என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "namakkal district: விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையின் கருத்து கண்காட்சி Agriculture department feedback exhibition for farmers"

    • வேளாண்மை துணை இயக்குநர் (பொறுப்பு) கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளை வரவேற்று பயிற்சி அளித்தார்.
    • விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

    நாமக்கல்

    நாமக்கல் அருகே உள்ள ஆவல்நாய்க்கன்பட்டி கிராமத்தில் உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் "கிராம அடிப்படை பயிற்சி" நடை பெற்றது. நாமக்கல் வேளாண்மை உதவி இயக்கு நர் சித்ரா தலைமையில் பயிற்சி நடந்தது. இதில் நாமக்கல் வேளாண்மை துணை இயக்குநர் (பொறுப்பு) கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளை வரவேற்று பயிற்சி அளித்தார்.

    வேளாண்மை அலுவலர், மோகன், துறை சார்ந்த மானிய திட்டங்கள், விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கி யத்துவம் குறித்தும் மண்பரி சோதனை நிலைய வேளாண்மை அலுவலர், தரணியா, மண்மாதிரி, நீர் மாதிரி, மண்பரிசோதனை செய்வதன் நன்மைகள், நுண்ணூட்டசத்து, பேரூட்ட சத்து குறைபாடு அதனை நிவர்த்தி செய்யும் முறை குறித்தும் பயிற்சியளித்தனர்.

    பயிற்சியில் நாமக்கல் வட்டார வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர், சாந்தி, கால்நடை உதவி மருத்துவர், கவிதா, வனஅலுவலர் நித்யா, பட்டுவளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் சாந்தி, தோட்டக்கலை உதவி தோட்டக்கலை அலுவலர், கோவிந்தராஜன், மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் உதவி வேளாண்மை அலுவலர் மலர்கொடி ஆகியோர் தங்களது துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

    மேலும் வேளாண்மை பயிற்சியின் ஒரு பகுதியாக வருகை புரிந்த விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையின் கருத்து கண்காட்சி, மற்றும் புதிய தொழில்நுட்ப செய்தி துண்டறிக்கைகள் அமைத்தும் வழங்கியும் விளக்கமளித்தனர்.

    அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் மற்றும் உதவி வேளாண்மை அலு வலர் பெரியசாமி ஆகியோர் அட்மா திட்ட பணிகள் குறித்தும் அதன் செயல்பாடுகள், உழவன் செயலின் பதிவிறக்கம் அதன் பயன்கள், பிரதமரின் கவுரவ நிதி தொகை பற்றி யும், அதற்கு புதுப்பித்தல், அங்கக வேளாண்மை மற்றும் நுண்ணீர் பாசனம் பதிவு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்க மளித்து பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    பயிற்சியின் இறுதியில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தனலட்சுமி நன்றி கூறினார்.

    ×