என் மலர்
நீங்கள் தேடியது "Demonstration on disaster rescue"
- தீயணைப்பு துறை சார்பில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
- அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
அரவேணு,
கோத்தகிரி அடுத்த கோடநாடு ஊராட்சியில் பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள், பேரிடரை எவ்வாறு கையாள வேண்டும், பேரிடரில் சிக்கியவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்புசாமி தலைமையில் வீரர்கள் கலந்துக்கொண்டு மக்களுக்கு மழை வெள்ளம் மற்றும் தீ விபத்து நிகழும் நேரத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் மற்றும் தீ விபத்தில் காயமடைந்தவர்களை எவ்வாறு பத்திரமாக மீட்பது என்பது குறித்து செயல்விளக்கம் மற்றும் ஒத்திகை செய்து காண்பித்தனர். இதில் பேரூராட்சி தலைவர் சுப்பி காரி, அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மீனா, ஊராட்சி செயலர் சதீஷ், சுகாதார ஆய்வாளர் குமாரசாமி, வருவாய் ஆய்வாளர் சகுந்தலை, கிராம நிர்வாக அலுவலர் பியூலா மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.






