என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
மஞ்சூரில் சத்துணவு கூடத்தில் புகுந்து பொருட்களை சூறையாடிய கரடி
கரடி ஒன்று பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு கூடத்தின் கதவை உடைத்து தள்ளியது.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கீழ்குந்தாவில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இரவு அப்பகுதியில் உலா வந்த கரடி ஒன்று பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு கூடத்தின் கதவை உடைத்து தள்ளியது.
தொடர்ந்து உள்ளே புகுந்த கரடி அங்கு வைக்கப்-பட்டிருந்த பாத்திரங்களை கீழே தள்ளி சமையல் பொருட்களை சூறையாடியது. மேலும் மாணவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த முட்டை-களை ஒரு கை பார்த்த கரடி கேனில் இருந்த சமையல் எண்ணையை குடித்தபின் அங்கிருந்து சென்றுள்ளது.
நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற ஆசிரியர்கள் இதை கண்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனார்.
இதை தொடர்ந்து குந்தா ரேஞ்சர் சீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் வனவர் ரவிக்குமார் தலைமையில் கீழ்குந்தா அரசுப்பள்ளிக்கு சென்ற வனத் துறையினர் கரடியால் சூறையாடப்பட்ட சத்துணவு கூடத்தை பார்வையிட்டனர்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள தேயிலை தோட்டத்தில் கரடியின் நடமாட்டம் உள்ளதா? என கண்கா ணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கீழ்குந்தா சாலையில் குந்தா தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள டீ கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடி அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் சூறையாடி சென்றது குறிப்பிடத்தக்கது.
Next Story






