என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "namakkal district: மின்கட்டண உயர்வை ரத்து வேண்டும் Electricity tariff hike should be cancelled"

    • வேலை நிறுத்த போராட்டத்தால் 3,200 தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
    • சுமார் 1 லட்சம் பேர் வேலை இழந்தனர்.

    நாமக்கல்,

    தமிழகத்தில் தொழில் நிறு வனங்களுக்கு உயர்த்தப்பட் டுள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். பீக் ஹவர் மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, நேற்று நாமக்கல் மாவட்டத்தில், சிறு, குறு தொழிற் சாலைகள், தொழில் நிறுவனங்கள் கடையடைப்பு போராட் டத்தில் ஈடுபட்டது.

    நாமக்கல் லாரி பாடி பில்டர்கள் சங்கம், ஆல் மோட்டார் ஒர்க் ஷாப் ஓனர்ஸ் அசோசி யேசன், கண்ணாடி கடை அசோசி யேசன், சேகோ பேக்டரி உரிமையாளர் கள் சங்கம், தேங்காய் நார் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டன.இதனால் மாவட்டத்தில், சிறு, குறு தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவ னங்கள் உள்ளிட்டவை உற்பத்தியை நிறுத்தி மூடப் பட்டிருந்தது.

    இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்க தலைவர் இளங்கோ கூறியதாவது:-நாமக்கல் மாவடடத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், 2 ஆயிரத் துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்சாலைகளும் மற் றும் பாடி பில்டிங் பட்ட றைகள், சேகோ பேக்ட ரிகள் உட்பட மொத்தம் 3,200 தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் மாவட்டம் முழுவதுமாக சுமார் 1 லட்சம் பேர் வேலை இழந்தனர். மேலும் 2 கோடி அளவுக்கு தொழில் உற்பத்தி முடங்கியது.

    மின்கட்டணம் அதி கப்படியாக உயர்த்தப்பட்டு உள்ளதால், தொழிற் சாலை களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் கட்ட ணத்தை அரசு குறைக்கும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப் படும்.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது நாமக்கல் வட்ட பாடி பில்டர் சங்க தலைவர் தங்கவேல், தேங்காய் நார் உற்பத்தியா ளர்கள் சங்க செயலாளர் தசரதன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்,

    ×