என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணி நீக்கத்துக்கு எதிராக ஊழியர்கள் 36-ம் நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்களை தீ வைத்து எரித்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூரை அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணி நீக்கத்துக்கு எதிராக ஊழியர்கள் 36-ம் நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். திருமாந்துறை சுங்கச்சாவடியில் போலீஸ் பாதுகாப்பை தொடர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரியும், சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள பரப்பளவில் 800 மீட்டர் சுற்றளவுக்கு போராட்டங்கள் நடத்த தடை விதிக்கக்கோரியும் திருச்சி சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து, ஊழியர்கள் அமைதியான முறையில் போரட்டத்தை நடத்தலாம் எனவும், வாகன போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டது. மேலும் பாதுகாப்பு அளிப்பதில் தற்போதைய நிலையே தொடர வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.

    இதனையடுத்து டி.டி.பில். நிர்வாகத்தின் சட்ட விதிமுறைகளுக்கு மாறாக ஆட்குறிப்பு செய்யப்பட்டதை கண்டித்து நேற்று மாலை ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் விஜயகுமார் தலைமையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்களை தீ வைத்து எரித்தனர்.

    மேலும் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டைகளின் ஒரிஜினல்களை வருவாய் துறை அதிகாரியிடம் ஒப்படைக்க உள்ளோம் என போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.

    • பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
    • பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம்.

    பெரம்பலூர் ;

    பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 8ம்தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமையில் நடைபெறவுள்ளது.

    பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என மின்வாரிய செயற்பொறியாளர் அசோ க்குமார் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மூலம் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் வரும் 10ம்தேதி ஏலம் விடப்படுகிறது.
    • பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மூலம் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் வரும் 10ம்தேதி ஏலம் விடப்படுகிறது.

    இது குறித்து மதுவிலக்கு அமலாக்கபிரிவு ஏடிஎஸ்பி (பொ) பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியதாவது-

    பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடை மையாக்கப்பட்ட 12 இரண்டு சக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் மொத்தம் 14 வாகனங்கள் வரும் 10ம்தேதி காலை 10 மணி முதல் ஆயுதப்படை வளாகம், தண்ணீர் பந்தலில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.

    பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 9498159048, 9790680013 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் இருசக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தி தங்களது பெயர் முகவரியை வரும் 8ம்தேதி முதல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, பெரம்பலூரில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி சேர்த்து பிற்பகல் 3 மணிக்குள் உரிய அலுவலரிடம் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும், பெறப்பட்ட வைப்பு த்தொகை கழித்துக் கொள்ளப்படும். வாகனங்களை வரும் 9ம் தேதி காலை 10 மணிமுதல் பார்வை யிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையை தவறாமல் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • கருத்தரங்கை தனலட்சுமி சீனிவாசன் பல்கலை க் கழகத்தின் வேந்தர் அ.சீனிவாசன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • திருச்சி என்.ஐ.டி. ஆய்வு குழுவின் பேராசிரியர் வேல்மதி சுற்றுச்சூழலில் படிகங்களின் பயன்பாடுகள் என்ற தலைப்பில் பேசினர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பாக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

    கருத்தரங்கை தனலட்சுமி சீனிவாசன் பல்கலை க் கழகத்தின் வேந்தர் அ.சீனிவாசன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    முதல்வர் நா. வெற்றி வேலன் வாழ்த்துரை வழங்கினார். முதல் அமர்வில் பிரேசில் காம்பினாஸ் பல்கலைக்க ழகத்தைச் சேர்ந்த முதுநிலை ஆராய்ச்சியாளர் சில ம்பரசன், மைக்ரோ மற்றும் நானோ பொருட்களின் அமைப்புகளில் இன்றைய சுற்றுச்சூழல் என்ற தலைப்பிலும், திருச்சி என்.ஐ.டி. ஆய்வு குழுவின் பேராசிரியர் வேல்மதி சுற்றுச்சூழலில் படிகங்களின் பயன்பாடுகள் என்ற தலைப்பிலும் பேசினர். இந்த அமர்வுக்கு பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

    இரண்டாம் அமர்வில் மின் காந்த பொருட்களை எவ்வாறு சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்துவது என்னும் தலைப்பில் திருச்சி அண்ணா பல்கலை க்கழகத்தின் பேராசிரியர் பிரகதீஸ்வரன் தனது ஆய்வு அறிக்கையை விளக்கி கூறினார். முன்னதாக இயற்பியல் துறையின் தலைவர் சு.மணிமாறன் வரவேற்று பேசினார்.

    கருத்தரங்கில் மாணவ , மாணவிகள் தங்களின் சந்தேகங்களை சிறப்பு விருந்தினர்க ளுடன் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டனர்.

    இதில் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 120க்கும் அதிகமான ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • துரை என்பவர் பெரம்பலூர் பாலக்கரை அருகே பிரபல பைக் கம்பனியின் விற்பனை மையத்தை நடத்தி வருகிறார்.
    • ஷோரூமில் கடந்த 25 ம்தேதி ரூ. 10 லட்சம் ரொக்க பணம் திருடு போனது.

    பெரம்பலூர்,

    கள்ளக்குறிச்சி சேர்ந்த துரை (வயது51) என்பவர் பெரம்பலூர் பாலக்கரை அருகே பிரபல பைக் கம்பனியின் விற்பனை மையத்தை நடத்தி வருகிறார்.

    இந்த ஷோரூமில் கடந்த 25 ம்தேதி ரூ. 10 லட்சம் ரொக்க பணம் திருடு போனது. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். எஸ்.பி மணி உத்தரவின்பேரில் டி.எஸ்.பி சஞ்சீவ்குமார் மேற்பார்வையில் குற்றப்பிரிவு போலீசார் கொண்டு தனிப்படை அமைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை தேடிவந்தனர்.

    இந்நிலையில் நேற்று பெரம்பலூர் நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுக்கொ ண்டிருந்தவரை போலீசார் பிடித்து அவரிடம் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள மேலக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கோச்சடை பாண்டியன் (எ) பாண்டியன் என்பதும்,

    இவர் தான் பெரம்பலூர் பாலக்கரையில் அமைந்துள்ள பைக் ஷோரூமில் ரூ.10 லட்சம் பணத்தை பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ரூ.8.70 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அயன் பேரையூர் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இம்முகாமினால் 50 க்கும் மேற்பட்ட பயனாளிகள் தங்களது மாடு, ஆடு, என சுமார் 200க்கும் மேற்பட்ட விலங்கினங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள அயன் பேரையூர் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலபணித்திட்ட அமைப்பு மற்றும் வி.களத்தூர் அரசு கால்நடை மருந்தகமும் இணைந்து நடத்தும் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் வி.களத்தூர் கால்நடை உதவி மருத்துவர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் ஆடு, மாடு, கோழி, உள்ளிட்ட கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, சினை ஊசி போடுதல், குடற்புழு நீக்கம், மற்றும் பல்வேறு நோய்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

    இம்முகாமினால் 50 க்கும் மேற்பட்ட பயனாளிகள் தங்களது மாடு, ஆடு, என சுமார் 200க்கும் மேற்பட்ட விலங்கினங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனைத்தும் எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வம், முதுகலை ஆசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராமசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • விஷம் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள என்.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி தனலட்சுமி(வயது 52). கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணனுக்கு காலில் அடிபட்டு உடல்நிலை சரியில்லாத நிலையில் வீட்டில் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் தனலட்சுமி காணப்பட்டார். இந்நிலையில் கல்லாற்றங்கரை அருகே தனலட்சுமி இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், தனலட்சுமி அரளி விதையை(விஷம்) அரைத்து தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் நரிக்குறவர்கள் மனு அளித்தனர்
    • அடிப்படை வசதிகள் ேகாரி

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்து குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுமத்தூர் ஊராட்சி நரி ஓடை கிராமத்தில் நரிக்குறவர் காலணியில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையில் குடியிருப்பு வீடுகள் மற்றும் தெருக்கள் மழைநீர் மற்றும் கழிவு நீரால் சூழப்பட்டு சுகாதாரமற்று நிலை உள்ளது. மேலும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. தெரு மின்விளக்குகள் எரியவில்லை. இது குறித்து சிறுமத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் இடம் பலமுறை எடுத்து கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தங்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டி 50க்கும் மேற்பட்டோர் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்க வந்தனர். ஆனால் அவர் இல்லாததால் வேறு அதிகாரிகளிடம் மனு அளித்து அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்தனர். அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேப்பூர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சிறுத்தை சிவா உடனிருந்தனார்.

    • நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது
    • அகரம்சீகூர் ஊராட்சியில்

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் ஊராட்சியில் ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்டமுகாம் தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் குழந்தை ராஜன் முன்னிலை வகித்தார். ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் ஆண்டாள் குடியரசு, ஒகளூர் பட்டதாரி ஆசிரியர் தங்கராசு வரவேற்புரை ஆற்றினார்.

    முகாமில் அய்யனார் கோவில் வளாகத்தை சீரமைத்தல், அகரம்சீகூர் ஊர் பொது பாதைகளை சீரமைத்தல், வெள்ளாற்றங்கரை மேம்பால சாலைகளை சுத்தம் செய்தல், மேட்டு காங்கிராயநல்லூரில் அமைந்துள்ள பச்சையம்மன் கோவில் வளாகத்தை சுத்தம் செய்தல். போன்ற அறிக்கையை ஒகளூர் அரசு மேல்நிலைப் பள்ளி சிலம்பரசன் விளக்கினார்.

    முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அகரம்சீகூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்ச்செல்வன் நினைவு பரிசு வழங்கினார். நாட்டு நலப்பணி திட்ட முகாமினை திட்ட அலுவலர் இளங்கோவன் ஏற்பாடு செய்திருந்தார்.

    நிகழ்ச்சியில் பெற்றோர் அ.தி.மு.க. கிளை செயலாளர் பிரபாகரன், ஆசிரியர் சங்க தலைவர் ராமராசு , அகரம்சீகூர் ஆசிரியர் அண்ணாதுரை, ஒகளூர் ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் பெரியசாமி வெற்றிப் பள்ளியின் தாளாளர் பாலசுப்பிரமணியன், ராஜகோபால் மற்றும் அகரம்சீகூர் ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
    • 31ம்தேதி முதல் இன்று வரை நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் கடந்த 31ம்தேதி முதல் இன்று (5-ந் தேதி) வரை ஊழல் தடுப்பு வாரமாக அனுசரிக்கப்பட்டது. இதன் காரணமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி, பேரணி ஆகியவை நடைபெற்றது. மேலும் பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட், பழைய பஸ்ஸ்டாண்ட், காமராஜர் வளைவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி சத்தியராஜ் மற்றும் அவரது குழுவினர்கள் லஞ்ச ஒழிப்பு தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஊழல் தடுப்பு தொடர்பாக வசனங்கள் எழுதிய பதாகைகள் ஏந்தி வாகன ஓட்டிகள் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியின் போது இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, விஜயலெட்சுமி மற்றும் ஏட்டு, போலீசார் கலந்து கொண்டனர்.

    • ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோமம் நடந்தது
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர்:

    செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் குபேரனின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று மகா குபேர ஹோமம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி பூரட்டாதி நட்சத்திரத்தையொட்டி மகா குபேரனுக்கு ஹோமமும், சிறப்பு வழிபாடு விமரிசையாக நடந்தது. சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீபாராதனையும். குபேர ஹோமமும் நடத்தது. பின்னர் சித்ரலேகா சமேத மகா குபேரனுக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் செட்டிகுளம் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் அனைத்துத்துறை ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஓய்வூதியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். அனைத்து துறை ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை குறைபாடு இல்லாமல் வழங்கிட வேண்டும். அனைத்து நோய்களுக்கான முழுமையான செலவு தொகையை வழங்கிட வேண்டும். மத்திய அரசு வழங்கும் அதே நாளில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அக விலைப்படி வழங்கிட வேண்டும். நிலுவை தொகை பிடித்தமின்றி வழங்கிட வேண்டும். 20 சதவீத உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 65 வயது முதல் 70 வயதுக்குள் பழைய ஓய்வூதியர்களுக்கும் வழங்கிட வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.12 ஆயிரம் ஆகவும், கடைசி ஊதியத்தில் 50 சதவீதத்தை வழங்கிட வேண்டும். நிறுத்தப்பட்ட ரெயில் பயண கட்டண சலுகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் சங்கத்தின் மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் நீலமேகம் வரவேற்றார். முடிவில் பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    ×