search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீலகிரியில் 20 இடங்களில் மஞ்சப்பை தானியங்கி எந்திரங்கள்
    X

    நீலகிரியில் 20 இடங்களில் மஞ்சப்பை தானியங்கி எந்திரங்கள்

    • பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மஞ்சப்பை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
    • தமிழகம் முழுவதற்கும் ஒருங்கிணைத்து பைகள் தயாரித்து விற்பனை செய்யும்போது விலை குறையும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஊட்டி மார்க்கெட்டில் மஞ்சப்பை வினியோகிக்கும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

    இதன் செயல்பாட்டை கலெக்டர் அம்ரித் முன்னிலையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சிந்தனை செல்வன் கூறியதாவது:-

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மஞ்சப்பை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

    நீலகிரி மாவட்டத்தில் 20 இடங்களில் மஞ்சப்பை வினியோகிக்கும் தானியங்கி எந்திரங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் எந்திரம் ஊட்டியில் உள்ள உழவர் சந்தையில் நிறுவப்பட்டது.

    தற்போது மார்க்கெட் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தில் ரூ.10 மதிப்பிலான ரூ.1, ரூ.2, ரூ.5 நாணயங்களை செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும். ஒரு பைக்கு ரூ.14 வரை செலவாகிறது. ஆனால் நாங்கள் ரூ.10க்கு விற்பனை செய்கிறோம்.

    மாவட்ட அளவில் பைகள் விற்பனை செய்யப்படுவதால், பையின் விலை கூடுதலாக உள்ளது. தமிழகம் முழுவதற்கும் ஒருங்கிணைத்து பைகள் தயாரித்து விற்பனை செய்யும்போது விலை குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×