என் மலர்
நாமக்கல்
- வேலை நிறுத்த போராட்டத்தால் 3,200 தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
- சுமார் 1 லட்சம் பேர் வேலை இழந்தனர்.
நாமக்கல்,
தமிழகத்தில் தொழில் நிறு வனங்களுக்கு உயர்த்தப்பட் டுள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். பீக் ஹவர் மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, நேற்று நாமக்கல் மாவட்டத்தில், சிறு, குறு தொழிற் சாலைகள், தொழில் நிறுவனங்கள் கடையடைப்பு போராட் டத்தில் ஈடுபட்டது.
நாமக்கல் லாரி பாடி பில்டர்கள் சங்கம், ஆல் மோட்டார் ஒர்க் ஷாப் ஓனர்ஸ் அசோசி யேசன், கண்ணாடி கடை அசோசி யேசன், சேகோ பேக்டரி உரிமையாளர் கள் சங்கம், தேங்காய் நார் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டன.இதனால் மாவட்டத்தில், சிறு, குறு தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவ னங்கள் உள்ளிட்டவை உற்பத்தியை நிறுத்தி மூடப் பட்டிருந்தது.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்க தலைவர் இளங்கோ கூறியதாவது:-நாமக்கல் மாவடடத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், 2 ஆயிரத் துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்சாலைகளும் மற் றும் பாடி பில்டிங் பட்ட றைகள், சேகோ பேக்ட ரிகள் உட்பட மொத்தம் 3,200 தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் மாவட்டம் முழுவதுமாக சுமார் 1 லட்சம் பேர் வேலை இழந்தனர். மேலும் 2 கோடி அளவுக்கு தொழில் உற்பத்தி முடங்கியது.
மின்கட்டணம் அதி கப்படியாக உயர்த்தப்பட்டு உள்ளதால், தொழிற் சாலை களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் கட்ட ணத்தை அரசு குறைக்கும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப் படும்.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது நாமக்கல் வட்ட பாடி பில்டர் சங்க தலைவர் தங்கவேல், தேங்காய் நார் உற்பத்தியா ளர்கள் சங்க செயலாளர் தசரதன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்,
- பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு திடீரென சாரல் மழை
- தொடர்ந்து இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது.
பரமத்தி வேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி, நடந்தை, மணி யனூர், கந்தம்பா ளையம், பெருங்கு றிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளிப்பா ளையம், சோளசி ராமணி, ஜமீன்இளம்பள்ளி குரும்பல மகாதேவி, கொத்த மங்கலம், சிறுநல்லிகோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், பெரிய சோளிபாளையம், கபிலக்குறிச்சி, இருக்கூர், வடகரையாத்தூர், ஆனங்கூர், குன்னத்தூர், பிலிக்கல்பாளை யம், சேளூர், கொந்தளம், கோப்பணம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
அதனைத் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய மழை கனமழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர். அதேபோல் சாலை ஓரங்க ளில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்க டைகள், பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண் டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப் பட்டனர்.தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள் ளது. கடும் வெயிலின் காரண மாக பயிர்கள் வாடிய நிலை யில் இருத்தது. பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
- முதல்-அமைச்சர் எண்ணற்ற திட்டங்களை பெண்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தி வருகிறார்.
- 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருச்செங்கோடு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி யில் உள்ள திருமண மண்ட பத்தில் சமூக நலத்துறையின் சார்பில் கலெக்டர் உமா தலைமையில் நாமக்கல் சின்ராஜ் எம்.பி., திருச்செங்கோடு ஈஸ்வரன் எம்.எல்.ஏ., நகரமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் உமா பேசியதாவது:-
மகப்பேறு திட்டங்கள்:தமிழ்நாடு முதல்-அமைச்சர் எண்ணற்ற திட்டங்களை பெண்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தி வருகிறார். அதன்படி கர்ப்பிணி தாய்மார்களுக்கு பாது காப்பான தாய்மையை உறுதிசெய்தல் மற்றும் மகப்பேறு உதவித்திட் டங்கள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சமுதாய வளைகாப்பு விழாவினை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது.அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கொடு நகராட்சி யில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் 15 வட்டாரங்களிலும் சுழற்சி முறை யில் நடைபெறவுள்ளது.
சீர்வரிசை:இதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர் வரிசை பொருட்கள், மதிய உணவு உள்ளிட்டவைகள் வழங்கப் பட்டது. சுகாதாரத்துறையின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்து பரிசோதனைகள் மேற் கொள்ள மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி தாய்மார்கள் கருவுற்ற காலங்களில் 12 கிலோ எடை கூடினால் மட்டுமே 3 கிலோ எடை யுள்ள குழந்தைகள் பெற்றெடுக்க முடியும்.எனவே இந்த காலக்கட் டத்தில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யத்தில் தொடர்ந்து பரிசோ தனை மேற்கொண்டு, மருத்துவரின் ஆலோசனை களை பெற வேண்டும். கர்ப்பிணி தாய்மார்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கி யமாகவும் இருக்க வேண்டும். தொடர்ந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது கர்ப்ப காலத்தில் அரசு மருத்துவமனையில் பிரிசோதனை மேற் கொண்டு நல்ல முறையில் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டுமென வாழ்த்து கிறேன்.நாமக்கல் மாவட்டத்தில் மீதமுள்ள 14 வட்டாரங்க ளிலும் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு செப்டம்பர் 29-ந் தேதிக்குள் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுஜாதா தங்கவேல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொறுப்பு) மோகனா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- குமாரபாளையம் தனியார் கல்லூரியில் மருந்தியல் படிப்பு (பார்ம்.டி)படித்து வருகிறார்.
- சேலம்-கோவை புறவழிச்சாலை வட்டமலை பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் கடக்கும்போது சரக்கு வாகனம் மோதியது
குமாரபாளையம்
கடலூரை சேர்ந்தவர் காமேஷ் (23). இவர் குமாரபாளையம் தனியார் கல்லூரியில் மருந்தியல் படிப்பு (பார்ம்.டி)படித்து வருகிறார். இவர் சேலம்-கோவை புறவழிச்சாலை வட்டமலை பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் கடக்கும்போது, எதிர் திசையில் உள்ள சர்வீஸ் சாலையில் வேகமாக வந்த சரக்கு வாகனம், இவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் காமேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுனர் பட்லூரை சேர்ந்த பூபதி, (26), என்பவரை கைது செய்தனர்.
- பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 541 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள்
- 10 பயனாளிகளுக்கு ரூ. 38.11 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்ட றிந்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கை கள் குறித்து மொத்தம் 541 மனுக்களை மாவட்ட கலெக்ட ரிடம் வழங்கி னார்கள். மனுக்க ளைப் பெற்றுக் கொண்ட கலெக்டர், மனுக்களை பரிசீலனை செய்து, உரிய அலுவலர்க ளிடம் வழங்கி அவற்றின் மீது விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டுமென உத்தர விட்டார்.நிகழ்ச்சியில் தாட்கோ மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.29.72 லட்சம் மதிப்பில் கடனுதவி, பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை யின் சார்பில் தலா ரூ.6,000 வீதம் மொத்தம் ரூ.12,000 மதிப்பில், 2 பயனாளிகளுக்கு இலவச சலவைப் பெட்டி, கூட்டுறவுத் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2.27 லட்சம் மதிப்பில் வட்டியில்லா பயிர் கடனு தவி, 1 மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் கடனுதவி மற்றும் வருவாய் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா, என மொத்தம் 10 பயனாளி களுக்கு ரூ. 38.11 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- லாரி பாடி கட்டுமானத்தில் ஈடுபடும் நிறுவனங்களும் போராட்டத்தில் பங்கேற்றன.
- இன்று சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்தனர்.
நாமக்கல்:
தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் சார்பில் முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் அடையாள உற்பத்தி நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் இன்று உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டன.
அதுபோல் லாரி பாடி கட்டுமானத்தில் ஈடுபடும் நிறுவனங்களும் போராட்டத்தில் பங்கேற்றன.
இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக இன்று சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்தனர்.
- அம்மன் நகரில் வசிப்பவர்கள் பிரேம்கு மார் (20), முரளி தரன் (21), அஜய் (21). 3 பேரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
- சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வேகமாக வந்த கிரேன் வாகனம் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர்கள் பிரேம்குமார் (20), முரளிதரன் (21), அஜய் (21). 3 பேரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
கிரேன் மோதியது
நேற்று இரவு பிரேம்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வர முரளிதரன், அஜய் ஆகியோர் பின்னால் உட்கார்ந்து வந்தனர். இவர்கள் சேலம்-கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வேகமாக வந்த கிரேன் வாகனம் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தடுமாறி விழுந்த 3 பேரும் பலத்த காய மடைந்த னர். இதை யடுத்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து கிரேன் டிரைவரான குமாரபாளையம் பெரியார் நகரை சேர்ந்த குமார் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சர்வதேச அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வளர் திறன் தேர்வு பிரான்ஸ் நாட்டில் உள்ள லயான் மாகாணத்தில் வரும் 2024ல் நடக்கிறது.
- தொழில்நுட்பத்திறனை எவ்வாறு வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பதை கண்டறியும் வகையில் மாநில வாரியாக வளர்திறன் தேர்வு நடத்தப்படுகிறது.
நாமக்கல்:
சர்வதேச அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வளர் திறன் தேர்வு பிரான்ஸ் நாட்டில் உள்ள லயான் மாகாணத்தில் வரும் 2024ல் நடக்கிறது.
அதையொட்டி உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தங்களுடைய தொழில்நுட்பத்திறனை எவ்வாறு வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பதை கண்டறியும் வகையில் மாநில வாரியாக வளர்திறன் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி மாநில அளவிலான வளர் திறன் தேர்வு நிலை 1 தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
7 மையங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி , நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி, டிரினிடி மகளிர் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய 7 மையங்களில் நடைபெற்றது.
இதில் 4,552 தேர்வர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். மாநில அளவிலான தேர்வை அடுத்து தேசிய அளவிலும் அதையடுத்து சர்வதேச அளவிலும் வளர் திறன் தேர்வுகள் நடத்தப்படும்.
வளர் திறன் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பும், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்றால் ரூ.75 ஆயிரம் ஊக்கத்தொகையும் கிடைக்கும் என உயர் கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
- பள்ளிபாளையம் கீழ்காலனியில் உள்ள காட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
- இதுகுறித்து அந்த பகுதியினர் பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கீழ்காலனியில் உள்ள காட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அந்த பகுதியினர் பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மனநலம் பாதித்தவர்
இதில் இறந்து கிடந்தவர் ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (33) என்பது தெரியவந்தது. இவர் அதே பகுதியில் உள்ள வேஷ்டி உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவர் மனநலம் பாதித்தவர் என்றும் கூறப்படுகிறது.
பாலமுருகன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததால் அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை?
இதனிடையே பாலமுரு கனை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கொலை செய்ததற்கான அடையாளம் இல்லை. மேலும் அங்கு ரத்தம் சிதறி கிடந்த விதத்தை வைத்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பாலமுருகன் எவ்வாறு இந்த பகுதிக்கு வந்தார்? அவரை யாராவது இங்கு அழைத்து வந்து கொலை செய்தனரா? அவர் எதற்காக கொலை செய்யப் பட்டார்? என்ற கோண த்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தினசரி காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
- இன்று வெண்டைகாய், புடலங்காய், வாழைபழம் உள்ளிட்டவற்றின் வரத்து அதிகமாக இருந்தது.
நாமக்கல்:
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இன்று வெண்டைகாய், புடலங்காய், வாழைபழம் உள்ளிட்டவற்றின் வரத்து அதிகமாக இருந்தது.
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:
கத்தரிக்காய் ஒரு கிலோ - ரூ. 24 முதல் 36, தக்காளி - ரூ.12 முதல் 16, வெண்டைக்காய் - ரூ. 20 முதல் 25, அவரை - ரூ.40 முதல் 50, கொத்தவரை - ரூ.25, முருங்கைக்காய் -ரூ.30, முள்ளங்கி -ரூ.16, புடல்- ரூ.32 முதல் 40, பாகல்-ரூ.40 முதல் 44, பீர்க்கன் -ரூ.40 முதல் 56, வாழைக்காய் -ரூ.28, வழைப்பூ (1)- ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1)- ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் -ரூ.20, பூசணி- ரூ.15, சுரைக்காய் -(1) ரூ.10 முதல் 12, மாங்காய்- ரூ.60, தேங்காய் -ரூ. 27, எலுமிச்சை -ரூ. 80, கோவக்காய்- ரூ.40, சி.வெங்காயம்- ரூ. 30 முதல் 46, பெ.வெங்காயம்- ரூ.30 முதல் 35, கீரை -ரூ.30, பீன்ஸ் -ரூ.60 முதல் 68, கேரட் -ரூ.40 முதல் 48, பீட்ரூட்- ரூ.30 முதல் 40, உருளைக்கிழங்கு -ரூ.27 முதல் 30, சவ்சவ்- ரூ.28, முட்டைகோஸ்- ரூ.15 முதல் 20, காளிபிளவர்- ரூ.15 முதல் 25, குடைமிளகாய் -ரூ.50, கொய்யா -ரூ.30 முதல் 40, மலைவாழைப்பழம்- ரூ.50, பச்சை பழம்- ரூ.25, கற்பூரவள்ளி- ரூ.40, ரஸ்தாளி- ரூ.30, செவ்வாழை -ரூ.50, பூவன் -ரூ.20, இளநீர்- ரூ.15 முதல் 25, கறிவேப்பிலை -ரூ. 40, மல்லிதழை -ரூ. 40, புதினா -ரூ. 30, இஞ்சி- ரூ.150, பூண்டு- ரூ. 50, ப.மிளகாய்- ரூ. 40 முதல் 50, வாழை இலை- ரூ.30, மரவள்ளிக்கிழங்கு- ரூ. 30, மக்காச்சோளம்- ரூ. 25 முதல் 28, வெள்ளரிக்காய்- ரூ.20 முதல் 70, சேனைக்கிழங்கு- ரூ.70, கருணைக்கிழங்கு- ரூ.70, பப்பாளி- ரூ. 30, நூல்கோல்- ரூ. 32 முதல் 36, நிலக்கடலை- ரூ. 50, கொலுமிச்சை- ரூ.30, சப்போட்டா- ரூ.40, தர்பூசணி- ரூ.15, விலாம்பழம்- ரூ.40.
- பரமத்திவேலூரில் பழைய தேசிய நெடுஞ்சாலை அருகே அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு பரமத்தி வேலூர் தொகுதி எம்.எல்.ஏ. என்ஜினீயர் சேகர் தலைமை வகித்தார். பொத்தனூர் பேரூராட்சி முன்னாள் தலைவரும், நகர செயலாளருமான எஸ்.எம்.நாராயணன் அனைவரையும் வரவேற்றார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய தேசிய நெடுஞ்சாலை அருகே அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பரமத்தி வேலூர் தொகுதி எம்.எல்.ஏ. என்ஜினீயர் சேகர் தலைமை வகித்தார். பொத்தனூர் பேரூராட்சி முன்னாள் தலைவரும், நகர செயலாளருமான எஸ்.எம்.நாராயணன் அனைவரையும் வரவேற்றார். கபிலர்மலை ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான ஜே.பி.ரவி, பரமத்தி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் வெற்றிவேல், ரவி, நகர செயலாளர்கள் சுகுமார், ரவீந்தர், வேலுச் சாமி மற்றும் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப் பாளர்களாக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏவுமான தங்கமணி, வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.பரம சிவம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
40 தொகுதிகளில் வெற்றி பெறும்
அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சி அமைந்து 2½ ஆண்டுகள் ஆகியும் அவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறையில் இருந்த படித்த பெண்களுக்கு திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் பணம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி விட்டனர். ரூ.25 ஆயிரம் மானியத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் அம்மா ஸ்கூட்டர் திட்டமும் நிறுத்திவிட்டனர்.
அதேபோல் அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் ரத்து செய்து விட்டனர். தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையிலும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் நெருக்கடியாலும் குடும்பப் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப் பட்டுள்ளது. அதுவும் 50 சதவீத குடும்பத்தினருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்க ளித்து 40 தொகுதியிலும் 40 உறுப்பினர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தமிழ்மணி, மாவட்ட இலக்கிய அணி செயலாளரும் வெங்கரை பேரூராட்சி தலைவருமான விஜி என்கிற விஜயகுமார், ஆவின் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட தொழில்நுட்ப அணி செயலாளர் முரளி, மாணிக்கநத்தம் ஊராட்சி தலைவர் வேலுசாமி , ஊராட்சி தலைவர் மணிமேகலை யோகநாதன், இருக்கூர் ஊராட்சி தலைவர் ஜானகி குழந்தைவேல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் பொத்தனூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் சிவக்குமார் நன்றி கூறினார்.
- குமாரபாளையத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை யொட்டி ரேக்ளா போட்டிகள் நடத்தப்படுகிறது.
- இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி ரேக்ளா போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ரேக்ளா போட்டி
நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி குமாரபாளையம் கற்பக விநாயகர் ரேக்ளா பந்தய குழு, பவானி குதிரை வண்டி சங்கம், கற்பக விநாயகர் ஆட்டோ டிரைவர் சங்கம் சார்பில் குமாரபாளையம் எடப்பாடி சாலையில் ரேக்ளா போட்டி நடைபெற்றது.
போட்டி தொடங்கும் முன் ரேக்ளா வண்டிகள் வரிசையாக நிறுத்தி வைக்க குலுக்கல் முறையில் டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து போட்டியை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன. அதுபோல் வீரர்களும் திரண்டனர். உள்ளூர் குதிரை, புதிய குதிரை, 43 இன்ச் குதிரை, 45 இன்ச் குதிரை, பெரிய குதிரை என பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவுக்கும் குறிப்பிட்ட கி.மீட்டர் தூரம் எல்லை அமைக்கப்பட்டது.
உற்சாகம்
ரேக்ளா வண்டியில் செல்லும் ஜாக்கிகள் குறிப்பிட்ட எல்லை பகுதிக்கு சென்று கொடியை வாங்கிக்கொண்டு திரும்பி வரவேண்டும் என்பது நிபந்தனை. அதன்படி ஒவ்வொரு வீரர்களும் சென்று கொடியை பெற்றுக் கொண்டு திரும்பி வந்தனர். குதிரைகள் எல்லையை தொடுவதற்காக சீறி பாய்ந்தன. ேபாட்டியை காண சுற்றுவட்டார பகு தியை சேர்ந்த பொதுமக்கள் சாலையோரம் திரண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னர். மேலும் இளைஞர்கள் திரண்டு ஆரவாரம் எழுப்பி உற்சாகபடுத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன் ஆகியோர் ரொக்க பரிசுகள் மற்றும் கேடயங்கள், கோப்பைகள் பரிசாக வழங்கினர். நிகழ்ச்சியில் நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்ரமணி, நகராட்சி கவுன்சிலர் பழனிசாமி, நிகழ்ச்சி அமைப்பாளர் சிங்காரவேல் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.






