என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bisons roaming"

    • தேயிலைத் தோட்டங்களிலும் சுற்றித்திரிகின்றன.
    • காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    அரவேணு,

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது காட்டெருமை, கரடி, காட்டுபன்றி, சிறுத்தை உள்பட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் காட்டெருமைகள் நகரின் முக்கிய சாலைகளில் நடமாடி வருவதுடன், குடியிருப்பு பகுதிகளிலும், தேயிலைத் தோட்டங்களிலும் சுற்றித்திரிகின்றன.

    கடந்த சில நாட்களாக கோத்தகிரி வியூஹில், காம்பாய் கடை, ஹேப்பி வேலி உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்புக்களை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளதுடன், அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து நடமாடி வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    எனவே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×