என் மலர்
நீங்கள் தேடியது "namakkal district: கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. It has been raining for the past few days."
நாமக்கல் கலெக்டர் அலுவலகம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மழை
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.இதில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மழை கொட்டியது.மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் (மில்லி மீட்டரில்) வருமாறு : -
எருமபட்டி-12, குமாரபாளையம்-3.8, மங்களபுரம்-13, மோகனூர்-19, நாமக்கல்-36, பரமத்திவேலூர்-26, புதுச்சத்திரம்-3.30, ராசிபுரம்-14, சேந்தமங்கலம்-5, திருச்செங்கோடு-27, கலெக்டர் அலுவலகம்-69, கொல்லிமலை செம்மேடு-21 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 249.1 மில்லி மீட்டர் மழை பதிவானது.






