என் மலர்tooltip icon

    நீலகிரி

    2 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி அடுத்த மாதம் 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஆண்டு தோறும் மே மாதத்தில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆன்லைன் வாயிலாக கண்காட்சி நடந்தது. மக்கள் வீட்டில் இருந்தபடி தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வண்ண செடிகளை கண்டு ரசித்தனர்.

    தற்போது தொற்று முழுவதும் குறைந்து சுற்றுலா யணிகள் வருகையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி அடுத்த மாதம் 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    மலர் கண்காட்சி தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு விழாவின் சிறப்பு அம்சமாக 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஓரியண்டல் லில்லி, ஏசியாடிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, பெகோனியா, செம்பா, புளோரன்ஸ், ஆஸ்டர், பால்சம், க்ரைசாந்திமம் போன்ற மலர்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    இதுதவிர சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பூங்காவில் வண்ண மலர்த் தொட்டிகள் பல வடிவங்களில் காட்சிப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    கண்காட்சியில் பல வண்ண மலர்களை கொண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விலங்குகள், பல்வேறு வடிவிலான பொருட்கள் வடிவமைக்கும் பணியும் நடக்கிறது. பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையிலும் மலர் செடிகள், அரிய வகை தாவரங்களும் வைக்கப்பட்டு வருகிறது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் சுற்றுலா பயணிகள், குழந்தைகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்கா முழுவதும் அழகுபடுத்தும் பணியும் நடக்கிறது. இந்த பணிகளில் தோட்டக்கலை அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 2 நாட்களில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாகவே காணப்பட்டனர்.

    குதிரைபந்தயம், மலர் கண்காட்சி, ரோஜா, காய்கறிகள் கண்காட்சி, பழ கண்காட்சி வருகிற நாட்களில் நடைபெற உள்ளதால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    நீலகிரியில் உள்ள சுற்றுலா தளங்களை 2 நாட்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.
    நீலகிரி:

    தமிழகத்தில் கோடைக்காலம் துவங்கியுள்ளதால், பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. தென் மாவட்டங்களில் கடந்த ஓரிரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

    அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்களில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான தாவிரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட 7 சுற்றுலா தளங்களை 36 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். அதே போல் சுற்றுலாத்துறை சொந்தமான சுற்றுலா தளங்களை சுமார் 25 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.

    கோவையில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
    கோவை:

    கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள ஆர்.ஜி.புதூரை சேர்ந்தவர் தர்மராஜ்(21). ஐ.டி.ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் அவிநாசி ரோட்டில் சென்றார். திடீரென மொபட் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அரசு பஸ் கண் இமைக்கும் நேரத்தில் தர்மராஜின் தலையில் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்(22). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கணபதி&சத்தி ரோட்டில் சென்றார். அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரஞ்சித் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது இதில் சம்பவ இடத்திலேயே அவர்இறந்தார். இந்த இரு விபத்துகள் குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குன்னூர், ஊட்டியில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ஊட்டி, 
    தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கோடை வெயில் கொளுத்-தி வருகிறது. இதன் காரணமாக ஆறுகள், வாய்க்கால் நீரின்றி வறண்டு காணப்படுகிறது.கோடை வெயில் காரணமாக பகலில் மக்கள் நடமாட்டமும் குறைந் துள்ளது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி மற்று-ம் வெப்பசலனம் காரணமாக கோடை வெயிலுக்கு மத்தியிலும் கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின்  பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
    கோடை வெயிலில் தகித்து வந்த மக்கள் இந்த மழையால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற் கிடையே  வெப்பச்சலனம் காரணமாக தமி-ழக-த்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையமும் தெரிவித்துள்ளது.
     
    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது.
    ஊட்டியில் காலை நேரத்தில் கடுமையான வெயில் அடித்தது. மதியத்திற்கு பிறகு வானம் மப்புமந்தாரமுமாக காணப்பட்டது. அதனை தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இதன் காரணமாக ஊட்டி சேரிங்கிராஸ் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, ரோஜா பூங்கா செல்லும் சாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. மழை பெய்தாலும், சுற்றுலா பயணிகள் சிலர் மழையில் நனைந்த படியும், குடை பிடித்த படியும் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். 
    ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளான முத்தோரை பாலாடா, எமரால்டு, மஞ்சூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. 
     
    குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக மதிய நேரங்களில் அவ்வப்போது மூடுபனி காணப்பட்டது. நேற்று குன்னூர், மவுண்ட் ரோடு, பெட்போர்டு, மவுண்ட் பிளசண்ட், அருவங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.கோத்தகிரி, அரவேணு, கொடநாடு, கட்டபெட்டு, சோலூர் மட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஒடைகளுக்கும், கிணறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இந்த மழை காரணமாக கடும் குளிரும் நிலவியது. இந்த திடீர் மழையால் மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள், தோட்டத் தொழிலாளர்கள் என பலரும் பாதிப்ப டைந்தனர். தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மலை காய்கறிகள், தேயிலை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். 
     
    கோவை தொண்டா முத்தூர் வட்டாரத்தில் உள்ள சாடிவயல், ஆலாந் துறை, மாதம்பட்டி, பேரூர், வடவள்ளி, மருதமலை, நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதேபோல் மாவட் டத்தில் உள்ள வால்பாறை, துடியலூர் உள்ளிட்ட பல இடங்களிலும் மிதமான மழை பெய்தது.
    ஊட்டியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர் சிக்கினார்.
    ஊட்டி: 

    நீலகிரி மாவட்டம் ஊட்டியின் பல்வேறு பகுதிகளிலும், கல்லூரி மாணவர்கள், இளைஞ-ர்-களை குறிவைத்து சிலர் கஞ்சா விற்பனையில் ஈடு-பட்டு வருவதாக நகர மேற்கு காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.
     
    இதைத் தொடர்ந்து, பெரியாநகர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் அசோக் தலைமையில், காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
    அப்போது, அவ்வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். போலீசார் அவர்களின் வாகனத்தை மறித்து சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் திடீரென அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
     
    போலீசார் அவரை துரத்தி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தனர். 
    அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. உடனடியாக அதனை பறிமுதல் செய்த போலீசார் மற்றொரு வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
     
    விசாரணையில், கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்தது ஊட்டியை சேர்ந்த விவின்(21), ஊட்டி பேண்ட் லைனை சேர்ந்த விஜய்(22) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் திருப்பூரில் இருந்து கஞ்சாவை வாங்கி இங்கு கல்லூரி மாணவர்-களுக்கு விற்றதும் கண்டு-பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் விவினை கைது செய்தனர். தப்பியோடிய விஜயை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு கஞ்சா விற்க கொடுத்த வீரசிவகுமார் என்பவரை பிடிப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.
    நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியானது சிறந்த கோடை வாசஸ்தலமாகவும், பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.
    ஊட்டி: 

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியானது சிறந்த கோடை வாசஸ்தலமாகவும், பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இங்கு கோடை சீசன் தொடங்கி உள்ளதால் வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர்.

    இந்த கூட்டத்தை பயன்-படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் சமீப காலமாக நடந்து வருகிறது. இதனை தவிர்க்க அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் மற்றும் பொது இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டும் என்று நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் அறிவுறுத்தினார்.

    இதை ஏற்று ஊட்டி நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கடை வியாபாரிகள் தாமாக முன்வந்து காமிராக்கள் பொருத்தி உள்ளனர். அதன்படி ஊட்டி நகரில் 210 இடங்களில் 600 காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு காமிராக்களை வியாபாரிகள் பொருத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா முன்பு சிறு வியாபாரிகள் ஒன்றிணைந்து அமைத்த 4 கண்காணிப்பு காமிராக்கள் போலீஸ் உதவி மையத்தோடு இணைக்கப்பட்டு உள்ளது. 

    இதனை நேற்று ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் திறந்து வைத்து, அதில் பதிவாகும் காட்சிகளை பார்வையிட்டார். சுற்றுலா பயணிகள் கூட்டம் கூடும் பகுதிகள், சந்திப்பு இடங்களில் காட்சிகள் பதிவாகும் வகையில் கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்-டும் என்று அறிவுறுத்தினார். 

    இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் கூறுகையில், ஊட்டி நகரில் குற்ற சம்பவங்களை தடுக்க 600 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.  

    கோடை சீசனுக்கு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை கண்காணிக்கவும், கடைகளில் குற்ற சம்பவங்கள் நடந்தால் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் உதவியாக இருக்கும். 

    600 காமிராக்களில் பதிவாகும் காட்சிகள் அருகே உள்ள கடைகளில் பதிவு செய்யப்படுகிறது. ஒரு மாதம் வரை காட்சிகள் பதிவாகும் என்றார்.
    ‘வைல்டு கர்நாடகா’ படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து நாட்டு நலப்பணி திட்ட நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.
    ஊட்டி: 

    கூடலூர் அருகே நாடுகாணி தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு கூடலூர் அரசு கலை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் 50 பேர் வந்தனர். அவர்களை வனச்சரகர் பிரசாத் வரவேற்றார். 

    பின்னர் அவர்கள் தாவரவியல் பூங்கா தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து வனங்களோடு ஒன்றி வாழுதல் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் ‘வைல்டு கர்நாடகா’ படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து நாட்டு நலப்பணி திட்ட நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. முகாமில் சிறப்பாக பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

    தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும், காடுகளில் தீ வைப்பதால் பல்லுயிர் அழிவது குறித்தும், யானைகளின் வலசை மற்றும் வழித்தடங்கள் பாதுகாக்கப்படுவதால் ஏற்படும் பயன்கள் குறித்தும், வனவிலங்குகளுக்கு உணவு பொருட்களை வழங்குவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது.

    துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
    ஊட்டி: 

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில், அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அம்ரித்  தலைமையில் நடை-பெற்றது.

    கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:-தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களை சென்றடையும் வகையில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தகுதி வாய்ந்த பயனாளிகள் பயன்பெறும் வகையில் அரசின் நலத்திட்ட உதவிகளை உரிய நேரத்தில் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். 

    துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். 

    மேலும், தமிழக அரசால் மஞ்சப்பை பயன்படுத்த தொடர்ந்து தெரிவித்து வருவதால், மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றதா என்பதனை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவியர்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்தும், மஞ்சப்பையினை மீண்டும் பயன்பாட்டிற்கு முழுவீச்சில் கொண்டு வருவதை குறித்தும் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத மாவட்டமாக தொடர்ந்து நீடிக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர்  கீர்த்தி பிரியதர்சினி, குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், கோட்டாட்சியர்கள் துரைசாமி (ஊட்டி), சரவணக்-கண்ணன் (கூடலூர்) மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    கோத்தகிரி, கட்டபெட்டு, கொடநாடு, கீழ்தட்டபள்ளம், சோலூர் மட்டம் பகுதிகளில் இரவு 10 மணியளவில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் வெயிலும், மாலை நேரங்களில் இதமான காலநிலையும் நிலவி வருகிறது.

    குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை கடுமையான வெயில் நிலவியது. மதியத்திற்கு பிறகு வானத்தில் மேகமூட்டங்கள் திரண்டு, மழை பெய்வது போல் இருந்தது. இரவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சாரல் மழையாக தொடங்கி பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.

    சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இந்த மழை குன்னூர் பஸ் நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இதேபோல் குன்னூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

    கோத்தகிரி, கட்டபெட்டு, கொடநாடு, கீழ்தட்டபள்ளம், சோலூர் மட்டம் பகுதிகளில் இரவு 10 மணியளவில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் மாவட்டத்தில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. மேலும் தேயிலை செடிகளில் ஏற்பட்ட கொப்பள நோய்களும் சரியாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர் அடுத்த எருமாடு பகுதியிலும் மழை பெய்தது. சாரல் மழை பெய்ய தொடங்கி, சிறிது நேரத்தில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. மாவட்டத்தின் பிற பகுதிகளான மஞ்சூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

    வால்பாறை பகுதியில் நேற்று லேசான மழை பெய்யும், சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையால் மார்க்கெட்டிற்கு வந்தவர்கள், பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவர்கள் அனைவரும் மழையில் நனைந்தனர். சாலைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இதேபோல் பொள்ளாச்சி பகுதியிலும் மழை பெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    கரடி ஒன்று பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு கூடத்தின் கதவை உடைத்து தள்ளியது.
    மஞ்சூர்: 

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கீழ்குந்தாவில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.  இரவு அப்பகுதியில் உலா வந்த கரடி ஒன்று பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு கூடத்தின் கதவை உடைத்து தள்ளியது. 

    தொடர்ந்து உள்ளே புகுந்த கரடி அங்கு வைக்கப்-பட்டிருந்த பாத்திரங்களை கீழே தள்ளி சமையல் பொருட்களை சூறையாடியது. மேலும் மாணவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த முட்டை-களை ஒரு கை பார்த்த கரடி கேனில் இருந்த சமையல் எண்ணையை குடித்தபின் அங்கிருந்து சென்றுள்ளது. 

    நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற ஆசிரியர்கள் இதை கண்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனார். 

    இதை தொடர்ந்து குந்தா ரேஞ்சர் சீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் வனவர் ரவிக்குமார் தலைமையில் கீழ்குந்தா அரசுப்பள்ளிக்கு சென்ற வனத் துறையினர் கரடியால் சூறையாடப்பட்ட சத்துணவு கூடத்தை பார்வையிட்டனர். 

    தொடர்ந்து பள்ளி வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள தேயிலை தோட்டத்தில் கரடியின் நடமாட்டம் உள்ளதா? என கண்கா ணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கீழ்குந்தா சாலையில் குந்தா தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள டீ கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடி அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் சூறையாடி சென்றது குறிப்பிடத்தக்கது. 
    மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்தும், பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
    ஊட்டி: 

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலக த்தில், மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-  நீலகிரி மாவட்ட முஸ்லிம் மகளிர் சங்கம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் சங்கங்கள் மூலம் ஆதரவற்ற முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் ஏழை, எளிய பெண்களுக்கு வாழ்க்கை தரம் உயர உதவி செய்யப்பட்டு வருகிறது.

    சங்கம் வசூல் செய்யும் நன்கொடை தொகைக்கு அரசால் 1:2 என்ற வகையில் இணை மானியம் வழங்கப்படுகிறது. மேலும் ஆண்டிற்கு ரூ.10 லட்சம் நன்கொடையாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 2008 முதல் திரட்டப்பட்ட நன்கொடை தொகை மற்றும் இணை மானியம் தொகை சேர்த்து ஒருமித்த தொகை ரூ.71,13,761-ல் 436 பயனாளிகளுக்கு ரூ.48,01,403 மதிப்பில் நலத்திட்ட உதவிகளுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. 

    சங்கத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் வன்முறைகள் குறித்து தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

    மேலும் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்தும், பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் லோகநாதன், முஸ்லிம் மகளிர் உதவு சங்க கூடலூர் கவுரவ செயலாளர் சுலைமான், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க ஊட்டி கவுரவ செயலாளர் ஸ்டெல்லா மற்றும் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
    சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஹில்காப் தி நீலகிரி போலீஸ் என்ற புதிய ரோந்து படை தொடங்கப்பட்டுள்ளது.
    ஊட்டி: 

     கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், மே மாதத்தில் சுற்றுலா  பயணிகளுக்காக பல்வேறு விழாக்களும் நடைபெற உள்ளன. 

    இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஹில்காப் தி நீலகிரி போலீஸ் என்ற புதிய ரோந்து படை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 4 இரு சக்கர வாகனங்களில் 8 பேர்  கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், இருவர் பெண்கள் ஆவர்.  இவர்களுக்கான சீருடையில் காமிரா, ஒளிரும் விளக்குகள், போதையை கண்டறியும் கருவி, வாக்கி டாக்கி போன்றவை பொருத்தப்பட்டுள்ளன.

    இவர்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல முடியாவிட்டாலும், உடனடியாக அங்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதுடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு கூடுதல் உதவியையும் பெற்றுக் கொள்வர். 

     மேலும், சுற்றுலா பயணிகளுக்கு  தேவையான விவரங்களை  கூறி உதவியாக இருப்பதுடன், நகை பறிப்பு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதோடு, போக்குவரத்து விதிமீறல்கள் இல்லாமலும் கண்காணிப்பர்.  இப்புதிய பிரத்யேக இருசக்கர ரோந்து வாகனங்களைத் தொடங்கி வைத்த கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்கட்டமாக நான்கு இருசக்கர வாகனங்கள் இதற்காக ஒதுக்கப் பட்டுள்ளன. இதில், ஒரு வாகனம் மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலில் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவி செய்தல் போன்றவற்றில் இவர்கள் உதவுவர்.  

    இத்தகைய திட்டம் தமிழகத்திலேயே முதல் முறையாக ஊட்டியில்  அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் நீலகிரி மாவட்டம் முழுவதும் அமல்படுத்தப்படும். மேலும் சுற்றுலா பயணிகள் அதிகம் உள்ள இடங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஸ் ராவத் உள்ளிட்ட  போலீசார் பங்கேற்றனர்.   
    ×