் வெண்ணைய்ஆகியவை வைத்து படையல் செய்யும் வகையில் அடங்கிய சிறப்பு கிப்ட் பை தயார் செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் :
உலக மக்களுக்கு நன்னெறிகளை காட்டும் பகவத் கீதையை தந்த பரந்தாமன் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த நன்னாளை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜென்மாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) என்ற பெயரில் கிருஷ்ண பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளை கிருஷ்ணனாக பாவித்து அவர்களுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கொண்டாடும் பண்டிகை இது, பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமிட்டும் மகிழ்வர்.
அதனால் கிருஷ்ணனுக்கும் குழந்தைகளுக்கும் பிடித்தமான இதற்காக அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் மூலம் கிருஷ்ணருக்கும், குழந்தைகளுக்கும் பிடித்தமான இனிப்பு சீடை, மனவலம், கார சீடை, தட்டை, அதிரசம், கடலை உருண்டை தேன்குழல், பொட்டுக் கடலை உருண்டை மற்றும் வெண்ணைய் ஆகியவை வைத்து படையல் செய்யும் வகையில் அடங்கிய சிறப்பு கிப்ட் பை தயார் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி அஸ்வின்ஸ் நிறுவன தலைவர் கே.ஆர்.வி.கணேசன் கூறுகையில், எங்களது கிளைகளான பெரம்பலூர், திருச்சி, துறையூர், அரியலூர் ஆகிய இடங்களில் உள்ள அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் பேக்கரியில் நேற்று விற்பனை துவங்கியது. இந்த சிறப்பு விற்பனை வரும் 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஆர்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி கிப்ட் பேக் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் அஸ்வின்ஸ் நிறுவனத்தில் 73730 41434 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களையும் கே.ஆர்.வி.கணேசன் தெரிவித்து உள்ளார்.






