என் மலர்tooltip icon

    நீலகிரி

    • நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத் திற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவிலான காட்டு யானைகள் உள்ளன.
    • யானைகளை பராமரிக்கும், வளர்க்கும் பணிகளில் இங்குள்ள இருளர், குறும்பர் போன்ற பழங்குடியின மக்களே மேற்கொள்கின்றனர்

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த யானை பாகன்கள் பயிற்சிக்காக தாய்லாந்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத் திற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவிலான காட்டு யானைகள் உள்ளன.

    அதே போல், இங்கு முகாம்கள் அமைக்கப்பட்டு யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பல கும்கி யானைகள் இந்த முகாம்களில் உள்ளன.

    யானைகளை பராமரிக்கும், வளர்க்கும் பணிகளில் இங்குள்ள இருளர், குறும்பர் போன்ற பழங்குடியின மக்களே மேற்கொள்கின்றனர். இவர்கள் தங்களுக்கு என்ற ஒரு யானையை தேர்வு செய்து, அதனை பிறந்தது முதல் கடைசி வரை பராமரித்து வருகின்றனர். இவர்களின் சொல்லுக்கே இந்த யானைகள் கட்டுப்படுகிறது. இவர்கள் அளிக்கும் உணவுகளையே அவைகள் உட்கொள்கின்றன. மேலும், யானை பாகன்கள் மற்றும் காவடிகள் என்ன சொல்கிறார்களோ அதற்கே அந்த காட்டு யானைகள் கட்டுப்படுகின்றன.

    முதுமலையில் உள்ள பல யானைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்தபோதிலும், இங்கு அவைகளுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இங்குள்ள பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு யானை வளர்ப்பில் பல புதிய யுக்திகளை கையாளும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக அவர்கள் தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளனர். இவர்களுக்கு அங்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த 7 பாகன்களுக்கும். ஆனைமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த பாகன்களுக்கும் தாய்லாந்து நாட்டில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இது தொடர்பாக தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

    யானைகளை பராமரிக்கும் பணிகளில் பழங்குடியின மக்களை சேர்ந்தவர்களே ஈடுபடுகின்றனர். இவர்களே பாகன்க ளாகவும், காவடிகளாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கோவை மாவட்டத்திற்குட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் உள்ள யானை பாகன்கள் தேர்வு செய்யப்பட்டு தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பப்பட உள்ளனர். அங்கு அவர்களுக்கு யானைகள் வளர்ப்பது, பராமரிப்பது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கான செலவுகளை வனத்துறையே ஏற்கும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • 14 வயது வடமாநில சிறுமியுடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது
    • போலீசார் ஹரிசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    ஊட்டி

    ஊட்டியைசேர்ந்தவர் ஹரிஷ்(24). இவரது சகோதரி அருகே உள்ள ஒரு பகுதியில் வசித்து வருகிறார். இதனால் ஹரிஷ் அடிக்கடி தனது சகோதரி வீட்டிற்கு சென்று வந்தார். அப்போது அங்கு வசிக்கும் 14 வயது வடமாநில சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் ஆசை வார்த்தை கூறி அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்த பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர்கள் ஊட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ஹரிசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கடந்த மாதம் 19-ந் தேதி காட்டு யானை தாக்கியதில் பாப்பாத்தி என்ற பெண் உயிரிழந்தாா்.
    • 50-க்கும் மேற்பட்ட வனத் துறையினா், 4 கால்நடை மருத்துவா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஊட்டி

    கூடலூா், தேவாலா வாழவயல் பகுதியில் கடந்த மாதம் 19-ந் தேதி காட்டு யானை தாக்கியதில் பாப்பாத்தி என்ற பெண் உயிரிழந்தாா். தொடா்ந்து பி.எம்.2 மக்னா என்ற அந்த யானையை பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்ல பொதுமக்கள் வலியுறுத்தினா்.

    இதனைத் தொடா்ந்து அந்த யானையை பிடிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

    இதற்கிடைேய அந்த யானை நாடுகாணியை அடுத்த காரக்கொல்லி வனப்பகுதியில் உலவி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரியவந்தது.

    இதையடுத்து அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வனத் துறையினா், 4 கால்நடை மருத்துவா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கண்காணித்து வருகின்ற னர்.

    இதற்கிடையே கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கரளிகண்டி வனப்பகுதியில் கூடலூர் உதவி வன பாதுகாவலர் தலைமையில் கூடலூர், பந்தலூர், நாடுகாணி வனச்சரக பணியாளர்கள் மற்றும் வன உயிரின கால்நடை மருத்துவ குழுவினருடன், மக்னா யானையின் கால் தடத்தை வைத்து டிரோன் காமிரா மூலம் யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தற்போது யானை முண்டக்கொல்லி வனப்பகுதிக்குள் யானை தென்பட்டுள்ளது.

    இதனால் அந்த யானை இரவு நேரத்தில் வாச்சிக்கொல்லி, புளியம்பாறை, மரம்பிலா கோல்கேட், கோழிப்பாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வர வாய்ப்புள்ளது. இதனால் அப்பகுதிகளை சேர்ந்த ெபாதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • குறும்பட விழா 3 நாட்கள் நடக்கிறது.
    • படுகர் இன மொழியில் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    ஊட்டி அசெம்பிளி தியேட்டரில் குறும்பட விழா தொடங்கியது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் போதை பழக்கத்தில் இருந்து மாணவர் விடுபடும் கதை கொண்ட குறும்படத்தை அமைச்சரும், கலெக்டரும் பார்த்தனர். குறும்பட விழா 3 நாட்கள் நடக்கிறது. தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு குறும்படம் ஒரு வாய்ப்பாகும். குறிப்பாக ஊட்டியில் குறும்பட தயாரிப்பாளர்கள் மூலம் படுகர் இன மொழியில் குறும்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. விழாவில் அசெம்பிளி ரூம்ஸ் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • 136 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
    • சமுதாயக்கூடத்தில் வருவாய்த்துறை சார்பில் நடைபெற்றது.

    ஊட்டி,

    பந்தலூர் அருகே சேரங்கோடு சமுதாயக்கூடத்தில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா தலைமை தாங்கினார். பந்தலூர் தாசில்தார் நடேசன், பிதிர்காடு வனச்சரகர் ரவி, துணை தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர்கள் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேரங்கோடு படச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தொகுப்பு வீடு, முதியோர் உதவித்தொகை, சாலை, தெருவிளக்கு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து 136 கோரிக்கை மனுக்களை அளித்தனர். முகாமில் சேரங்கோடு ஊராட்சி தலைவர் லில்லி எலியாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் சில தினங்களாக பகலில் வெயிலும், இரவில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
    • பல இடங்களில் மண்சரிவு ஏற்படுவதுடன், வீடுகள் இடிந்து விழும் அபாயமும் உள்ளது.

    குன்னூர்,

    நீலகிரி மாவடத்தில் கடந்த சில வாரங்களாக கடும் உறைபனி மற்றும் பனிப்பொழிவு காணப்ப டுகிறது. அவ்வப்போது சில நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

    குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் சில தினங்களாக பகலில் வெயிலும், இரவில் பலத்த மழையும் பெய்து வருகிறது. நேற்று காலை கடும் வெயில் நிலவியது. அதனை தொடர்ந்து கடும் பனி கொட்டி தீர்த்தது.

    மாலையில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து இரவில் கனமழை கொட்டி தீர்த்தது. இரவு ஆரம்பித்த மழை அதிகாலை வரை நீடித்தது. இந்த மழையால் சாலையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இரவு நேரம் என்பதால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்ததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர் மழைக்கு ஒட்டுப்பட்டறை, உழவர்சந்தை, ரேலி காம்பவுண்ட், வண்ணா ரபேட்டை உள்பட 5 இடங்களில் மண்சரிவு ஏற்ப ட்டது. தகவல் அறிந்ததும், அதிகாரிகள் விரைந்து வந்து மண்சரிவை அகற்றினர். தொடர்ந்து இதேபோன்று மழை பெய்தால் மேலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்படுவதுடன், வீடுகள் இடிந்து விழும் அபாயமும் உள்ளது.

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிந்தது.

    • எம்.ஜி.ஆர்.நகர், உள்பட 50கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.
    • உரிய நேரத்தில் அவசர சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது எமரால்டு.

    இப்பகுதியை சுற்றிலும் நேருநகர், நேருகண்டி, லாரன்ஸ், கோத்தகண்டி, அண்ணாநகர், எம்.ஜி.ஆர்.நகர், உள்பட 50கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.

    சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் நிறைந்த எமரால்டு சுற்றுவட்டார பகுதிகளில் அரசு, தனியார் மருத்துவ மனைகள் இல்லாததால் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பலவிதமான நோய்களுக்கு சிகிச்சை பெற தொலை துாரமுள்ள மஞ்சூர் அல்லது ஊட்டி போன்ற பகுதிகளுக்கே சென்று வர வேண்டியுள்ளது.

    இதனால் காலவிரயம், கூடுதல் செலவினம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. மேலும் உரிய நேரத்தில் அவசர சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.

    இதையடுத்து சுற்றுவட்டார கிராமங்க ளின் மையப்பகுதியாக உள்ள எமரால்டில் மருத்து வமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதை தொடர்ந்து அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு எமரால்டு பகுதியில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த மே மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் நடந்த விழாவில் காணொளி காட்சி மூலம் மருத்துவமனையை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து மருத்துவ மனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து நோயாளிகளுக்கு தேவையான வசதிகளுடன் மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எமரால்டு சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    • சூழல் சுற்றுலாவை ஏற்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மான்கள், மற்றும் வன விலங்குகளை காண சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களாக உள்ள ஊட்டி, குன்னுார் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர்.

    அதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமாக மஞ்சூர் பகுதியில் உள்ள அப்பர்பவானி, பென்ஸ்டாக் காட்சிமுனை, குந்தா, கெத்தை, எமரால்டு, அவலாஞ்சி அணைக்கட்டுகள் மற்றும் நீர் மின் நிலையங்கள், அவலாஞ்சி மீன் வளர்ப்பு நிலையம் மற்றும் தமிழக கேரளா எல்லையில் உள்ள கிண்ணக்கொரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ெபரிதும் ஆர்வங்காட்டுகிறார்கள்.

    குறிப்பாக மஞ்சூரில் இருந்து சுமார் 30 கி.மீ துாரம் உள்ள அப்பர்பவானி பகுதியில் இயற்கையோடு ஒன்றியுள்ள காடுகள், பச்சை பசேல் என கண்களுக்கு பசுமையூட்டும் புல்வெளிகள், மனதை கவரும் மடிப்பு மலைகள், மலைகளில் வெள்ளி கீற்றுகளாய் தவழும் அருவிகள், சாலையில் துள்ளி திரியும் மான்கள், மற்றும் வன விலங்குகளை காண சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.

    இது தவிர மின்சார உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாகவும், மாவட்டத்தில் மிக பெரியதுமான மேல்ப வானி அணை உள்ளது. இந்நிலையில் எந்த தடையும் இல்லாமல் சுற்றுலா பயணிகள் அப்பர்பவா னிக்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வனத்துைற தடை விதித்துள்ளது.

    இதற்காக அப்பர்பவானி ெசல்லும் சாைலயில் 10கி.மீ முன்பாக ேகாரகுந்தா என்ற இடத்தில் வனத்துைற சார்பில் ெசக்ேபாஸ்ட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அப்பர்பவானிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் செக்போஸ்டில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்.

    இதனால் சுற்றுலா பயணிகள் அப்பர்பவானி யை பார்வையிட முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து அப்பர்பவானியில் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகளை அனுமதிப்ப துடன் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலாவை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

    • பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மஞ்சப்பை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
    • தமிழகம் முழுவதற்கும் ஒருங்கிணைத்து பைகள் தயாரித்து விற்பனை செய்யும்போது விலை குறையும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஊட்டி மார்க்கெட்டில் மஞ்சப்பை வினியோகிக்கும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

    இதன் செயல்பாட்டை கலெக்டர் அம்ரித் முன்னிலையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சிந்தனை செல்வன் கூறியதாவது:-

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மஞ்சப்பை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

    நீலகிரி மாவட்டத்தில் 20 இடங்களில் மஞ்சப்பை வினியோகிக்கும் தானியங்கி எந்திரங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் எந்திரம் ஊட்டியில் உள்ள உழவர் சந்தையில் நிறுவப்பட்டது.

    தற்போது மார்க்கெட் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தில் ரூ.10 மதிப்பிலான ரூ.1, ரூ.2, ரூ.5 நாணயங்களை செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும். ஒரு பைக்கு ரூ.14 வரை செலவாகிறது. ஆனால் நாங்கள் ரூ.10க்கு விற்பனை செய்கிறோம்.

    மாவட்ட அளவில் பைகள் விற்பனை செய்யப்படுவதால், பையின் விலை கூடுதலாக உள்ளது. தமிழகம் முழுவதற்கும் ஒருங்கிணைத்து பைகள் தயாரித்து விற்பனை செய்யும்போது விலை குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குரங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன.
    • அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டன.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகாவுக்கு உட்பட்ட சேரங்கோடு பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன. இதன் காரணமாக அவதிக்குள்ளான அப்பகுதி பொதுமக்கள், குரங்குகளை கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என்று வனத் துறையினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.இதையடுத்து வனத்துறையினா் அப்பகுதியில் கூண்டு வைத்திருந்தனா். இந்த கூண்டில், 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் சிக்கின. இதையடுத்து அந்த குரங்குகள் நாடுகாணி பகுதியில் உள்ள அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனா்.

    • தேவைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தார்.
    • 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தாருக்கு காய்கறிகள், வழங்க ஏற்பாடு செய்து இருந்தார்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட கரும்பாலம் பகுதி அ.தி.மு.க வார்டு உறுப்பினர் நிரோஷா 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தாருக்கு காய்கறிகள், போர்வைகள் வழங்க ஏற்பாடு செய்து இருந்தார். நலத்திட்ட உதவிகளை கேத்தி பேருராட்சி தலைவர் ஹேமாமாலினி வழங்கினார்.

    மேலும் கரும்பாலம் பகுதியில் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் பல்வேறு தேவைகளை வார்டு உறுப்பினர் நிரோஷாவிடம் கூறினர்.

    அப்போது அவர்கள் மக்களுக்கு கழிப்பிடமோ குடிநீர், தெருவிளக்கு ஏதுவும் இல்லாமல் வாழ்க்கை நடத்தி வருவதாகவும், பலமுறை வீடு வசதி கேட்டு மனு வழங்கி இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.இது குறித்து வார்டு உறுப்பினர் நிரோஷா கூறும்போது, கரும்பால பகுதி மக்களின் அனைத்து அத்தியாவசிய அடிபடை தேவைகளும் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தார்.

    • நாய்கள் புதருக்குள் ஓடி ஒளிந்து கொண்டன.
    • பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

    ஊட்டி

    ஊட்டி நகர மன்ற உறுப்பினர் முஸ்தபா செல் போன் எண்ணுக்கு ஒரு சிறுமி போன் செய்து நாங்கள் பி அண்டு டி குடியிருப்பு பகுதியில் வசிக்கிறோம். எங்கள் தெருவில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியவில்லை. நாய்கள் கும்பலா கடிக்கவருகிறது.

    தயவு செய்து புடியுங்கள் என பதட்டத்தோடு பேசினார். அவரும் நிச்சயம் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறேன் என ஆறுதல் கூறியுள்ளார்.

    இதேபோன்று தி.மு.க மாணவர் அணி பொறுப்பாளர் பழக்கடைமுஜி போன்செய்து அதேபகுதியில் பள்ளிக்கு குழந்தையை விடச்சென்ற ஒரு பெண்ணை நாய்கள் துரத்தி ஆடையைபிடித்து கடித்துள்ளது. ஏதாவது செய்யவேண்டும் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

    இதனை கேட்ட நகர மன்ற உறுப்பினர் முஸ்தபா மற்றும் பழக்கடை முஜி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்கூறி நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர். நகராட்சி கமிஷனர் காந்திராஜனிடமும், நகராட்சி எஸ்.ஐ மகாராஜாவிடமும் நிலைமையின் விபரீதத்தை எடுத்துச்சொல்லி உடனடி நடவடிக்கைக்கு எடுக்க கோரினர்.

    அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுத்து ஒருமணிநேரத்தில் தெருநாய்களை பிடிக்கும் வாகனத்துடன் 10 பேரை அனுப்பிவைத்தனர்.நாய்களை பிடிக்கும் வாகனத்தை பார்த்த நாய்கள் புதருக்குள் ஓடி ஒளிந்து கொண்டன.

    இருந்தும் 5-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்தனர். மீண்டும் வந்து மீதமுள்ள நாய்களை பிடித்து மாற்று பகுதிகளில் விட்டுவிடுவதாகவும் தெரிவித்தனர்.

    உடனே நடவடிக்கை எடுத்த நகரமன்ற உறுப்பினர் முஸ்தபா மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கும், நாய்களை பிடித்த அந்த அமைப்பின் நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

    ×