என் மலர்tooltip icon

    நீலகிரி

    • தீயணைப்பு துறை சார்பில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
    • அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    கோத்தகிரி அடுத்த கோடநாடு ஊராட்சியில் பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள், பேரிடரை எவ்வாறு கையாள வேண்டும், பேரிடரில் சிக்கியவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்புசாமி தலைமையில் வீரர்கள் கலந்துக்கொண்டு மக்களுக்கு மழை வெள்ளம் மற்றும் தீ விபத்து நிகழும் நேரத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் மற்றும் தீ விபத்தில் காயமடைந்தவர்களை எவ்வாறு பத்திரமாக மீட்பது என்பது குறித்து செயல்விளக்கம் மற்றும் ஒத்திகை செய்து காண்பித்தனர். இதில் பேரூராட்சி தலைவர் சுப்பி காரி, அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மீனா, ஊராட்சி செயலர் சதீஷ், சுகாதார ஆய்வாளர் குமாரசாமி, வருவாய் ஆய்வாளர் சகுந்தலை, கிராம நிர்வாக அலுவலர் பியூலா மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தற்போது வரை 834.91 மி.மீ மழை பெய்துள்ளது.
    • 2 தேசிய பேரிடா் மீட்புக் குழுவினரும், ஒரு மாநில பேரிடா் மீட்புக் குழுவினரும் வந்துள்ளனா்.

    ஊட்டி, ஆக.4-

    தென்மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, அரசுத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஊட்டி அரசினா் விருந்தினா் மாளிகையில் நடைபெற்றது.

    81 சதவீதம் கூடுதல் மழை

    கூட்டத்திற்கு தமிழக மாற்றுத் திறனாளி நலத் துறை செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஆனந்தகுமாா், மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்துக்கு தலைமை தாங்கி வனத்துறை அமைச்சா் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் நேற்று வரை இயல்பாக 458.88 மி.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால், தற்போது வரை 834.91 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 81.94 சதம் கூடுதலாகும்.

    பேரிடர் மீட்பு குழுவினர்

    நீலகிரி மாவட்டத்தில் அபாயகரமான பகுதிகளிலிருந்த பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

    நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலொ்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்துக்கு 2 தேசிய பேரிடா் மீட்புக் குழுவினரும், ஒரு மாநில பேரிடா் மீட்புக் குழுவினரும் வந்துள்ளனா்.

    இவா்களில் 22 நபா்கள் அடங்கிய 1 தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் கூடலூா் பகுதியிலும், 22 நபா்கள் அடங்கிய மற்றொரு தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் குந்தா பகுதியிலும், 33 நபா்கள் அடங்கிய மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் ஊட்டியிலும் முகாமிட்டுள்ளனா்.

    நிவாரண மையங்கள்

    மாவட்டத்தில் 3,329 முதல் நிலை பொறுப்பாளா்கள் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளனா். 456 பேரிடா் நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு கூறினார்.

    கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்கா ராம், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, குன்னூா் உதவி ஆட்சியா் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், வருவாய் கோட்டாட்சியா்கள் துரைசாமி, சரவணகண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • ஊட்டியில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
    • கூடலூர், பந்தலூர் என மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

    ஊட்டி:

    தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

    இதையடுத்து அரக்கோணத்தில் இருந்து நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீலகிரி மாவட்டத்திற்கு வந்தனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டியில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. ஊட்டி, காந்தல், சேரிங்கிராஸ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழை காரணமாக ஊட்டி சேரிங்கிராஸ் சாலை, காந்தல் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, தாவரவியல் பூங்கா சாலை, குன்னூர் சாலை உள்பட முக்கிய சாலைகள் அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை மெதுவாக இயக்கி சென்றனர். சிலர் மழைக்கு பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஒதுங்கினர். சிலர் நனைந்தபடியே சென்றனர். காலையில் இருந்து பெய்து வரும் மழையால் வேலைக்கு செல்வோர், தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்தவர்கள் பிளாஸ்டிக் கவர் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

    காந்தல் பகுதிக்கு செல்லும் சாலை, மார்க்கெட் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. தொடர் மழையால், மார்க்கெட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிப்படைந்தனர். பொருட்களும் தண்ணீரில் நனைந்தன.

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழைக்கு கோத்தகிரி-ஊட்டி சாலையில் வெஸ்ட்பூரூக் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த ராட்சத கற்பூர மரம் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து கோத்தகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு அலுவலர் கருப்புசாமி தலைமையிலான தீயணைப்பு படையினர் ராட்சத கற்பூர மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். குன்னூர், கூடலூர், பந்தலூர் என மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

    • விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்தி பெற்று கொள்ளலாம்.
    • பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

    ஊட்டி:

    2022-2023-ம் ஆண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி(முழுநேரம்) பெறுவதற்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கடந்த 28-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 18-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் உள்ள ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் ஊட்டி கிளைக்கு நேரில் சென்று விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முதல்வர், ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிலையம், சாய்பாபா காலனி, கோவை என்ற முகவரிக்கு கூரியர் அல்லது பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். இந்த தகவலை கூட்டுறவு சங்கங்களின் நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.

    • தீர்மானங்கள் நிறைவேற்று–வதற்கான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி:

    ஊட்டியில் நேற்று நகர பா.ஜ.க.வின் உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்று–வதற்கான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் பிரவீன் தலைமை தாங்கினார். இந்த நகர செயற்குழு கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ராமன், மாவட்ட தலைவர் மோகன்ராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பரமேஸ்வரன் , ஈஸ்வரன், மாவட்ட செயலாளர் அருண்குமார், மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இறுதி போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் ராணுவ வீரர்களின் அணி வெற்றி பெற்றது.
    • கால்பந்து போட்டியை ஏராளமானவர்கள் திரண்டு கண்டுகளித்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் எடபள்ளி கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற மைதானத்தில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நடைபெற்றன.

    பல்வேறு அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இறுதி போட்டியில் அணிகொரை அணியும், ராணுவ வீரர்களின் எம்.ஆர்.சிஅணியும் மோதி.ன மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் ராணுவ வீரர்களின் எம்.ஆர்.சி அணி வெற்றி பெற்றது வெற்றி பெற்ற வீரர்களுக்கு எடப்பள்ளி கால்பந்து கழக தலைவரும் சமுக சேவகருமான காளிதாஸ் தலைமையில் கிராம தலைவர்கள் முன்னிலையில் வெற்றி கோப்பைகள் வழங்கபட்டன.இந்த கால்பந்து போட்டியை ஏராளமானவர்கள் திரண்டு கண்டுகளித்தனர்

    • அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
    • உழவா் சந்தை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சாா்பில், அமைக்கப்பட்டுள்ள மாலை நேர உழவா் சந்தையை மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலையில் அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-இந்த மாலை நேர உழவா் சந்தையில் நீலகிரி மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலமாக உருவாக்கப்பட்ட உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், இதர உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் தங்களது பொருள்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த மாலை நேர உழவா் சந்தை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.இங்கு உணவு தானியங்கள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள், வெல்லம், காளான், நாட்டுக் கோழி முட்டை, மகளிா் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகள் போன்ற பொருள்கள் விற்பனை செய்யப்படும்.

    ஊட்டி உழவா் சந்தையில் மாலை வேளையில் கடை வைக்க விருப்பமுள்ள உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் தங்களது விருப்ப மனுவை வேளாண் துணை இயக்குநரிடமோ அல்லது ஊட்டி உழவா் சந்தை நிா்வாக அலுவலரிடமோ சமா்ப்பிக்கலாம்.இதில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, வேளாண் வணிக துணை இயக்குநா் சோபியா, ஊட்டி நகராட்சி கமிஷனர் காந்திராஜன், நகா்மன்ற உறுப்பினரும் தி.மு.க. நகர செயலாளருமான ஜாா்ஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, மஞ்சூர், குன்னூர் பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் அடித்தது.
    • நீலகிரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ஊட்டி:

    தமிழகத்தில் நீலகிரி உள்பட சில மாவட்டங்களில்(ஆரஞ்சு அலர்ட்) ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, மஞ்சூர், குன்னூர் பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் அடித்தது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இன்று கூடலூர், பந்தலூர் உள்பட மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

    பகல் நேரங்களில் பனிமூட்டம் காணப்படுவதால், கடுமையான குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

    ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 44 பேர் ஊட்டிக்கு வந்துள்ளனர்.

    மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள மிதக்கும் படகுகள், மரம் அறுக்கும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. இதை தொடர்ந்து பாதிப்பு அதிகமாக ஏற்படும் என கண்டறியப்பட்ட இடங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சஞ்சீவ் ஜெய்வால் தலைமையில் 22 பேர் அடங்கிய ஒரு குழுவினர் கூடலூருக்கும், பிரதீப்குமார் தலைமையில் 22 பேர் குந்தா பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஊட்டியில் மழை பாதிப்பு ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீசன் உத்தரவின் பேரில் தீயணைப்பு வீரர்கள் உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

    மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே கேரளாவில் மலப்புரம், வயநாடு உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என(ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மலப்புரம், வயநாடு மாவட்டங்களின் கரையோரம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் உள்ளன. மேலும் இந்த வழியாக ஏராளமான சுற்றுலா வாகனங்கள், தனியார் வாகனங்களும் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாகவும், பாதுகாப்பு கருதியும், கூடலூர், மலப்புரம் இடையே மலைப்பாதையில் 2 நாட்கள் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை எந்த வாகனங்களுக்கும் அனுமதியில்லை. தொடர்ந்து கேரள வழிகடவு சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

    • கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு 7 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது.
    • பசுந்தேயிலை விலை வீழ்ச்சியால், பல்வேறு இன்னல்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

    அரவேணு:

    கோத்தகிரி அருகே நாரிகிரி கிராமத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் 30 ரூபாயை நிர்ணயம் செய்ய கோரி நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஊர் தலைவர் சந்திரன், ஊர் நிர்வாகி தங்கராஜ், காமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.30 நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த தேயிலை செடிகளை கையில் எடுத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு 7 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது. இதனால் கூலி, தோட்டங்களை பராமரிக்கவே போதுமானதாக இல்லை.

    குடும்ப செலவுக்கு விவசாயிகள் திணறி வருகின்றனர். பசுந்தேயிலை விலை வீழ்ச்சியால், பல்வேறு இன்னல்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

    எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தேயிலை விவசாயிகளுக்கு மானியத்தொகை வழங்க வேண்டும். அரசு தேயிலை ஏல மையத்தில் குறைந்தபட்சம் 150-க்கு மேல் ஏலம் எடுக்க வேண்டும் என வியாபாரியிடம் வலியுறுத்த வேண்டும்.

    விவசாய பயிர்களை அழித்து வரும் காட்டு பன்றிகளை சுட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காட்டு எருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    • ஒரு மூட்டை உரம் ரூ.1,550 என்று விற்கும் சூழலில் அனைத்தும் வீணாகி விட்டது.
    • வாழைகளும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி

    கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் நேற்று திடீரென பலத்த மழை கொட்டியது. சுமார் அரை மணி நேரம் மட்டுமே பெய்த மழையால் செருமுள்ளி, கீச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்களுக்குள் மழைநீர் புகுந்தது.

    இந்த நிலையில் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை முதல் பரவலாக வெயில் காணப்பட்டது. தொடர்ந்து லேசான சாரல் மழை அவ்வப்போது பெய்தது. மாலை முதுமலை ஊராட்சி பகுதியில் திடீரென கனமழை பெய்தது. தொடர்ந்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு விவசாய நிலங்களை சூழ்ந்தது.

    இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் மூழ்கியது. இதனிடையே விவசாயிகள், பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதனால் பயிர்களுக்கு அளித்த உரமும் தண்ணீரில் அடித்து சென்றது. இதனால் விவசாயிகள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- முதுமலை ஊராட்சியில் பெய்த மழையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம் நீரில் மூழ்கியது. இதனால் வாழைகளும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாய நிலத்தில் போட்டிருந்த உரமும் அடித்து செல்லப்பட்டது. ஒரு மூட்டை உரம் ரூ.1,550 என்று விற்கும் சூழலில் அனைத்தும் வீணாகி விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பல விதமான போட்டிகள் நடத்தபட்டது.
    • மாணவ, மாணவிகள் கலைநிகழ்சிகள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஸ்ரீராமகிருஷ்ண மடம் சார்பில் பள்ளிகளுக்கிடையே பல விதமான போட்டிகள் நடத்தபட்டது. அதை தொடர்ந்து ஊட்டி ராமகிருஷ்ண மடத்தில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு சுவாமி ராகவேஷாநந்தர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கல்வி அலுவலர் தமோதரன், ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி முதன்மை அலுவலர் பசவண்ணா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்

    விழாவில் நடைபெற்ற மாணவ, மாணவிகள் கலைநிகழ்சிகள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது 

    • வருவாய்துறையினர் நடவடிக்கை
    • 1 ஏக்கா் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் கேரட் சாகுபடி செய்திருந்தது தெரியவந்தது.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ஓடைபுறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக அகற்ற வருவாய் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தியுள்ளார்.

    இதன்படி குந்தா தாலுகா இத்தலார் கிராமம், கல்லக்கொரை பகுதியில் ஓடைபுறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து இங்கு மலைகாய்கறிகள் பயிரிட்டுள்ளதாக வருவாய்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து குந்தா தாசில்தார் இந்திரா தலைமையில் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரி, கிராமநிர்வாக அலுவலர் சவுந்திரராஜன் கிராம உதவியாளர்கள் ராம்கி, கோகுல் உள்ளிட்ட வருவாய்துறையினர் கல்லக்கொரை பகுதிக்கு சென்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

    அப்பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆக்ரமிப்பு களை முழுமையாக அகற்றி நிலத்தை மீட்டனர். தொடர்ந்து வருவாய் துறைக்கு சொந்தமான அவ்விடத்தில் அத்துமீறி யாரும் உள்ளே நுழையக்கூடாது எனவும், இதை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யும் வகையில் அறிவிப்பு பலகையை அமைத்தனர்.

    இதுவரை குந்தா தாலுகாகுட்பட்ட பல்வேறு இடங்களில் நீண்டகாலமாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 40 லட்சம் மதிப்பிலான சுமார் 20 ஏக்கர் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.

    இதேபோல் ஊட்டியை அடுத்த ஆடாசோலை என்ற இடத்தில் சுமாா் 1 ஏக்கா் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் கேரட் சாகுபடி செய்திருந்தது தெரியவந்தது.

    ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி உத்தரவின்பேரில் வட்டாட்சியா் ராஜசேகரன் தலைமையில் வருவாய் ஆய்வாளா் இளங்கோ குரு, கிராம நிா்வாக அலுவலா் ரசியா பேகம் ஆகியோா் அப்பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டனா்.

    அத்துடன், இந்த இடம் நீா் நிலை புறம்போக்கு பகுதி, நீதிமன்ற உத்தரவுபடி மீட்கப்பட்டுள்ளது, இந்த இடத்தில் யாரும் அத்துமீறி நுழையக் கூடாது என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

    இதுகுறித்து வருவாய்த் துறையினா் கூறுகையில், ஊட்டி ஆடாசோலை கிராமத்தில் சுமாா் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 1 ஏக்கா் அரசு ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்பாளா்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    அவா்கள் அங்கு கேரட் சாகுபடி செய்திருந்ததால், தற்போது அறுவடை முடிந்ததும் நிலம் மீட்கப்பட்டது என்றனா்.

    ×