என் மலர்
நீலகிரி
- 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
- பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக கொண்டு வர மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி மாவட்ட எல்லைகளான பர்லியார், குஞ்சப்பனை சோதனை சாவடிகள், மாநில எல்லையில் உள்ள கக்கநல்லா, நாடுகாணி உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் நீலகிரிக்கு வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் கொண்டு வரப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுதவிர மாவட்டம் நீலகிரி மாவட்டத்திற்குள்ளும் நகர் மற்றும் பேரூராட்சி, கிராம பகுதிகளிலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அப்படி யாராவது பிளாஸ்டிக் பயன்படுத் தினால் ஐகோர்ட்டு உத்தரவுப்படி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைகளுக்கு சீல் வைத்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நீலகிரிக்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நீலகிரிக்குள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டும் வர வேண்டாம் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டு உள்ளது. இருப்பினும் சில இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கேரள எல்லை பகுதியான சேரப்பாடி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து உள்ளது. மேலும் சேரங்கோடு ஊராட்சி பகுதிகளில் சாலை ஒரங்களில் அதிகளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. எனவே இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தேயிலைத் தோட்டங்களிலும் சுற்றித்திரிகின்றன.
- காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரவேணு,
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது காட்டெருமை, கரடி, காட்டுபன்றி, சிறுத்தை உள்பட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் காட்டெருமைகள் நகரின் முக்கிய சாலைகளில் நடமாடி வருவதுடன், குடியிருப்பு பகுதிகளிலும், தேயிலைத் தோட்டங்களிலும் சுற்றித்திரிகின்றன.
கடந்த சில நாட்களாக கோத்தகிரி வியூஹில், காம்பாய் கடை, ஹேப்பி வேலி உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்புக்களை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளதுடன், அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து நடமாடி வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தேங்காய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
- பா.ஜனதா கட்சியினர் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஊட்டி,
தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புடன் தேங்காய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜனதா கட்சியின் விவசாயிகள் பிரிவு சார்பில் ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சஞ்சாய் சிங் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன், மாவட்ட தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர். இதில் ஏ.டி.சி பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேங்காய் இலவசமாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பா.ஜனதா கட்சியினர் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
- விழாவில் உள்ளுா் மட்டுமில்லாமல் சுற்றுலா பயணிகளும் வெகுவாக கலந்து கொண்டு ரசித்தனா்.
- பாரம்பரிய ராஜா உடை அணிந்து ஆடிப்பாடி கொண்டாடினா்.
ஊட்டி,
நீலகிரி மலைப் பகுதியில் கோத்தா், தோடா், பணியா், குரும்பா், காட்டுநாயக்கா், இருளா் என 6 இனங்களைச் சோ்ந்த பண்டைய பழங்குடியினா் வசித்து வருகின்றனா்.
கோத்தா் இன மக்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை, சோலூா், திருச்சுக்கடி, குந்தா, கோத்தகிரி, மேல் கூடலூா், கீழ் கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் மட்டுமே வாழ்ந்து வருகின்றனா்.
இவா்கள் மூதாதையா்களை மட்டுமே வணங்கி வருகின்றனா். பெண்கள் துபிட்டி எனும் வெள்ளை புடவையை அணிந்து கொள்வதும், ஆண்கள் வேட்டி கட்டி கொண்டு வராடு என்ற துணியை போா்த்திக் கொள்வதும்தான் இவா்களின் உடை கலாசாரம்.
இவா்களின் குலதெய்வமான அய்யனூா், அம்மனூா் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இந்த பழங்குடியினா் பாரம்பரிய ராஜா உடை அணிந்து ஆடிப்பாடி கொண்டாடினா்.
இந்த விழாவில் உள்ளுா் மட்டுமில்லாமல் சுற்றுலா பயணிகளும் வெகுவாக கலந்து கொண்டு ரசித்தனா்.
- 1,60,144 நபர்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது.
- 4 பேருக்கு முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை சிறந்த முறையில் செய்யப்பட்டு தற்பொழுது நல்ல நிலையில் உள்ளனர்.
ஊட்டி,
ஊட்டி அரசு மருத்துவ–மனையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம், முதுகு தண்டுவடம் சிகிச்சை மேற்கொண்டவர்களிடம் கலெக்டர் அம்ரித் கலந்துரையாடினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 1,60,144 நபர்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது.
முன்பு முதுகு தண்டுவலியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற கோவை, கேரளாவுக்கு சென்று வந்தனர்.
கடந்த சில மாதங்களில் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முடநீக்கியல் துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் முழுவதுமாக எந்தவித கட்டணமும் இல்லாமல் நீலகிரியை சேர்ந்த 4 பேருக்கு முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை சிறந்த முறையில் செய்யப்பட்டு தற்பொழுது நல்ல நிலையில் உள்ளனர்.
முதுகு தண்டு வலி அதிகமாக காணப்படும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுமக்களுக்கு இதுபோன்ற சிகிச்சை ஊட்டி அரசு மருத்துவமனையில் கிடைப்பது ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
மேலும், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 3 மணி நேரத்திற்குள் ஆண்டிபிளேஸ்" என்ற மருந்தினை செலுத்த வேண்டும். வெளியில் இந்த மருந்தின் விலை ரூ.40 ஆயிரம் ஆகிறது. ஆனால் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இம்மருந்தானது இலவசமாக அரசு மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.
இதுபோன்ற பல்வேறு சிகிச்சைகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளி சரோஜா என்பவர் கூறியதாவது:-
தெரிவித்ததாவது:-
நான் நொண்டிமேடு ஓபார்டு பகுதியில் வசித்து வருகிறேன். நான் முதுகு தண்டுவட பாதிப்பால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தேன். இதற்கு ஊட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டேன்.
அங்கு எனக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்ப ட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டதால் விரைவாக குணமடைந்து வீடு திரும்பினேன். இத்திட்டத்தினை செயல்படுத்திய முதல்- அமைச்சருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
பயனாளி கிருஷ்ணமூர்த்தி கூறும்போது,
நான் கக்குச்சி இந்து நகர் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு முதுகுதண்டு வட பாதிப்பு ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு வந்தேன். இதற்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டேன். அங்கு எனக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ப்பட்டது. இதில் குணமடைந்து விரைவில் வீடு திரும்பினேன்.
இதனை செயல்படுத்திய முதல்-அமைச்சருக்கு நன்றி என தெரிவித்தார்.
இதில், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, முடநீக்கியல் துறை இணை பேராசிரியர் அமர்நாத், முட நீக்கியல் துறை மருத்துவர்கள் லோகராஜ், ஜெய்கணேஷ் மூர்த்தி, இயன்முறையியல் மருத்துவர் பிரமிளா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சலால் காட்டுப் பன்றிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- நோய் மனிதா்களுக்கோ, மற்ற வன விலங்குகளுக்கோ பரவ வாய்ப்பில்லை.
ஊட்டி:
தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகம், கா்நாடக மாநிலம் பந்திப்பூா் புலிகள் காப்பகம், கேரள மாநிலம் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் ஆகிய 3 சரணாலயங்கள் ஒன்றிணைந்த தொடா் வனப்பகுதியாக நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முதுமலை வனப்பகுதி உள்ளது.
கடந்த சில நாள்களாக முதுமலை புலிகள் காப்பகம் வன பகுதிகளில் அடுத்தடுத்து காட்டு பன்றிகள் தொடா்ந்து உயிரிழந்து வந்தன.
இந்தக் காட்டு பன்றிகளை, தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவக் குழுவினா், கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு மருத்துவக் குழுவினா் ஆகியோா் உடற்கூறு ஆய்வு செய்து முக்கியமான உறுப்புகளை சென்னை மற்றும் டெல்லிக்கு ஆய்வுக்கு அனுப்பினா். இதில் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் காட்டுப் பன்றிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் நிருபா்களிடம் கூறியதாவது:-
ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சலால் காட்டுப் பன்றிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் மனிதா்களுக்கோ, மற்ற வன விலங்குகளுக்கோ பரவ வாய்ப்பில்லை.
தமிழகம், கேரளம், கா்நாடக மாநில அரசுகளின் கலெக்டர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் நாளை(இன்று) காணொலி காட்சி மூலம் கூட்டம் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்துக்கு பின் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே கூடலூா் வனத்துறை அதிகாரிகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், காட்டுப் பன்றிகள் இறப்புச் சம்பவங்கள் குறித்து நிலைமை சீரடையும் வரை, நீலகிரியில் வளா்ப்பு பன்றிகளை விற்க தடை விதிக்கப்படுகிறது. இதை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி நேற்று நீலகிரியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
- ஓவியங்களை சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்கள் ரசித்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி, நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி நேற்று நீலகிரியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதையொட்டி கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களின் வருகையும் அதிகரித்து இருந்தது. சிறுவர் விளையாட்டு பூங்காவில் ஏராளமான குழந்தைகள் புதிதாக பொருத்தப்பட்டு உள்ள விளையாட்டு உபகரணங்களில் ஆர்வத்துடன் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அங்குள்ள கழிப்பிட சுவற்றில் தத்ரூபமாக வரையப்பட்டு உள்ள வனவிலங்குகளின் ஓவியங்களை சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்கள் ரசித்தனர்.
- நீலகிரி மாவட்டம் கர்நாடகா, கேரள மாநிலங்களின் எல்லையில் உள்ளது.
- போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்த ஆஷிஷ் ராவத், கடந்த சில நாட்களுக்கு முன்பு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை மெட்ரோ தலைமை பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்த பிரபாகர் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தின் 63-வது போலீஸ் சூப்பிரண்டாக பிரபாகர் நேற்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஆஷிஷ் ராவத் ஒப்படைத்தார். திண்டுக்கல்லை சேர்ந்த பிரபாகர் 2005-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, காவல்துறை பயிற்சி முடித்து மேற்கு சரகத்தில் பணியில் சேர்ந்துள்ளார். விழுப்புரம், சென்னையில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணிபுரிந்து உள்ளார். மேலும், சத்தியமங்கலத்தில் சிறப்பு அதிரடிப்படையில் 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். 2018-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று சென்னை கட்டுப்பாட்டு அறையிலும், பின்னர் மெட்ரோ ரெயில் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாகவும் இருந்துள்ளார்.
தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- நீலகிரி மாவட்டம் கர்நாடகா, கேரள மாநிலங்களின் எல்லையில் உள்ளது. கேரளாவில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்துக்குள் ஊடுருவாமல் தடுக்கும் வகையில், எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் உத்தரவின் பேரில் நீலகிரியை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். புதிதாக பொறுப்பேற்ற சூப்பிரண்டுக்கு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மகேஸ்வரன், மகேஷ்குமார், செந்தில்குமார், விஜயலட்சுமி, யசோதா மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
- பகல் நேரங்களில் பனி மூட்டம் மற்றும் பனிமூட்டத்தினால் ஏற்படும் கடுங்குளிர் நிலவி வருகிறது.
- பனிமூட்டமும் கடுங்குளிரும் அதிமாக காணப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது
அரவேணு,
தட்ப வெட்ப மாற்றத்தின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கடுங்குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் பனி மூட்டம் மற்றும் பனிமூட்டத்தினால் ஏற்படும் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் வேலைக்கு செல்லும் பெரியவர்கள் என பள்ளி செல்லும் குழந்தைகள் வரை மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிரிலிருந்து தங்களை பாதுகாத்து வருகின்றனர். மேலும் ஜனவரி மாதத்தின் இறுதியில் இந்த பனிமூட்டமும் கடுங்குளிரும் அதிமாக காணப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையில் வந்து வழிபட்டனர்
- கோத்தகிரியில் இருந்து பேரகணி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகா் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்றது.
திருவிழாவையொட்டி, கடந்த ஒரு மாதமாக பக்தா்கள் விரதம் இருந்து வந்தனா். கோத்தகிரியில் பழமை வாய்ந்த பேரகணியில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் நேற்று திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான படுகா் இன மக்கள் கலந்துகொண்டு ஹெத்தையம்மன் திருவிழாவினை கொண்டாடினா்.
படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து இசைக்கருவிகள் முழங்க ஆடல், பாடல்களுடன் வாகனங்களில் ஹெத்தையம்மன் கோவிலுக்கு வந்து காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.
பண்டிகைக்கு வந்த பக்தர்களுக்கு மடியாடா பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வாகனங்கள் மூலமாக பேரகணிக்கு சென்றதால் கோத்தகிரியில் இருந்து பேரகணி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல, படுகா் இன மக்கள் வாழும் ஜெகதளா, காட்டேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வரும் நாள்களில் ஹெத்தையம்மன் திருவிழா நடைபெற உள்ளது.
- பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஏராளமான காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
- இறந்த பன்றிகளின் உடற்பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள முதுமலை புலிகள் காப்பகமும், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகமும் அடுத்தடுத்து அமைந்துள்ளன.
இந்நிலையில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஏராளமான காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
கர்நாடக வனத்துறையினர் இறந்த பன்றிகளை பிரேத பரிசோதனை செய்து அதன் உடல் பாகங்களின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்தனர். அவற்றை இந்திய கால்நடை ஆய்வு மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த ஆய்வில் காட்டுப்பன்றிகள் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் இந்நோய் மேலும் பரவாத வகையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்துடன் முதுமலை புலிகள் காப்பகமும் இணைந்து அமைந்துள்ளதால், இங்கும் பன்றிகள் அதிகளவு இறந்துள்ளனவா? என ஆய்வு செய்யப்பட்டது. இதில் அண்மையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 15 காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து இறந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவற்றின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு இந்திய கால்நடை ஆய்வு மையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைகழகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து நோய் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர்.
நேற்று மேலும் 2 காட்டு பன்றிகள் இறந்து கிடந்தது. உடனடியாக அவை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதற்கிடையே இறந்த பன்றிகளின் உடற்பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இதில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை வனப்பகுதியில் உள்ள பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- கிராம நிா்வாக அலுவலா் சாம்சனை குந்தா வட்டத்துக்கு மாவட்ட நிா்வாகம் இடமாற்றம் செய்தது.
- மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட
ஊட்டி
ஊட்டி, கூக்கல் பகுதியை சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா் சாம்சனை குந்தா வட்டத்துக்கு மாவட்ட நிா்வாகம் இடமாற்றம் செய்தது. இது பழி வாங்கும் நடவடிக்கை என்று கூறி கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் தலைவா் அருள் ரத்தினம் தலைமையில் மாவட்டத் தலைவா் தீபக் முன்னிலையில் குன்னூரில் தாசில்தார் அலுவலகம் முன்பு மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.






