என் மலர்
பெரம்பலூர்
- பெருமாள் கோயிலில் சுவாமி வீதி உலா நடந்தது
- அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு வரதராஜ கம்பபெருமாள் கோவிலில் திருவீதி உலா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் பெருமாள் சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திருவீதி உலா வந்தது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சத்யா (வயது 25). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கனகராஜுக்கும், சத்யாவிற்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் மனம் உடைந்த சத்யா வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்துள்ளார். இதை அறிந்த உறவினர்கள் கனகராஜுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் சத்யாவை உடனடியாக மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.பின்னர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இது குறித்து மங்களமேடு போலீஸ் துைண சூப்பிரண்டு ஜனனிபிரியா மேல் விசாரணை நடத்தி, கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.
- பாலத்தின் சுவரில் தூங்கியவர் தவறி விழுந்து இறந்தார்
- பலத்த காயம் ஏற்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மறவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 55). இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவற்றின் மீது படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். இந்நிலையில் சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது
- நெடுஞ்சாலை துறை மூலம் நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை மூலம் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவை அழகுபடுத்தும் பணிகள் மற்றும் மரக்கன்று நடுதல் பணி நேற்று துவங்கியது. கோனேரிபாளையம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் புறவழிச்சாலை பகுதியில் நேற்று மரக்கன்று நடுதலை நெடுஞ்சாலை துறை பெரம்பலூர் கோட்ட பொறியாளர் கலைவாணி தொடங்கிவைத்தார்.
இதே போல் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டாவில் அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் வண்ண பூக்கள் செடிகளை நட்டுவைத்தார்.
பின்னர் கோட்ட பொறியாளர் பேசுகையில், துறைமங்கலம், நான்குரோடு, துறையூர் சாலை, ஆத்தூர் சாலை, அரியலூர் சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடமுடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாலக்கரை ரவுண்டானாவை அழகு படுத்தும் விதமாக பல்வேறு வகையான வண்ண பூக்கள் பூக்கும் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்படவுள்ளது. மேலும் பெரம்பலூர் -துறைமங்கலம் 3 ரோடு பகுதியிலிருந்து பாலக்கரை வரைஉள்ள சாலை சென்டர் மீடியனில் பல்வேறு வகையான வண்ண பூக்கள் பூச்செடிகள் நடப்படவுள்ளது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் மாயவேல், உதவி பொறியாளர் ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்த பாலையூர் கிராமத்தில் உள்ள வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. இதையொட்டி நந்தி பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
புரட்டாசி மாத 2-வது பிரதோஷத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கு நேற்று மாலை சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில், அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தீஸ்வரர் கோவில், செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நந்திபெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி புறப்பாடும் நடந்தது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் நந்தி பெருமானை வழிபட்டனர்.
- நேருயுவகேந்திரா சார்பில் இளையோர் திருவிழா நடைபெற உள்ளது.
- பேச்சு, ஓவியம், கவிதை போட்டிகள்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில் இளையோர் திருவிழாவையொட்டி வரும் 12ம்தேதி நடைபெறவுள்ள பேச்சு, ஓவியம், கவிதை, கலைபோட்டிகளில் கலந்துகொள்ள இருபாலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட இளைஞர் அலுவலர் கீர்த்தனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நம் நாட்டின் சுதந்திர தின அமுதப்பெருவிழாவை கொண்டாடிவரும் இவ்வேலையில் இந்திய சுதந்திரப்போராட்டத்தின் லட்சியங்களையும், மதிப்புகளையும், நினைவுகூறவும், நம்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும், தேசியம், தேசபக்தி மற்றும் நல்லிணக்க உணர்வை மக்களிடையே பரப்பவும், இளம் கலைஞர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரவும், அவர்களை ஊக்கப்படுத்தி, பாராட்டி கவுரவப்படுத்தவும் வகையில் மத்திய அரசின் இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நேருயுவகேந்திரா மூலம் இளையோர் திருவிழா நாடு முழுவதும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா மற்றும் இந்தியா - 2047 இளையோர் கலந்துரையாடல், கருத்தரங்கம் ஆகியவை வரும் 12-ந் தேதி காலை 9 மணி முதல் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
மாவட்ட அளவிலான ஓவியம், கவிதை மற்றும் புகைப்படம் எடுத்தல் போட்டிகளில் முதல் இடங்களில் வெற்றிபெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளவும், மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் முதலிடத்தில் வெற்றிபெறுபவார்கள் முறையே மாநில மற்றும் தேசிய அளவிலான நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்தகுதி பெறுவர்.
போட்டிகளில் கலந்துகொள்ள விரும்வோர் பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா, எண்.482, நான்கு ரோடு, துறைமங்கலம் - அஞ்சல், பெரம்பலூர் - 621220. என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04328 - 296213 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, பெயர்களை பதிவு செய்து போட்டிகள் மற்றும் விழாவில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
- சாராயம் தயாரிக்க 80 லிட்டர் ஊறல் போட்ட விவசாயி கைது செய்யப்பட்டார்
- ஒகளூர் கிராமத்தில் போலீசார் ரோந்து சென்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ரஞ்சனா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் குன்னம் தாலுகா, ஒகளூர் கிராமத்தில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது கரும்பு தோட்டத்தில் ஒகளூர் தெற்கு தெருவை சேர்ந்த கருப்பையா (வயது 50) என்பவர் சாராயம் தயாரிக்க பேரலில் போடப்பட்டிருந்த 80 லிட்டர் ஊறல் மற்றும் 2 லிட்டர் சாராயம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அவை அதே இடத்தில் அழிக்கப்பட்டன. இதையடுத்து கருப்பையாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது போன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்."
- ரேணுகாம்பாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது
- மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது
பெரம்பலூர்
பெரம்பலூரில் பூசாரித்தெருவில் உள்ள அம்சா ரேணுகாம்பாள் கோவிலில் 16-வது ஆண்டு நவராத்திரி கொலு வைபவ விழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது. தினமும் இரவு ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி, வைஷ்ணவி, அன்னபூரணி, காமாட்சி, மீனாட்சி, கருமாரியம்மன், மகாலட்சுமி ஆகிய அம்சங்களில் இரவு வழிபாடுகள் நடந்தன. 9-ம் நாளான ஆயுதபூஜை தினத்தன்று உற்சவ அம்பாளுக்கு சரஸ்வதி அலங்காரமும், விஜயதசமி அன்று அம்பாளுக்கு ரேணுகாம்பாள் அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. 11-வது நாளான நேற்று பகலில் மஞ்சள் நீர் உற்சவமும், இரவில் ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. இதையொட்டி அம்பாள் சயன கோலத்தில் ஊஞ்சலில் அலங்கரித்து வைக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு விடையாற்றி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். கொலு வைபவத்தின் நிறைவு நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு உற்சவ ரேணுகாம்பாள் ஆலய உட்பிரவேச நிகழ்ச்சி நடக்கிறது."
- பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளது
- நாளை நடைபெறுகிறது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. அதன்படி பெரம்பலூர் வட்டாரத்திற்கு அம்மாபாளையம், வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு வேப்பந்தட்டை, குன்னம் வட்டாரத்திற்கு வசிஷ்டபுரம், ஆலத்தூர் வட்டாரத்திற்கு புதுக்குறிச்சி ஆகிய 4 கிராமங்களில் நடக்கிறது. கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம்."
- ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா பயணத்தை அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது.
- அலுவலர் சங்க விழா வெங்கடேசபுரத்தில் நடந்தது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க விழா வெங்கடேசபுரத்தில் நடந்தது. விழாவிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் மணி வரவேற்றார். செயலாளர் மருதமுத்து சங்கத்தின் ஆண்டறிக்கையை வாசித்தார். இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில செயலாளர் முத்துக்குமரவேலு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரின் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் மேன்மேலும் வளர சங்கத்தின் சார்பில் பாராட்டப்படுகிறது. தமிழ்நாடு அரசு 2017-ல் அறிவிக்கப்பட்ட ஊதியக்குழுவின் நிலுவை தொகையை அனுமதித்து வழங்க வேண்டும். 70 வயதான ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சமாகவும், மருத்துவப்படியை ரூ.ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். அகவிலைப்படியை மத்திய அரசு வழங்கும் நாள் முதலே நிலுவையின்றி வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் அனைவருக்கும் அரசு பஸ்களில் கட்டணமில்லா பயணத்தை அமல்படுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டத்தை தொடங்க வேண்டும். பொங்கல் பரிசு தொகையாக ஓய்வூதியர்களுக்கு ரூ.ஆயிரமாக வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கண்புரை சிகிச்சைக்கு அரசாணைப்படி ரூ.30 ஆயிரம் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன."
- இலவச சுயதொழில் பயிற்சி வழங்கப்பட உள்ளது
- வரும் 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
பெரம்பலூர்:
பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் ஆண் மற்றும் பெண்களுக்கான இலவச காகித பைகள், பொம்மை தயாரித்தல் மற்றும் பெண்களுக்கான ஆடை அணிகலன் தயாரித்தல் பயிற்சி இம்மாதம் 12-ந் தேதி முதல் இலவசமாக அளிக்கப்படுகிறது.
பயிற்சியின் கால அளவு 10 மற்றும் 13 நாட்கள். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை, வங்கி புத்தகம் ஆகியவற்றின் 2 நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து வரும் 10-ந் தேதிக்குள் பதிவு செய்யவும்.
மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் – 621212 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
- விஜயதசமி பண்டிகை முன்னிட்டு மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது
- சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் தாலுகா,கூத்தனூர் கிராமத்தில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு மாரியம்மன்,மருதையான் சாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.
ஆலத்தூர் தாலுகா, கூத்தனூர் கிராமத்தில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டி கையை முன்னிட்டு மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சாமிக்கு சிறப்பு அபிஷேகமும் . நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
விழாவில் முக்கிய சிறப்பு நிகழ்வான மாரியம்மன், மருதையான் சுவாமிகள் மாரியம்மன் கோவில் முன்பு வீதியுலா தொடங்கி பெரிய ஏரிக்கு வந்தடைந்தது. மாரியம்மன்,மருதையான் சுவாமிகள் ஆனது அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா நடைபெற்றது.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கூத்தனூர் கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.






