என் மலர்
உள்ளூர் செய்திகள்

நேருயுவகேந்திரா சார்பில் இளையோர் திருவிழா
- நேருயுவகேந்திரா சார்பில் இளையோர் திருவிழா நடைபெற உள்ளது.
- பேச்சு, ஓவியம், கவிதை போட்டிகள்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில் இளையோர் திருவிழாவையொட்டி வரும் 12ம்தேதி நடைபெறவுள்ள பேச்சு, ஓவியம், கவிதை, கலைபோட்டிகளில் கலந்துகொள்ள இருபாலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட இளைஞர் அலுவலர் கீர்த்தனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நம் நாட்டின் சுதந்திர தின அமுதப்பெருவிழாவை கொண்டாடிவரும் இவ்வேலையில் இந்திய சுதந்திரப்போராட்டத்தின் லட்சியங்களையும், மதிப்புகளையும், நினைவுகூறவும், நம்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும், தேசியம், தேசபக்தி மற்றும் நல்லிணக்க உணர்வை மக்களிடையே பரப்பவும், இளம் கலைஞர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரவும், அவர்களை ஊக்கப்படுத்தி, பாராட்டி கவுரவப்படுத்தவும் வகையில் மத்திய அரசின் இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நேருயுவகேந்திரா மூலம் இளையோர் திருவிழா நாடு முழுவதும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா மற்றும் இந்தியா - 2047 இளையோர் கலந்துரையாடல், கருத்தரங்கம் ஆகியவை வரும் 12-ந் தேதி காலை 9 மணி முதல் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
மாவட்ட அளவிலான ஓவியம், கவிதை மற்றும் புகைப்படம் எடுத்தல் போட்டிகளில் முதல் இடங்களில் வெற்றிபெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளவும், மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் முதலிடத்தில் வெற்றிபெறுபவார்கள் முறையே மாநில மற்றும் தேசிய அளவிலான நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்தகுதி பெறுவர்.
போட்டிகளில் கலந்துகொள்ள விரும்வோர் பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா, எண்.482, நான்கு ரோடு, துறைமங்கலம் - அஞ்சல், பெரம்பலூர் - 621220. என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04328 - 296213 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, பெயர்களை பதிவு செய்து போட்டிகள் மற்றும் விழாவில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.






