என் மலர்
பெரம்பலூர்
- மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது
- கலெக்டர் வெங்கட பிரியா தகவல்
பெரம்பலூர்:
பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இதர நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் உள்ள கிராமங்கள் வாரியாக நடத்தப்படவுள்ளது.
அதன்படி மத்திய அரசின் மாற்றுத்திறனா ளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகாம் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் எசனை அரசு உயர்நிலைப்பள்ளியில் 15-ந் தேதி அன்றும், அன்னமங்கலம் ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் 16-ந் தேதி அன்றும், மலையாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 17-ந் தேதி அன்றும், பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 18-ந் தேதி அன்றும், வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 22-ந் தேதி அன்றும், பாண்டகப்பாடி மானிய ெதாடக்கப்பள்ளியில் 23-ந் தேதி அன்றும், அல்லிநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 24-ந் தேதியன்றும், கீழமாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 25-ந் தேதி அன்றும், இரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 29-ந் தேதியன்றும், காரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 30-ந் தேதியன்றும், ஜமீன் பேறையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அடுத்த மாதம்(டிசம்பர்) 13-ந் தேதி அன்றும், மாவிலங்கை இந்து மானிய தொடக்கப்பள்ளியில் 14-ந் தேதி அன்றும், நக்கசேலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 15-ந் தேதி அன்றும், அகரம்சீகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 16-ந் தேதி அன்றும், கீழப்புலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 20-ந் தேதி அன்றும், கிழுமத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 21-ந் தேதி அன்றும், ஓலைப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 22-ந் தேதி அன்றும், பரவாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 23-ந் தேதி அன்றும், சிறுமத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 27-ந் தேதி அன்றும், வடக்குமாதவி அரசு உயர்நிலைப்பள்ளியில் 28-ந் தேதி அன்றும், எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 29-ந் தேதியன்றும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது
மேற்குறிப்பிட்ட அட்டவணையின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஒன்றியங்களிலும் பார்வைத்திறன் குறையுடையோர், செவித்திறன் குறையுடையோர், மனவளர்ச்சிக்குன்றியோர், உடல் இயக்க குறைபாடுடையோர் மற்றும் பல்வகை குறைபாடுடையோர் தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், பதிவு செய்தல், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளை கண்டறியும் ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை (மருத்துவ சான்றிதழுடன்) பிறப்பு சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 6 எடுத்து வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- கூட்டுறவு சங்கத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்
- பெரம்பலூரில் அனுமதியின்றி இயங்கிய
பெரம்பலூர்:
பெரம்பலூர், மதுரை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, நெல்லை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி போலியாக இயங்கும் வங்கிகள்-சொசைட்டிகளின் செயல்பாடுகளை முடக்குமாறு ரிசர்வ் வங்கி அறிக்கை அளித்திருந்தது.
அதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி போலியான வங்கிகளாக இயங்கி வந்த சங்கங்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக 45-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சுமார் ரூ.56 லட்சம் நிதி முடக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பெரம்பலூரில் துறைமங்கலம் நான்கு ரோடு அருகே செல்வா நகரில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு சங்கம் ஒன்று இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் கோர்ட்டு உத்திரவின்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேவராஜன், ஏட்டு செந்தில்குமார், அடங்கிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ் குழுவினர் சோதனை நடத்தினர்.
பெரம்பலூர் போலீசாரின் பாதுகாப்பு உதவியுடன் நேற்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த சோதனை நடந்தது. அப்போது கணினி வன்பொருள் (ஹார்டு டிஸ்க்) மற்றும் பணிபரிவர்த்தனை செய்யப்பட்ட ஆவணங்களை கைப்பற்றி, சென்னைக்கு எடுத்து சென்றனர்.
இது தொடர்பாக பெரம்பலூரில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
- குரும்பலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது
பெரம்பலூர்:
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மங்கூன் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பாளையம், குரும்பலூர், மூலக்காடு, ஈச்சம்பட்டி, புதுஆத்தூர், லாடபுரம், மேலப்புலியூர், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், அடைக்கம்பட்டி, புது அம்மாபாளையம், டி.களத்தூா் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்."
- தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
- குழந்தை இல்லாத ஏக்கம்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வடக்கலூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் செந்தில் (வயது 28). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பவானி(22) என்ற பெண்ணுடன் திருமணமானது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது குடும்ப பிரச்சினையில், குடி போதையில் இருந்த செந்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்"
- கிறிஸ்துமஸ்-புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது
- பெரம்பலூர் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில்
பெரம்பலூர் :
பெரம்பலூர் கல்பாடி பிரிவு சாலையிலுள்ள அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவன தொழிற்சாலையுடன் ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ், பேக்கரி ஆகியவை செயல்பட்டு வருகிறது. மேலும், திருச்சி, சென்னை, துறையூர், சேலம், ஆத்தூர், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், பாண்டிச்சேரி உள்பட 26 கிளைகளுடன் பேக்கரி செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணி தொடங்குவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு பண்டிகையையொட்டி கேக் தயாரிப்புக்காக செர்ரி, உலர் திராட்சை, பேரிச்சை, வெள்ளிரி விதை, ஆரஞ்சு, முந்திரி, திராட்சை, உலர் வண்ணநிற பழங்கள், ஆப்ரிகாட், டியூட்டி புரூட்டிச் ஆகிய பழங்கள், ஜாதிக்காய் பொடி, அத்திப்பழம், லவங்கப் பட்டைப் பொடி போன்றவற்றை கலந்து, சுமார் ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஒயினில் ஊற வைக்கப்படுகிறது. இவை நன்றாக ஊறிய பிறகு சுவையான, தரமான ரிச் பிளம் கேக் தயாரிக்கப்படுகிறது.
தற்போது தொடங்கப்பட்டுள்ள ரிச் பிளம் கேக் தயாரிப்பு பணி முடிவடைந்து, பின்னர் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிக்கைக்காக ரிச் பிளம் கேக் மற்றும் வகை வகையான கேக்குகள் தயாரிக்கப்படவுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக், குக்கீஸ், சாக்லெட் ஆகியவை தயாராகி வருகிறது.
தரமாகவும், சுவையாகவும், குறைந்த விலையில் இந்த கேக் வகைகள் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும் என அஸ்வின்ஸ் நிறுவன தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார். அப்போது அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குநர் அஸ்வின்ஸ், மனித வள மேம்பாட்டு அலுவலர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
- ம.தி.மு.க. செயலாளராக ஜெயசீலன் நியமிக்கப்பட்டுள்ளார்
- வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்து
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. பொருளாளராக இருந்த ஜெயசீலன் தற்போது மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில பொதுசெயலாளர் வைகோ, தலைமை கழக செயலாளர் துரை வைகோ, ம.தி.மு.க. உயர்நிலைக்குழு உறுப்பினரும், அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சின்னப்பா, அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ரோவர் வரதராஜன், துரைராஜ் ஆகியோரை சந்தித்து ஜெயசீலன் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
இதை தொடர்ந்து நேற்று பெரம்பலூரில் உள்ள காந்தி, அம்பேத்கார் ஆகியோரது உருவ சிலைக்கு ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியின் போது மாவட்ட அவைத்தலைவர் செல்ல கதிர்வேல், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி, மாவட்ட துணை தலைவர் சரவணன், மாவட்ட துணை செயலாரும், பேரூராட்சி கவுன்சிலருமான ரபியுதீன், ஆசிரியர் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது
- பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்
பெரம்பலூர்:
அகரம்சீகூர் அடுத்துள்ள அயன் பேரையூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலபணித்திட்ட அமைப்பு மற்றும் வி.களத்தூர் அரசு கால்நடை மருந்தகமும் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது .
வாலிகண்டபுரம் வட்டார மருத்துவ அலுவலரும் முதன்மை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் பிரேம் குமார், மற்றும் வாலிகண்டபுரம் நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் டாக்டர் பிரகாஷ் , டாக்டர் பிரதீப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி, வயிற்றுப்புண், இரத்த சோகை , இரத்த அழுத்தம் , கண் பார்வை பரிசோதனை போன்ற அனைத்து வியாதிகளுக்கும் சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் அயன் பேரையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 250 -க்கும் மேற்பட்ட ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இம்முகம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனைத்தும் எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வம், முதுகலை ஆசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராமசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
- தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.
- குழந்தை இல்லாத ஏக்கத்தில் நடந்த சம்பவம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் காலனி தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மீனா (வயது 28). இந்த தம்பதிக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. மீனா வி.களத்தூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். மீனா நேற்று மாலை வீட்டில் இருந்த போது திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் மீனா தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேக விழா நடைபெறுகிறது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் பிரசித்தி பெற்ற வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணியளவில் அன்னாபிஷேக விழா நடக்கிறது. இதேபோல் பெரம்பலூர் அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வர் கோவில், துறைமங்கலத்தில் உள்ள மீனாட்சி சமேத சொக்கநாதர் கோவில், பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோவில், குரும்பலூரில் உள்ள பஞ்சநந்தீஸ்வரர் உடனுறை தர்மசம்வர்த்தினி கோவில், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம் பொறுத்த ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
- சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 36), விவசாயி. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 3-ந் தேதி சிவராஜ், விஷம் குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமைதியாக ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது
- பெண்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்
பெரம்பலுார்:
பெரம்பலூரில் மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா மற்றும் 75-வது சுதந்திர தின நிறைவு விழாக்களை முன்னிட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி மற்றும்பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தது. இந்த நிலையில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பேரணி நடத்த அரசு அனுமதி அளித்தது. அதன்படி பெரம்பலூரில் பதசஞ்சலன் சீருடை அணிவகுப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் நடைபெற்ற இந்த பேரணியை திருவிநாயக வேல்முருக சித்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணி ரோவர் ஆர்ச், சங்குபேட்டை , காமராஜர் வளைவு, கடைவீதி வழியாக மேற்கு வானொலி திடலில் பொதுக்கூட்ட மேடை அருகில் நிறைவடைந்தது. வழிநெடுகிலும் தொண்டர்களுக்கு பா.ஜ.க.வினர், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பெண்கள் மலர் தூவி வரவேற்றனர். மேலும் ஊர்வலத்தில் வந்து பாரதமாதா அலங்கார ஊர்த்திக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த ஊர்வலத்தில் 250க்கு மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டு அணிவகுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து, மாலை 5 மணியளவில் வானொலி திடலில் ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டம் நடந்தது.
- தூக்கில் தொழிலாளி பிணமாக தொங்கினார்
- குடும்ப பிரச்சனை காரணமாக மன விரக்தியில் இருந்ததாக தெரிகிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வடக்கலூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் செந்தில் (வயது28) இவரது மனைவி பவானி. இவருக்கு திருமணம் மாகி ஒரு வருடம் ஆகின்றன. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன விரக்தியில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் செந்தில் சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் மங்களமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துசெந்திலை யாராவது கொலை செய்து தூக்கில் தொங்கவிடடிருப்பார்களா அல்லது தற்கொலை செய்து இருப்பார என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.






