என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணிகளை வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கும் வகையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
    ஊட்டி: 

    நீலகிரி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை மேல் அங்கி அணிவிக்கும் விழா-வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்-துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்   ஆகியோர் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கிகளை  வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.             

    தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய-தாவது:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமையப்-பெற்றது  இந்த மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாகும். கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் முதல்&-அமைச்சர், மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி கட்டப்படும் என்று அறிவித்திருந்தார். 

    இதற்கான அனுமதி பெற்று இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது. சமீபத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் மட்டும் கட்டி முடிக்கப்பட்டு, தமிழக முதல் அமைச்சர்  முன்னிலையில் பிரதமர்  திறந்து வைத்தார். ஊட்டி  அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணிகளை வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கும் வகையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    மேலும் இந்த கல்லூரிக்கு தேவையான கூடுதல் திட்ட மதிப்பீடு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியை சுமார் 40 ஏக்கர் பரப்-பளவில் மொத்தம் ரூ.461 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 7.5 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில் சேர்ந்த 534 மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர்  முன்னிலையில் பாடத்திட்டங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட கையடக்க மடிக்கணினிகள் ஒரு வாரத்திற்குள் வழங்கும் திட்டம் உள்ளது. 

    மேலும் டெல்லி, மராட்டியம் போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் இதுவரை தினசரி பாதிப்பு 50-க்கும் கீழேயே உள்ளது. மேலும் தமிழகத்தில் தினசரி இறப்பு ஏதும் இல்லை. தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தற்போது 88 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

    ஆனாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொது மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.  
    சுற்றுலா பயணிகள் கேத்ரின் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.
    ஊட்டி: 

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க சமவெளி பகுதிகளில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். 

    ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு கீழே வரும் சுற்றுலா பயணிகள் வரும் கோத்தகிரி வழியாக தான் மேட்டுப்பாளையம் வருவார்கள். 

    அப்படி வரும் சுற்றுலா பயணிகள் கோத்தகிரியில் உள்ள நேரு பூங்கா மற்றும் கொடநாடு காட்சி முனை, கேத்ரின் நீர்வீழ்ச்சிக்கு செல்வார்கள். தற்போது 4 நாட்கள் விடுமுறை காரணமாக கேத்ரின் நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. 

    நேற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமா காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் கேத்ரின் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.
    சம்பவத்தன்று நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, கலெக்டர் குடியிருப்பு வளாகத்திற்குள் புகுந்து அங்குள்ள சாலையில் சர்வசாதாரணமாக சுற்றி திரிந்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதியில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது.

    அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களில் அருகே உலா வருவது வழக்கம்.

    ஊட்டி பிங்கர்போஸ்ட் அடுத்த தமிழகம் ஆய்வு மாளிகை அருகே நீலகிரி மாவட்ட கலெக்டரின் குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகம் உள்ளது. இங்கு தற்போது கலெக்டராக உள்ள அம்ரித் வசித்து வருகிறார்.

    இந்த பங்களாவில் நுழைவு வாயில் பகுதியில் இருந்து சாலை மற்றும் இருபுறமும் புல்வெளிகளுடன் கூடிய சிறு பூங்கா உள்ளது. சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பங்களாவிற்கு அருகே வனப்பகுதி அமைந்துள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, கலெக்டர் குடியிருப்பு வளாகத்திற்குள் புகுந்து அங்குள்ள சாலையில் சர்வசாதாரணமாக சுற்றி திரிந்தது.

    கலெக்டரின் கார் பார்க்கிங் வரை சாவகாசமாக நடந்து வந்த சிறுத்தை அங்கேயே சுற்றி திரிந்ததுடன், சிறிது நேரம் அங்கு ஒய்வெடுத்தது.

    இதையடுத்து பங்களாவில் இருந்த மலர் செடிகளுக்கு நடுவே ஏறி தடுப்புசுவரை தாண்டி வெளியில் சென்று மறைந்தது.

    சிறுத்தை நடமாடிய காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதனை தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அந்த சிறுத்தை புலிக்கு 7 வயது இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு வெள்ளை அங்கி வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூறியதாவது:-  

    தமிழகத்தில் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் தலா 150 இடங்கள் ஏற்படுத்தப்பட்டது. மொத்தம் 1,650 மாணவர்கள் சேர வேண்டும். ஆனால் 1,450 மாணவர்கள் சேர மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்தது.

    அந்த இடங்களில் நீட் தேர்வு எழுதியவர்கள் சேர கடந்த 11-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

    மாநில அரசால் நிரப்பப்பட வேண்டிய எம்.பி.பி.எஸ். இடங்கள், நிரப்பப்பட்டு விட்டது. ஆனால் மத்திய அரசின் இடங்கள் நிரப்பப்படவில்லை. 

    எனவே தமிழகத்தில் நிரப்பப்படாமல் உள்ள 24 இடங்களை நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது. 

    தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த 534 மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட டேப்லெட் வழங்கப்படும்.  

    தமிழகத்தில் இதுவரை தினசரி கொரோனா பாதிப்பு 50-க்கும் கீழ்தான் உள்ளது. இறப்பு ஏதும் இல்லை. 

    தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தற்போது 88 சதவீதமாக அதிகரித்து உள்ளது. ஆனாலும் தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவிழா தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது அப்பகுதியை சேர்ந்த சிலரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    மஞ்சூர்: 

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கொட்டரகண்டி. இப்பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவில் திருவிழா கடந்த 14ந் தேதி முதல் கொண்டாப்பட்டது. 

    இந்நிலையில் கடந்த வியாழன் இரவு திருவிழா தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது அப்பகுதியை சேர்ந்த சிலரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. 

    இதில் அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி (25) என்பவருக்கும்,  அவரது உறவினரான ரவிக்குமார் (52) இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் ஒருவரையொருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஆவேசம் அடைந்த கிருஷ்ணசாமி,  ரவிக்குமாரின் வலது கை பெரு விரலை பலமாக கடித்துள்ளார். 

    விரலின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டதால் வலியில் ரவிக்குமார் துடித்துள்ளார். இதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் ரவிக்குமாரை உடனடியாக மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ரவிக்குமார் ஊட்டிக்கு கொண்டு செல்லப்பட்டார்.  இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த மஞ்சூர் போலீசார் தொடர் விசாரனை நடத்தி வருகிறார்கள்.
    வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கடமானை மீட்டு அருகில் உள்ள கோட்டமலை வனப் பகுதியில் விடுவித்தனர்.
    ஊட்டி: 

    கூடலூர் வனக் கோட்டம், சேரம்பாடி வனச் சரகத்தில் உள்ள கண்ணம்பள்ளி காவல் பகுதிக்கு உள்பட்ட நெல்லிக்குன்னு பகுதியில் சுமார் 2 வயதுடைய   ஆண் கடமான் கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

    தகவலறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கடமானை மீட்டு அருகில் உள்ள கோட்டமலை வனப் பகுதியில் விடுவித்தனர். 
    வாகன நெரிசல் அதிகரித்துள்ள நிலையில் ஊட்டி நகரின் முக்கிய சாலைகளில் ஒரு கி.மீ. தூரத்தை கடப்பதற்கு அரைமணி நேரம் வரை ஆகிறது.
    ஊட்டி:

    ஊட்டியில் கோடை சீசன் களைகட்டியுள்ளது. தற்போது 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    கடந்த 14-ந் தேதியில் இருந்தே ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலை, பச்சை பசேல் என காணப்படும் காடுகளின் இயற்கை அழகுகளை கண்டு ரசித்து புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    பைக்காரா நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு குளித்து மகிழ்வதுடன், படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும் மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கின்றனர்.

    ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, நேரு பூங்கா, கொடநாடு காட்சிமுனை, லேம்ஸ்ராக், தாவரவியல் பூங்கா உள்பட மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது.

    ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் தங்களது சொந்த வாகனங்களிலேயே வந்து செல்கின்றனர். இதன் காரணமாக அனைத்து சுற்றுலா மையங்களிலும் கடுமையான கூட்டம் காணப்படுவதுடன், மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    வாகன நெரிசல் அதிகரித்துள்ள நிலையில் ஊட்டி நகரின் முக்கிய சாலைகளில் ஒரு கி.மீ. தூரத்தை கடப்பதற்கு அரைமணி நேரம் வரை ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

    நேற்று ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு 19 ஆயிரம் பேரும், அரசினர் ரோஜா பூங்காவுக்கு 9 ஆயிரம் பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 6,000 பேரும், தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு 4,000 பேரும், ஊட்டி படகு இல்லத்துக்கு 10,000 பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு 6,000 பேரும் வந்திருந்தனர்.

    அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை 5 மணிக்கு தொட்டபெட்டா பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஊட்டி- கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டாவில் தொடங்கி கட்டபெட்டு கிராமம் வரை 16 கிலோ மீட்டர் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரத் துறையின் கீழ் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மாலைக்கு ஊட்டிக்கு வந்தார்.

    பின்னர் ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவர் நேற்று இரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.

    இந்தநிலையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை 5 மணிக்கு தொட்டபெட்டா பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஊட்டி- கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டாவில் தொடங்கி கட்டபெட்டு கிராமம் வரை 16 கிலோ மீட்டர் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டார்.

    ஓட்டபயிற்சியை முடித்ததும், கட்டபெட்டுவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    ஆஸ்பத்திரி முழுவதும் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களிடம் தெரிவித்தார்.

    மேலும் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் ஆஸ்பத்திரியில் மருத்துவ வசதிகள் சரியாக உள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார். அப்போது டாக்டர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை உடனடியாக நிறைவேற்றி கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    கடந்த 13&ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    அரவேணு: 

    கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகிறது. 

    முதல் நாள் பால்குட ஊர்வலம் நடந்தது. 3&வது நாளான இன்று காலை மாரியம்மனுக்கு அபிஷேக பூஜை நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடித்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து 108 விளக்கு பூஜையும் நடந்தது. இதில் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    தேவலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி: 

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா நாடுகாணியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன்(வயது45). 

    இவரது நண்பர் நாகராஜ்(44). இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் பொன்னூர் பகுதியில் உள்ள நண்பர் ஒருவரை பார்க்க சென்றனர்.

    இவர்களது மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் சென்ற நிலையில் எதிரே ஒரு ஜீப் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஜீப்பும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து விக்னேஷ்வரன், நாகராஜ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். 

    பலத்த காயம் அடைந்த நாகராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விக்னேஷ்வரன் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தேவாலா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் காயங்களுடன் உயிருக்கு போராடிய விக்னேஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தேவலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா இல்லம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்பட்டது.
    ஊட்டி:

    தமிழ் புத்தாண்டு உள்பட 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா இல்லம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்பட்டது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நேற்று முன்தினம் 12 ஆயிரம் பேர் வந்திருந்த நிலையில், நேற்று அந்த எண்ணிக்கை 17 ஆயிரமாக உயர்ந்தது. ரோஜா பூங்காவுக்கு நேற்று முன்தினம் 5,500 பேர் வந்த நிலையில் நேற்று 8,500 வந்திருந்தனர்.

    தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு 6 ஆயிரம் பேர் வந்திருந்தனர். அதேபோல குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு நேற்றுமுன்தினம் 4 ஆயிரும் பேரும் நேற்று 5 ஆயிரம் பேரும் வந்திருந்தனர். ஊட்டி படகு இல்லத்துக்கு நேற்றுமுன்தினம் 10 ஆயிரம் பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு 7 ஆயிரம் பேரும் வந்திருந்தனர்.

    மேலும் பைக்காரா அருவி, அவலாஞ்சி, முதுமலை புலிகள் காப்பகம், மேல்பவானி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். தொடர்ந்து மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தாவரவியல் பூங்காவை 29 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.
    குன்னூர் வனப்பகுதிக்கு 2 குட்டிகளுடன் வந்த 9 காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி பர்லியார் மரப்பாலம், காட்டேரி, கிளன்டேல், பில்லிமலை, உலிக்கல் பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது.
    குன்னூர்:

    கோடை வறட்சி காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதிக்கு யானைகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

    குன்னூர் வனப்பகுதிக்கு 2 குட்டிகளுடன் வந்த 9 காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி, பர்லியார் மரப்பாலம், காட்டேரி, கிளன்டேல், பில்லிமலை, உலிக்கல் பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது.

    அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்த்து வரக் கூடிய வாழைமரங்கள், மலர்த்தொட்டிகளை சேதப்படுத்தி அட்டகாசத்திலும் ஈடுபடுகிறது. இந்த நிலையில் நேற்று காலை ரன்னிமேடு ரெயில் நிலைய பகுதிகளில் இந்த யானைகள் கூட்டம் சுற்றி திரிந்தது.

    இதனையறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் யானைகளை அங்கிருந்து வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் இறங்கினர். அப்போது அருகே உள்ள காட்டேரி பூங்காவில் நின்றிருந்த சுற்றுலா பயணிகள் சிலர் யானைகளை கண்டதும் ரெயில் நிலையத்துக்கு வந்து யானைகளை புகைப்படம் எடுக்க முயன்றனர்.

    வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு காட்டு யானை ஆவேசம் அடைந்து வனத்துறையினரை நோக்கி வேகமாக ஓடி வந்தது.

    இதனை பார்த்த வனத்துறையினர், சுற்றுலா பயணிகள் யானையிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு யானை கூட்டம் அங்கிருந்து ரன்னிமேடு பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சென்று விட்டது.



    ×