என் மலர்
பெரம்பலூர்
- வீட்டில் விபசாரம் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- பாதிக்கப்பட்ட 3 பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர்
திருச்சி மாவட்டம், நெடுங்கூர் மேற்கு தெருவை சேர்ந்த போஜன் மகன் மனோகரன்(வயது 33). இவர் நேற்று மதியம் பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் ஆண்களிடம் நைசாக பேசி தன்னிடம் அழகான பெண்கள் இருப்பதாகவும், அவர்களில் உங்களுக்கு தேவையான பெண்ணிடம் குறைந்த செலவில் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறி, பெரம்பலூர்-துறையூர் சாலையில் செஞ்சேரி செல்லியம்மன் நகரில் ஒரு வீட்டில் 3 பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்துள்ளார்.
இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மனோகரனை கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட 3 பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- ெபரம்பலூர் மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
- கூட்டத்தில் 222 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடந்தது. இதில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 222 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
பின்னர் அம்மனுக்களை சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் அளித்து மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் பொதுமக்கள் வழங்கிய மனுக்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்கள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனும் கலெக்டர் விரிவாக ஆய்வு நடத்தினார். பின்னர் கலெக்டர் பேசுகையில், அரசு அலுவலர்களிடம் மனு அளித்தால் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற உணர்வுடன், நியாயமான எதிர்பார்ப்புடன் மனு வழங்கும் பொதுமக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அரசுத்துறை அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்.
பொதுமக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை அரசுத்துறை அலுவலர்கள் பெற்றுள்ளோம். இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்தி, பொது மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். பொதுமக்களின் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மூன்று சக்கர சைக்கிள், தையல் இயந்திரம், காது கேட்கும் கருவி என 4 பயனாளிகளுக்கு ரூ.31 ஆயிரத்து 400 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ. அங்கயற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, ஆர்.டி.ஓ நிறைமதி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க கோரி தமிழக விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நாராயணசாமி நாயுடுவின் 99 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும், இ-சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்பு, தனிப்பட்டா, கூட்டுப்பட்டா, திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட சான்று ஆவணங்களை அரசின் மக்கள் சாசனம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் வழங்க வேண்டும், கூடுதல் ஒதுக்கீடு பெற்று பருவத்தில் சாகுபடி செய்ய ஏதுவாக யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட அனைத்து உரங்களும் தட்டுப்பாடின்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
- 2 பேருக்கு கத்திக்குத்து
- போலீசார் விசாரணை
பெரம்பலூர்,
வாலிகண்டபுரத்தைச் சேர்ந்தவர் ராஜாகான் மகன் மைதீன்கான்(வயது 35). இவர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரத்தைச் சேர்ந்த நாசர் முகமது மகன் ஆஷிக்(27) என்பவரின் காரை ரூ.2 லட்சத்திற்கு அடமானம் பெற்றுள்ளார். இந்த நிலையில் அந்த காரை பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பெரியம்மாபாளையத்தைச் சேர்ந்த அலிபாய் என்பவரிடம், மைதீன் கான் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஆஷிக் தனது காரை கேட்டும் கொடுக்காததால் அவருக்கும், மைதீன் கானுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் ஆஷிக் தனது ஆதரவாளர்கள் 8 பேருடன் சேர்ந்து ஒரு காரில் வந்து மைதீன் கானை கடத்தி சென்றார். அப்போது அவர்களை தடுக்க முயன்ற மைதீன் கானின் அண்ணன் வாலிகண்டபுரம் மேட்டுப்பாளையம் ரோடு கடைவீதி தெருவை சேர்ந்த சித்திக்கான் மற்றும் உப்போடையைச் சேர்ந்த நிஷாந்த்(19) ஆகிய 2 பேருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நிஷாந்த் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அலிபாய்க்கு பணம் தருவதாகவும், காரை எடுத்து வருமாறும் மைதீன்கான் மூலம் செல்போனில் பேசி காரை எடுத்து வர வைத்தனர். பின்னர் மைதீன் கானை இறக்கி விட்டு காரை எடுத்துச்சென்று விட்டனர். இந்த நிலையில் ஆஷிக் மற்றும் உடன் இருந்தவர்கள் தாக்கியதில் மைதீன் கானுக்கு முகத்தில் வீக்கம் ஏற்பட்டதுடன் இடது கையில் கத்திக்குத்தும் விழுந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காயம் அடைந்த மைதீன் கானை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டி.ஆர். பாரிவேந்தர் தகவல்
- பாரதிய ஜனதா ஆதரவு காரணமாக, தாங்களும் ஆதரிப்பதாக பேட்டி
பெரம்பலூர்,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கப்படும் என பெரம்பலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனமான டி.ஆர்.பாரிவேந்தர் தெரிவித்தார்.பெரம்பலூர் மாவ ட்டத்தில் புதிய கலெக்டராக பொறுப்பேற்ற கற்பகத்தை சந்தித்து பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்த கடிதத்தை கொடுத்த பின்னர் அவர் செய்தியாளர் கூறியதாவது-2022 - 2023 நிதியாண்டில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 5 கோடியை எந்த தொகுதிக்கு ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரை கடிதத்தை கலெக்டரிடம் கொடுத்துள்ளேன். அதில் பள்ளி கட்டிடங்கள் மாணவி களுக்கான கழிவறைகள் சமூகக்கூ டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன்.எனவே எனது தொகுதி நிதியிலிருந்து கொடுக்கப்பட்ட பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளன. அவற்றை முடிக்க வலியுறுத்தி உள்ளேன். தற்போது 5 கோடி என்பது மூலமாக அதிக பள்ளிகளுக்கு தேவையான வகுப்பு அறைகள் கொடுக்க முடியும். பற்றாக்குறை வகுப்புகளாள் மாண விகளின் பள்ளியில் தரையில் அமர்ந்து படிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். பாரதிய ஜனதா கட்சி தோழமைக் கட்சிதான். தற்போது, பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுப்பதால் நாங்களும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடு க்கின்றோம். பாரா ளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து போட்டி யிடுவோம் என தெவித்தார்.
- மலேசிய தொழிலதிபர் டத்தோ.பிரகதீகுமார் பேச்சு
- பள்ளி ஆண்டு விழா
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியின் 8வது ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ராம்குமார் தலைமை வகித்தார். பள்ளிமுதல்வர் ஹேமா அனைவரையும் வரவேற்றார்.பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களில் 7பேர் தேர்வு செய்து நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.விழாவில் பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை சேர்ந்த மலேசிய தொழிலதிபர் டத்தோ.பிரகதீஸ்குமார் சிறப்பு விருச்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றி பேசியதாவது.பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இளம் பருவம் முதல் வாழ்க்கையில் உன்னால் முடியும் என்று தன்னம்பிக்கையுடன் உழைத்து நேர்மையாக வாழ்ந்தால் உயர்ந்த இடத்தை அடைய முடியும். அப்படி உயர்ந்த இடத்தை அடைவதற்கு படிப்பு மிகவும் முக்கியம் எனவும் பேசினார். விழாவை பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிதுணை தலைவர் மோகனசுந்தரம், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ஆர்.பிரபு மற்றும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- நாளை மறுநாள் தொடங்குகிறது
- போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நாளை மறுநாள் முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2222 - 2023 ஆம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பைக்கு மாவட்ட அளவிலான தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாளை மறுநாள் 8ம் தேதி தடகளம். சிலம்பம். கைப்பந்து ஆகிய போட்டிகளும் 11ம் தேதி கிரிக்கெட் 13ம் தேதி கபடி, இரவு பந்து, கைப்பந்து போட்டியிலும் 22ம் தேதி நீச்சல், கால்பந்து போட்டிகளிலும் 28ம் தேதி வலைப்பந்து, மேஜை பந்து போட்டிகளும் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன.கல்லூரி மாணவ மாணவி களுக்கான இம்மாதம் 9ம் தேதி தடகளம், கபடி, சிலம்பம், இறகுபந்து 15ம் தேதி கையுறைபந்து, கால்பந்து இறகு பந்து, கபடி, எறி பந்து போட்டிகள் காலை 8 மணி அளவில் நடைபெற உள்ளன. மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக தலா 3ஆயிரம் இரண்டாம் பரிசாக தலா 2ஆயிரம் மூன்றாம் பரிசாக தலா ஆயிரம் வழங்கப்படும். மாவட்ட அளவிலான தனிநபர் போட்டிகளில் முதலிடம் பெறுவோரும், குழு போட்டிகளில் தேர்ந்தெடு க்கப்பட்ட வீரர் வீரர்களுக்கும் மாநில போட்டிகளில் அரசு செலவில் பங்கேற்க அனுமதி க்கப்படுவர். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் வீரா ங்கனைகள் மாநில அளவிலான போட்டி களுக்கு அனுப்பி வைக்கப்ப டுவர். எனவே போட்டிகளில் கலந்து கொள்ள காலை 8 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703516 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்
- மாவட்ட கலெக்டர் கற்பகம் அறிவிப்பு
- மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்படும்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தின் கலெக்டராக பணிபுரிந்த ப.ஸ்ரீவெங்கடபிரியாவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக பணி மாற்றம் செய்தும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் இணை மேலாண்மை இயக்குனராக பணிபுரிந்த க.கற்பகம் பதவி உயர்வாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.அதன்படி பெரம்பலூர் மாவட்ட புதிய கலெக்டராக கற்பகம் நேற்று காலை தனது அலுவலகத்தில் பொறுப்பே ற்றுக்கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஏற்கனவே பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த ஸ்ரீவெங்கடபிரியா ஒப்ப டைத்தார்.புதிய கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட கற்பகத்தை மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி மற்றும் அனைத்து த்துறைகளின் அலுவலர்கள், விவசாயிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதையடுத்து கலெக்டர் கற்பகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக என்னை நியமித்த தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து க்கொள்கிறேன். ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலெ க்டர்களின் செய ல்பாடு இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான பாது காப்பான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ ர்களுக்கு பள்ளி, கல்லூரி கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்கள் செயல்படு த்தப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் நீர் வளத்தை மேம்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தப்படும். மாவட்டத்தின் வளர்ச்சி க்காக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும், என்றார்.மேலும் அவர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மரங்களை பாதுகாக்கவும், மரங்களை வளர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
- ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்
- அகில இந்திய துணை செயலாளர் பங்கேற்பு
பெரம்பலுார்,
பெரம்பலூரில், மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் தலைவர் மகேஸ்வரி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சின்னப்பொண்ணு முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் அகில இந்திய துணை செயலாளர் சுகந்தி, மாநில துணைத் தலைவர் சங்கரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் சுகந்தி கூறுகையில், வருகிற மார்ச் 8-ந்தேதி சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்படும். மேலும் அன்றைய தினம் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி நிகழ்ச்சி நடத்தவுள்ளோம். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த நூத்தப்பூர் மாணவியின் வழக்கு முடிந்து நியாயம் கிடைக்கும் வரை மாதர் சங்கம் அதற்கு ஆதரவாக செயல்படும், என்றார்.
- டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் வழங்க கோரி
- டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு
பெரம்பலூர்
பெரம்பலூரில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் தலைவர் சக்திவேல் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாடு அரசு அறிவித்தபடி கரும்பு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கக்கோரி வருகிற 17-ந்தேதி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள வேண்டும். டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து வருகிற ஏப்ரல் மாதம் 5-ந்தேதி டெல்லியில் நடைபெறவுள்ள பேரணியில் விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு கரும்பு விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையை வழங்க கோரி ஏப்ரல் 6-ந்தேதி நாடாளுமன்றம் முன்பு நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திலும் விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் தைப்பூச திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. வெள்ளி மயில், குதிரை வாகனத்திலும், புஷ்ப பல்லக்கிலும், சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் வீதி உலாவும் நடைபெற்றது. அதன் பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.திருவிழாவின் முக்கிய வைபவமான தேரோட்டம் நேற்று நடந்தது.இதனை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளான ஏகாம்பேரஸ்வரர், சோமா ஸ்கந்தர் அலங்காரத்தில் பிரியாவிடை அம்மனுடன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகள் ஒரு தேரிலும், மற்றொரு தேரில் காமாட்சி அம்மனும் எழுந்தருளினர்.இதையடுத்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேரோட்டத்தில் கோவில் செயல் அலுவலர் ஹேமாவதி, எழுத்தர் தண்டபாணி தேசிங்கன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சசிக்குமார், செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கலா தங்கராசு, ஒன்றிய கவுன்சிலர் திருநாவுக்கரசு, செட்டிகுளம், பாடாலூர், இரூர், கூத்தனூர்,பொம்ம னப்பாடி, சத்திர மனை, குரூர், சிறுவயலூர், ஆலத்தூர் கேட், நாட்டா ர்மங்கலம், பெரகம்பி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெ க்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார்கள், பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினர், மின் ஊழியர்கள் ஆகியோர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.முக்கிய வீதிகளின் வழியாக சென்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு தேர்கள் நிலைக்கு வந்தடைகின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
- போலீசார் விசாரணை
அகரம்சீகூர்,
அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட சின்னாறு பேருந்து நிறுத்தம் அருகே, தனியார் பேருந்தின் வலது பக்க டயர் வெடித்ததில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டு பள்ளத்தில் இறங்கியது. இச்சம்பவத்தால் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து வந்த மங்களமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






