என் மலர்
பெரம்பலூர்
- தொழில்முனைவோர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது
- மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பேசினார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வசதியாக்க நிறுவனம் (எம்.எஸ்.எம்.இ.) மாவட்ட குறு, சிறு தொழில்கள் சங்கம், மாவட்ட தொழில்மையம் சார்பில் தொழில்முனைவோர்களுக்கான பூஜ்ய குறைபாடு பூஜ்ய விளைவு குறித்த பயிலரங்கம் நடந்தது. பயிலரங்கில் எம்.எஸ்.எம்.இ. சென்னை உதவி இயக்குனர் சி.பி.ரெட்டி அறிமுக உரையாற்றினார். இந்த பயிலரங்கை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தொடங்கி வைத்து பேசுகையில், கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு தற்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள புதிய உற்சாகத்துடன் செயல்பட்டு வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பூஜ்ய குறைபாடு பூஜ்ய விளைவு சான்றிதழ்களை பெறுவதின் மூலம் மத்திய, மாநில அரசுகளின் கூடுதல் மானியங்களை பெறலாம். தொழில் நிறுவனங்கள் இச்சான்றிதழ்பெற www.zed.msme.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறினார். இந்த கூட்டத்தில் எம்.எஸ்.எம்.இ. இணை இயக்குனர் சுரேஷ் பாபுஜி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் செந்தில்குமார், ஆலோசகர் கார்த்திகேயன், மாவட்ட சிறு, குறு தொழில் முனைவோர் சங்க தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி இயக்குனர் கிரண்தேவ் சட்லூரி நன்றி கூறினார்."
- ஒகளூர் கிராமத்தில் 5 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது
- கோர்ட்டு உத்தரவின்படி நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரிகள் மற்றும் நீர் வழித்தடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் கோர்ட்டு உத்தரவின்படி அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஓகளூர் கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்த ஏரிகளுக்கு நீர் வரும் வரத்து வாய்க்காலில் சில குறிப்பிட்ட பகுதி குடியிருப்பு பகுதியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனை அறிந்த குன்னம் தாசில்தார் அனிதா சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டார். அதன்பின்னர் கோர்ட்டு உத்தரவின் படி 5 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன."
- மொபட்டை திருடிய மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.
- பஸ்சில் ஏறி வடக்கு மாதவி சென்றுள்ளார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜென்கின் பிரியா (வயது 42). இவர் பெரம்பலூர் அருகே உள்ள தெற்கு மாதவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 23-ந் தேதி தனது மொபட்டை வேப்பந்தட்டையில் நிறுத்திவிட்டு பஸ்சில் ஏறி வடக்கு மாதவி சென்றுள்ளார். பின்னர் மாலையில் வந்து பார்த்தபோது மொபட்டை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்னமங்கலத்தை சேர்ந்த மெக்கானிக் சிவக்குமார் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
- சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- சிறுமியின் தாய் கொடுத்த புகாரில் நடவடிக்கை
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே 14 வயது சிறுமியை கற்பழித்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் இந்திரா நகர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காங்கு மகன் கார்த்திக் (வயது 27). இவர் கடந்த 23-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை வலுகட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிந்து கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூரில் கருத்தரங்கம் நடைபெற்றது.
- இந்திய வாலிபர் சங்கத்தின் சார்பில் நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டக்குழு இந்திய வாலிபர் சங்கத்தின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம் பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் நேற்று நடந்தது. கருத்தரங்கத்திற்கு மக்களுக்கான மருத்துவர் கழகத்தின் மாநில செயலாளர் டாக்டர் கருணாகரன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா மாவீரன் பகத்சிங் கண்ட கனவு என்ற தலைப்பிலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் லெனின் தமிழக இளைஞர் இயக்க வரலாறு என்ற தலைப்பிலும் பேசினர்.
- நவராத்திரி 3-வது நாள் விழா நடந்தது
- அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தா
பெரம்பலூர்
நவராத்திரி 3-வது நாள் விழாவில் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் மூலவர் வாலாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்."
- உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- இந்த உத்தரவை மீறிடும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் போதிய அளவு உரங்கள் கையிருப்பில் உள்ளது. பெரம்பலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும். இந்த உத்தரவை மீறிடும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மொத்த உர விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்திடவும், விற்பனை செய்திடவும் கூடாது. மேலும் உரங்களை வெளி மாவட்டங்களில் இருந்தும் கொள்முதல் செய்யக்கூடாது. விவசாயிகளின் தேவைக்கு மேல் அதிகமாகவும் மற்றும் இணை உரம் வழங்கக்கூடாது. ஒரே நபருக்கு அதிக அளவு உரம் வழங்கக்கூடாது. குறிப்பிட்ட விவசாயிகளின் பெயரில் அதிகப்படியாக உர விற்பனை கண்டறியப்பட்டால் சில்லரை விற்பனை உரிமம் எந்த முன் அறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்படும். விவசாயம் மேற்கொள்ளாத நபர்களுக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது.
திடீர் ஆய்வின் போது மேற்காணும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர விற்பனையாளர்களின் விற்பனை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும். விவசாயிகள் தாங்கள் உரம் வாங்க செல்லும் போது ஆதார் அட்டையுடன் சென்று உரம் பெற்றுக்கொண்டு உரிய பட்டியல் கேட்டு பெற வேண்டும். உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- தொழில் தொடங்க 25 நபர்களுக்கு ரூ.86 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது
- வங்கி மேலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிளலான வங்கி மேலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில் துறை சார்ந்த திட்டங்கள், தாட்கோ மூலம் செயல்படும் திட்டங்கள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் இலக்குகள் மற்றும் சாதனைகள் குறித்து விவாக கலந்தாலோசனை செய்யப்பட்டது. பின்னர் இதில் தொழில் துவங்குவதற்காக 25 பேருக்கு ரூ . 86 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
கூட்டத்தில் ஐஓபி முதன்மை மண்டல மேலாளர் சங்கீதா, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் பிரபாகரன், முன்னோடி வங்கி மேலாளர் பாரத்குமார், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் செந்தில்குமார், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ஆனந்தி, மகளிர் திட்ட இயக்குநர் ராஜ்மோகன், வேளாண் துணை இயக்குநர் சிங்காரம், நகராட்சி ஆணையர் (பொ) மனோகரன் மற்றும் வங்கி மேலாளர்கள் பலர் கலந்து கொண்னடர்.
- மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது
- வரும் 2-ந் தேதி நடைபெறுகிறது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்த கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது.
பெரம்பலூர் மா.கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மா.கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் , தொழிலாளர் கட்சி ஆகியவற்றின் சார்பில் சமூக நல்லிணக்க போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மா.கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் வீரசெங்கோலன், தொழிலாளர் கட்சி மாநில தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் கோவையில் குண்டு வீச்சு நடந்தது. கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சுகளும் நடைபெற்று வருகின்றன. இவற்றிற்கு காரணமான அனைவரையும் காவல்துறை விரைந்து கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும். தமிழகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதை வரவேற்கிறோம்.
மக்கள் விரோதப் போக்கைக் கண்டிக்கிற வகையிலும், தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கிற வகையிலும் வரும் 2-ந் தேதி மாலை 4 மணியளவில் பெரம்பலூரில் "சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி" நடத்துவது, இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தரப்பு, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் கலந்துகொள்ளவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா தொடங்கியது.
- அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் 41-வது ஆண்டு லட்சார்ச்சனை மற்றும் நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி உற்சவ அம்மனுக்கு நேற்று முன்தினம் மதுரகாளியம்மன் அலங்காரம் நடந்தது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மதுரை மீனாட்சி அலங்காரமும், இன்று (புதன்கிழமை) காமாட்சி அலங்காரமும் நடக்கிறது.
நாளை (வியாழக்கிழமை) ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 30-ந்தேதி துர்க்கை அலங்காரமும் நடக்கிறது. அக்டோபர் மாதம் 1-ந் தேதி கருமாரியம்மன் அலங்காரமும், 2-ந் தேதி மாரியம்மன் அலங்காரமும், 3-ந் தேதி லட்சுமி அலங்காரமும் நடக்கிறது.
இதையடுத்து, 4-ந்தேதி சரஸ்வதி அலங்காரமும், 5-ந்தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து அம்மன் புறப்பாடு மற்றும் அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் லட்சார்ச்சனை விழா நிறைவடைகிறது. நவராத்திரியின் அனைத்து நாட்களிலும் தினமும் மாலை 4 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கி இரவு 7 மணிவரை நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு உற்சவர் மண்டகப்படி நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்
- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.
- கலெக்டர் தலைமையில் நடக்கிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடப்பிரியா தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடன் உதவிகள், வேளாண் இடுபொருட்கள், வேளாண் எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதால், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இதில் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- வனஉயிரின வார விழாவையொட்டி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.
- 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.
பெரம்பலூர்
தமிழ்நாடு வனத்துறை திருச்சி மண்டலம் பெரம்பலூர் வனக்கோட்டம் மற்றும் பெரம்பலூர் வனச்சரகம் சார்பில் வனஉயிரின வாரவிழா அக்டோபர் மாதம் 2-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கலைப்போட்டிகள் வேளாண்மை கல்லூரியில் நடந்தது. இதில் 6-ம் வகுப்பு, 9 முதல் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் என பள்ளி மாணவர்களுக்கு 3 பிரிவாக ஓவியம், கட்டுரை, வினாடி-வினா, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. வனஉயிரினங்கள் பாதுகாப்பில் நமது பங்களிப்பு மற்றும் அவசியம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டிகளும், மனித-வன உயிரினங்களுக்கு இடையிலான சகவாழ்வு என்ற தலைப்பில் கட்டுரை, பேச்சுப்போட்டிகளும், சுற்றுச்சூழல், வனம் மற்றும் வன உயிரினம் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டிகளும் தனித்தனியே நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்தினர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன், பேராசிரியர் முத்து விஜயராகவன், வனவர் குமார் மற்றும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் செய்திருந்தனர்.






