என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CUSTOMS BOOTH STAFF"

    • திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணி நீக்கத்துக்கு எதிராக ஊழியர்கள் 36-ம் நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்களை தீ வைத்து எரித்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூரை அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணி நீக்கத்துக்கு எதிராக ஊழியர்கள் 36-ம் நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். திருமாந்துறை சுங்கச்சாவடியில் போலீஸ் பாதுகாப்பை தொடர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரியும், சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள பரப்பளவில் 800 மீட்டர் சுற்றளவுக்கு போராட்டங்கள் நடத்த தடை விதிக்கக்கோரியும் திருச்சி சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து, ஊழியர்கள் அமைதியான முறையில் போரட்டத்தை நடத்தலாம் எனவும், வாகன போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டது. மேலும் பாதுகாப்பு அளிப்பதில் தற்போதைய நிலையே தொடர வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.

    இதனையடுத்து டி.டி.பில். நிர்வாகத்தின் சட்ட விதிமுறைகளுக்கு மாறாக ஆட்குறிப்பு செய்யப்பட்டதை கண்டித்து நேற்று மாலை ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் விஜயகுமார் தலைமையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்களை தீ வைத்து எரித்தனர்.

    மேலும் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டைகளின் ஒரிஜினல்களை வருவாய் துறை அதிகாரியிடம் ஒப்படைக்க உள்ளோம் என போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.

    ×