என் மலர்
நீலகிரி
- தேனீக்கள் கூட்டம் படையெடுத்து, அங்கு நின்ற சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது.
- தேனீக்கள் கொட்டியதில் படுகாயம் அடைந்த 11 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஊட்டி:
கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
ஊட்டியில் பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்ட அவர்கள் அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்தனர்.
அங்கு இத்தாலியன் பூங்கா பகுதியில் பூத்து குலுங்கிய மலர்களை பள்ளி மாணவ, மாணவிகள் கண்டு ரசித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த தேன்கூடு களைக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து தேனீக்கள் கூட்டம் படையெடுத்து, அங்கு நின்ற சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது. கேரளாவில் இருந்து வந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்களை தேனீக்கள் கொட்டியது. இதனால் அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
மேலும் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடி சென்று ஒளிந்து கொண்டனர்.
அப்போது சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தேனீக்களிடம் இருந்து தப்பிக்க இத்தாலியன் பூங்கா பகுதியில் இருந்த குட்டையில் குதித்தனர். அங்கு தண்ணீரின் குளிர் தாங்க முடியாமல் சுற்றுலா பயணிகள் சத்தம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தேனீக்கள் கூட்டம் அங்கிருந்து சென்றது. இதையடுத்து தேனீக்கள் கொட்டியதில் படுகாயம் அடைந்த 11 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து 11 பேரும் சொந்த ஊருக்கு திரும்பினர். இதற்கிடையே தேனீக்கள் இருந்த கூட்டை கலைத்தது யார் என்று தாவரவியல் பூங்கா நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மஞ்சூர் பகுதியில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டெருமை ஒன்று சுற்றி வருகிறது.
- சுமார் அரைமணி நேரம் அங்கேயே முகாமிட்ட காட்டெருமை மெதுவாக நகர்ந்து தேயிலை தோட்டத்திற்குள் சென்றது.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மெரிலேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென், சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.
நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமங்களை சுற்றிலும் தேயிலை தோட்டங்களுடன் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளது.
சமீபகாலமாக இப்பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. காட்டெருமைகள் கூட்டமாக விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சூறையடுவதுடன் தோட்டங்களையும் நாசம் செய்து வருகின்றன.
மஞ்சூர் பகுதியில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டெருமை ஒன்று சுற்றி வருகிறது. கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து நடமாடி வரும் காட்டெருமை தேயிலை தோட்டங்களில் இலை பறிக்கும் தொழிலாளர்களை விரட்டுவதாக கூறுகின்றனர்.
இதனால் தேயிலை தோட்டங்களுக்கு இலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தேயிலை தோட்டங்களில் இருந்து வெளியேறி கடைவீதியில் உலா வருகிறது. இதனால் பொதுமக்கள் நடமாட்டத்திற்கும், வாகன போக்குவரத்தும் பாதிப்பு ஏற்படுகிறது.
கடந்த இருதினங்களுக்கு முன் மணிக்கல்மட்டம் பகுதியில் தொழிலாளர்கள் இருவர் தேயிலை பறித்து கொண்டிருந்தனர். அப்போது தோட்டத்திற்குள் புகுந்த காட்டுமாடு திடீரென தொழிலாளர்களை விரட்ட துவங்கியது. இதை கண்ட தொழிலாளர்கள் பீதி அடைந்து தேயிலை தோட்டத்தில் இருந்து தலைதெறிக்க தப்பியோடி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மணிக்கல் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. திடீரென காட்டெருமை வருவதை கண்ட அப்பகுதியினர் உடனடியாக தங்களது வீடுகளை அடைத்து தாழிட்டு கொண்டார்கள்.
சுமார் அரைமணி நேரம் அங்கேயே முகாமிட்ட காட்டெருமை மெதுவாக நகர்ந்து தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இதன் பிறகே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்தார்கள்.
இதையடுத்து மஞ்சூர் பகுதியில் சுற்றிவரும் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- சாலையில் முள்ளம் பன்றி ஒன்றும் உலா வந்தது.
- கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தார்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக செல்லும் சாலை விளங்குகிறது. இந்த சாலையில் உள்ள பெரியார் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கரடி ஒன்று அங்குள்ள வீட்டின் பாதுகாப்பு சுவரை ஏறி குதித்து உள்ளே சென்றது. இதை கண்ட வளர்ப்பு நாய் குரைக்க தொடங்கியது. சத்தம் கேட்ட வீட்டின் உரிமையாளர் மின் விளக்கை ஒளிர செய்துவிட்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தார். அப்போது கரடி உலா வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரம் அங்கேயே சுற்றிய கரடி, அதன்பிறகு அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இதேபோன்று அந்த பகுதிக்கு செல்லும் சாலையில் முள்ளம் பன்றி ஒன்றும் உலா வந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்வதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.
- மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே அரவேனு பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் நடைபாதை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சாலையில் நடப்பதற்கு இடையூறாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தவறி விழுந்து காயமடையும் அபாயம் நிலவுகிறது. இது மட்டுமின்றி பள்ளி கட்டிடத்தின் முன் பகுதியில் மின்மாற்றி ஒன்று உள்ளது. ஆனால் இதற்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்படவில்லை. எனவே மழைக்காலங்களில் அதனருகில் விளையாடும் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளிக்கு செல்லும் சாலையை புதுப்பிக்க வேண்டும், குடிநீர் குழாய்களை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும், மின்மாற்றியை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் விழா.
- நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
ஊட்டி :
தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் விழா குன்னூரில் இளைஞர் அணி சார்பில் நகர இளைஞர் அணி அமைப்பாளர் பத்மநாபன் ஏற்பாட்டில் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமைவகித்து கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினார். நகர செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். நிகழ்சியில் நகர அவை தலைவர் தாஸ், நகர துணை செயலாளர் வினோத்குமார், பொருளாளர் ஜெகநாத், நகர மன்ற உறுப்பினர்கள் நாகராஜ், ஜெகநாதன் ராபர்ட், குமரேசன், கோபிசாந், சந்திரன், வசந்தி, காவேரி, செல்வி, உமா மற்றும் நிர்வாகிகள் சிவா, பாலாஜி, சுரேஷ், ஹரி, விவேக், சதீஷ், மதி, அல்தாப், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தல்.
- உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
ஊட்டி,
கூடலூர் நகராட்சி அலுவலக அரங்கில் நகர சபை கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் பரிமளா தலைமை தாங்கினார்பொறியாளர் பார்த்தசாரதி, துணைத்தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகராட்சி பணி மேற்பார்வையாளர் ஆல்தொரை, குடிநீர் குழாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் சையத் அனுப்கான், வர்கிஷ், ஷகிலா, வர்கிஷ், ஆக்னஸ் கலைவாணி உள்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து மன்ற தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. பின்னர் கவுன்சிலர்கள் விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-
கவுன்சிலர் சத்தியன்:- 4 வார்டுகளில் மட்டும் குடிநீர் திட்ட பராமரிப்புக்கு ரூ.3.50 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனது வார்டு உள்பட பல இடங்களில் பழுதடைந்த குழாய்கள் சீரமைக்கப்படவில்லை என்று கூறியும் நடவடிக்கை எடுப்பதில்லை
கவுன்சிலர் வெண்ணி லா:-காந்தி சிலை மற்றும் மண்டபத்தை வர்ணம் பூசி பராமரிக்க 2 முறை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்.
துணைத்தலைவர் சிவராஜ்:-நகராட்சியில் நிதி பற்றாக்குறை இருந்து வந்தது. தற்போது நிதிநிலை சரியாகி வருகிறது. இதனால் ஒவ்வொரு வார்டுகளிலும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படும்.
கவுன்சிலர் ஷகிலா:-மன்ற கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் கலந்து கொள்ள வில்லை. இதனால் வார்டுகளில் உள்ள குறைகளை தெரிவிக்க முடியவில்லை.
நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி:- ஆணையாளர் கலந்து கொள்ள இருந்த நிலையில் திடீரென உயர் அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. இதனால் நகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை.
கவுன்சிலர் லீலா:- ஹெல்த்கேம்ப் தலைமை தபால் நிலையம், ஊமைத்துரை காடு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் வந்து நிற்பதால் குப்பைகள் காணப்படுகிறது. இதை தடுக்க வேண்டும்.
தொடர்ந்து கோடை காலம் நெருங்குவதால் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தினர்.அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
- 30 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல அனுமதி வழங்க வலியுறுத்தல்
- ஊட்டி நகரில் மட்டுமே 1800 ஆட்டோக்கள் உள்ளன.
ஊட்டி, :
நீலகிரி மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்ததாக சுற்றுலா தொழில் உள்ளது. இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். சுற்றுலா பயணிகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்வதில் வாடகை கார் டிரைவர்களுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதை தீர்க்க நகர் பகுதியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்துக்குள் மட்டுமே ஆட்டோவை இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
ஆனாலும் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் நிர்ணயித்த தூரத்தை விட அதிக தூரம் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஆட்டோக்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணி லோயர் பஜார், காபி ஹவுஸ், கமர்சியல் சாலை, கேசினோ சந்திப்பு, டி.பி.ஓ. வழியாக கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்து.பேரணியின்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது கலெக்டர் அலுவலகத்திற்குள் பேரணியை அனுமதிக்காததால் ஊட்டி மேற்கு போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சண்முகம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. 15 கிலோ மீட்டர் தூரத்துக்குள் மட்டுமே ஆட்டோக்கள் இயக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது.
ஊட்டி நகரில் மட்டுமே 1800 ஆட்டோக்கள் உள்ளன. ஆனால் இந்த ஆட்டோக்கள் நகரின் எல்லையான 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளேயே இயக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே தொலை தூரங்களுக்குள் ஆட்டோக்கள் சென்று வந்தால் மட்டுமே பிழைப்பு நடத்த முடியும். அதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டர் அம்ரித்தை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
- பொதுமக்கள் பாதிப்பு- வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
- மெதுவான வேகத்தில் வாகனங்களை இயக்கிச் செல்கிறார்கள்.
ஊட்டி :
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே காலை, மாலை நேரங்களில் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. மழையுடன், பனிப்பொழிவும் காணப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
கடும் குளிரால் பள்ளி செல்லும் குழந்தைகள் நடுங்கியபடி பள்ளிக்கு செல்கின்றனர். முதியவர்கள் மற்றும் பெண்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது.அதேசமயம் ஊட்டிக்கு சுற்றுலா வரும் சுற்றுலாபயணிகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஊட்டி - மேட்டுபாளையம் வரை சாலையில் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. பனி மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலை 8 மணிக்கு பிறகும் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவான வேகத்தில் வாகனங்களை இயக்கிச் செல்கிறார்கள்.
இன்று காலை வெகு நேரமாகியும் வெயில் தென்படாத நிலையில், குளிர் அதிகமாக காணப்பட்டது. இந்த காலநிலை மாற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடும் குளிரால் பள்ளி செல்லும் குழந்தைகள் நடுங்கியபடி பள்ளிக்கு செல்கின்றனர்.
- ஊட்டி-மேட்டுபாளையம் வரை சாலையில் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே காலை, மாலை நேரங்களில் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. மழையுடன், பனிப்பொழிவும் காணப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
கடும் குளிரால் பள்ளி செல்லும் குழந்தைகள் நடுங்கியபடி பள்ளிக்கு செல்கின்றனர். முதியவர்கள் மற்றும் பெண்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. அதேசமயம் ஊட்டிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஊட்டி-மேட்டுபாளையம் வரை சாலையில் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. பனி மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலை 8 மணிக்கு பிறகும் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவான வேகத்தில் வாகனங்களை இயக்கிச் செல்கிறார்கள்.
இன்று காலை வெகு நேரமாகியும் வெயில் தென்படாத நிலையில், குளிர் அதிகமாக காணப்பட்டது. இந்த காலநிலை மாற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப்பைகள், நோட் புத்தகம் வழங்கப்பட்டது.
- குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஊட்டி,
தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் விழா மஞ்சூர் பஜாரில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.கே.எஸ்.பாபு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பில்லன், கீழ்குந்தா செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர்.விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப்பைகள், நோட் புத்தகம், பேனாக்கள், முதியோர்களுக்கு இலவச வேட்டி, சேலை நலத்திட்ட உதவிகள் வழங்கியும் மற்றும் பொதுமக்கள், குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஒன்றிய பேரூர் நிர்வாகிகள், செயல் வீரர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டர்.
- இந்திய மருந்தியல் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பேரணியில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஜே.எஸ்.எஸ்.மருந்தாக்கியல் கல்லூரி மற்றும் இந்திய மருந்தியல் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முதன்மை அலுவலர் பசவண்ணா முன்னிலையில் கல்லூரி முதல்வர் தனபால் தலைமை வகித்தார். பேரணியில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தியவாறு, துண்டு பிரசுரங்களை வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்திய மருந்தியல் சங்க நீலகிரி தலைவர் பேராசிரியர் வடிவேலன், செயலாளர் கணேஷ் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்தனர். பேரணியில் கவுதமராஜன், பாபு, மெய்யநாதன், காளிராஜன், பிரவின் உள்ளிட்ட பேரசிரியர்கள், மாணவ மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- பழங்குடி கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
- மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம் தலைமையில் வனத் துறையினா் அங்கு ஆய்வு மேற்கொண்டனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள செம்பக்கொல்லி, பீச்சனக்கொல்லி பழங்குடி கிராமங்களுக்கு சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனை தொடா்ந்து மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம் தலைமையில் வனத் துறையினா் அங்கு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது போஸ்பாரா பகுதியில் இருந்து செம்பக்கொல்லி கிராமத்துக்கு செல்லும் சுமாா் 2.5 தூரம் வனபகுதியில் உள்ள மண் சாலையை சீரமைப்பது, அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளிக்கூடம் அமைக்க போதுமான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா்.ஆய்வின்போது தேவா்சோலை பேரூராட்சியின் துணைத் தலைவா் யூனஸ் பாபு மற்றும் வன அலுவலா்கள் கலந்து கொண்டனா்.






